Kollu Thuvaiyal: வயிறு தட்டையாக கொள்ளு பயிறு! துவையல் செய்வது எப்படி? சூடான சாதத்தில்... !
சென்னை: "இளைத்தவனுக்கு எள்ளு கொழுத்தவனுக்கு கொள்ளு" என்று ஊரில் ஒரு சொலவடை உள்ளது. அந்த வகையில் உடலில் உள்ள கொழுப்பு குறைய கொள்ளு தானியத்தை சேர்த்துக் கொள்வது நல்லது, குறைந்தது வாரத்திற்கு ஒரு நாளாவது இதை சேர்த்துக் கொள்ளலாம்.
கொள்ளு தானியத்தை வைத்து பொடி, குருமா குழம்பு, ரசம், துவையல் உள்ளிட்டவைகளை செய்யலாம். அந்த வகையில் கொள்ளு பருப்பை வைத்து ஒரு சூப்பரான துவையல் ரெசிபியை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
கொள்ளு- 2 டேபிள் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு- 2 டேபிள் ஸ்பூன்
பூண்டு - 10 முதல் 12 பற்கள்
காய்ந்த மிளகாய் - 4
புளி, உப்பு- சிறிதளவு
எண்ணெய் - வறுக்க தேவையான அளவு
செய்முறை
- ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு அது காய்ந்ததும் கொள்ளு பருப்பை போட்டு வறுக்கவும், அத்துடன் உளுத்தம் பருப்பையும் சிவக்க வருத்துக் கொள்ளவும்
- பின்னர் பூண்டு, காய்ந்த மிளகாய் சேர்த்து வறுக்கவும்
- சிறிதளவு உப்பு, புளி சேர்த்து வதக்கி ஆற வைத்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
இந்த கொள்ளு துவையலை சூடான சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிட்டால் சைட் டிஷ்ஷே வேண்டாம். இட்லி, தோசை, தயிர் சாதத்திற்கு தொட்டுக் கொண்டால் நல்ல காம்பினேஷனாக இருக்கும்.
கொள்ளு உடலில் உள்ள கொழுப்பை வெளியேற்றி உடல் ஆரோக்கியம் பெற வழிவகுக்கும். வெள்ளை உளுந்துவிற்கு பதிலாக கருப்பு உளுந்தையும் பயன்படுத்தலாம்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications