Chicken Kola Urundai: கமகமக்கும் சிக்கன் கோலா உருண்டை.. சும்மாவே சாப்பிடலாம்.. டேஸ்ட் அள்ளும்
Chicken Kola Urundai: சிக்கனில் பல வெரைட்டிகள் உள்ளன. சிக்கன் என்றாலே பிடிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். குழந்தைகள் பெரும்பாலும் சிக்கனை தான் விரும்புவார்கள். எப்போதும், சிக்கன் குழம்பு, சிக்கன் வறுவல் என்று சமைத்து போரடித்துவிட்டதா. அப்போது, இந்த சிக்கன் கோலா உருண்டையை சமைத்து பாருங்க.. வீட்டுல பாராட்டு மழை கன்ஃபார்ம்.

தேவையான பொருட்கள்
சிக்கன் எலும்பு நீக்கியது - 1/2 கிலோ
சின்ன வெங்காயம் - 20
பச்சை மிளகாய் - 2
பூண்டு பல் - 15
இஞ்சி - சிறிதளவு
சோம்பு - 1 டேபிள் ஸ்பூன்
மிளகு - 2 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 2 டேபிள் ஸ்பூன்
கசகசா - 1 டேபிள் ஸ்பூன்
பொட்டுக்கடலை
தேங்காய் துருவல் - 1 டேபிள் ஸ்பூன்
பட்டை - 1
லவங்கம் - 2
ஏலக்காய் - 2
முட்டை - 1
உப்பு
சமையல் எண்ணெய்
கொத்தமல்லி இலை
சிக்கன் கோலா உருண்டை செய்யும் முறை
1. சிக்கன், சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு பல், இஞ்சி, சோம்பு, மிளகு, சீரகம், கசகசா, பொட்டுக்கடலை, தேங்காய் துருவல், பட்டை, லவங்கம்,
ஏலக்காய் அனைத்தையும் மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
2. பின்னர், மிக்ஸி ஜாரில் சிக்கன் துண்டுகளை சேர்த்து கொரகொரவென கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்
3. அதில், தேவையான அளவு உப்பு, முட்டை, நறுக்கிய கொத்தமல்லி இலையை போட்டு கலந்து கொள்ளவும்.
4. அந்தக் கலவையை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி குளிர்சாதனப் பெட்டியில் அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
5. அடுப்பில் கடாய் வைத்து பொரிப்பதற்கு அளவாக சமையல் எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும்.
6. எண்ணெய் காய்ந்ததும் சிக்கன் உருண்டைகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். சூடான கமகமக்கும் சிக்கன் கோலா உருண்டை தயார்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications