நவ., 13ல் இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சி தொடக்கம்! பொதுமக்களுக்கு அழைப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லி பாரத் மண்டபத்தில் 45வது 'இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சி நவம்பர் 13ம் தேதி தொடங்கி நவம்பர் 27 ம் தேதி வரை நடைபெற உள்ளது. "விகாஸ் அவுர் விராசத்" (வளர்ச்சி மற்றும் கலாசாரம்) என்ற கருப்பொருளில் நடக்கும் இந்த கண்காட்சியில் 3,500க்கும் அதிகமானவர்கள் தங்களின் தயாரிப்புகளை காட்சிப்படுத்த உள்ளனர்.

iitf-2026-fair-to-be-held-from-november13-to-27-in-delhi-and-showcase-vikas-aur-virasat

இந்திய வர்த்தக மேம்பாட்டு அமைப்பால் ஒவ்வொரு ஆண்டும் 'இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சி' நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் 45வது கண்காட்சி 'விகாஸ் அவுர் விராசத்' என் 'தீம்' அடிப்படையில் நடைபெற உள்ளது.

நவம்பர் 13ம் தேதி தொடங்கும் இந்த கண்காட்சி நவம்பர் 27 ம் தேதி வரை நடைபெற உள்ளது. நவம்பர் 13ம் தேதி தொடக்க நிகழ்ச்சி நடைபெறும். அதன்பிறகு நவம்பர் 14 முதல் நவம்பர் 18 வரை வர்த்தகம், வணிகத்தை சார்ந்த நிபுணர்கள் கண்காட்சியை பார்வையிட உள்ளனர். அதன்பிறகு நவம்பர் 19 முதல் பொதுமக்கள் கண்காட்சியில் பங்கேற்கலாம்.

பல்வேறு தொழில்நுட்பம், தொழில் மற்றும் தொழில்முனைவு உள்ளிட்டவற்றையும், கைவினை கலைஞர்களின் திறமைகளையும் பொதுமக்கள் அறியும் வகையில் இந்த கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியில் மொத்தம் 3,500க்கும் அதிகமானவர்கள் தங்களின் தயாரிப்புகளை காட்சிப்படுத்த உள்ளனர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்படி பாரம்பரிய ஜவுளிகள், கைவினை பொருட்கள், நுகர்வோருக்கு தேவையான பிற பொருட்கள், வளர்ந்து வரும் தொிழில்நுட்பங்கள் வரை பல்வேறு வகையான பொருட்களும், அதன் தயாரிப்பு முறைகளையும் ஒவ்வொருவரும் அறிந்து கொள்ளலாம்.இது பொதுமக்கள் மட்டுமின்றி கண்காட்சியில் தங்களின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தும் மக்களுக்கு மக்கள் எதை விரும்புகிறார்கள் என்பதை அறிந்து அதுதொடர்பாக எதிர்காலத்தில் செயல்படுவதற்கான வாய்ப்பு கிடைக்கும்.

இந்த முறை பொதுமக்கள் பல்வேறு தரப்பட்ட உணவுகளை சுவைத்து மகிழவும் பொழுதுபோக்கில் நேரம் செலவிடவும் இந்த கண்காட்சியில் வாய்ப்பு வழங்கப்படுகிறது.அதன்படி கலாசார இசை நிகழ்ச்சிகள், குழந்தைகளுக்கான விளையாட்டு பகுதிகள் ஏற்படுத்தப்பட உள்ளது. அதேபோல் பல்வேறு உணவுகள், பானங்கள் கிடைக்கும் வகையில் உணவு மையங்கள், ஓய்வு அறைகள் உள்ளிட்டவையும் வழங்கப்பட உள்ளது.

இந்த கண்காட்சி அனைத்து மாநிலங்கள், மத்திய அமைச்சகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், புத்தொழில் நிறுவனங்கள், கைவினை கலைஞர்கள் உள்ளிட்டவர்களை சர்வதேச கண்காட்சி பங்கேற்பார்களுடன் ஒன்றிணைக்க உள்ளது.

இந்த கண்காட்சியில் பங்கேற்பதன் மூலம் நாடு முழுவதும் பயணிக்காமல் ஒரே இடத்தில் நாட்டின் பன்முகத்தன்மையை அறிந்து கொள்ள வாய்ப்பு உள்ளது. ஏனென்றால் இந்த கண்காட்சியில் பீகார், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகியவை ஒன்றாக இணைந்து இந்த கண்காட்சியில் பங்கேற்க உள்ளது. அதேபோல் அசாம், டெல்லி, ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களை சேர்ந்தவர்களும் இந்த கண்காட்சியில் ஸ்டால் அமைக்க உள்ளனர்.

இந்த கண்காட்சிக்கான தீம் என்பது "விகாஸ் அவுர் விராசத்" என்பதாகும். இதன் நோக்கம் நம் நாட்டின் பாரம்பரிய திறன்களும், நவீன தொழில்முறையும் எவ்வாறு ஒன்றாக வளர முடியும் என்பதையும் இந்தக் காட்சிகள் பிரதிபலிக்கும்.

கைவினை கலைஞர்கள், நெசவாளர்கள், பெண் தொழில்முனைவோர் மற்றும் சிறு வணிகங்களுக்கு, இந்தக் கண்காட்சி புதிய வாடிக்கையாளர்களை அறிமுகப்படுத்துவதோடு, தயாரிப்புகளுக்குப் பின்னால் உள்ள மக்களையும், கதைகளையும் பார்வையாளர்களுக்கு எடுத்து சொல்லும் வகையில் அமைய உள்து.

'Hall of Inspiration' என்று தனி மண்டபம் கண்காட்சியில் அமைய உள்ளது. இதில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தங்களின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி சிறப்பு தள்ளுபடியில் விற்பனை செய்ய உள்ளது. இந்த மண்டபம்நவீன தொழில்நுட்பம், ரோபாட்டிக்ஸ் மற்றும் இயந்திர வழி கற்றல், விண்வெளித் தொழில்நுட்பம், பாதுகாப்பு மற்றும் iDEX, விமானப் போக்குவரத்து உள்ளிட்ட துறைகளில் கவனம் செலுத்தும் வகையில் இருக்கும். கூடுதல் தகவல்களை www.itpo.gov.in/iitf என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+