For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விநாயகர் சதுர்தி

By Staff
Google Oneindia Tamil News

கஜானனம் பூக கணாதி சேவிதம்
கபித ஜம்பு பலசார பட்சிதம்
உமாசுதம் சோக வினாச காரணம்
நமாமி விக்னேஷ பாத பங்கஜம்

-விநாயகர் ஸ்லோகம்

Ganeshaஆவணி மாதம் சுக்லபட்சத்தில் (வளர்பிறையில்) வரும் சதுர்த்தி விநாயகர் சதுர்த்தி என்று கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டு (விஷு ஆண்டு) விநாயகர் சதுர்த்தி ஆவணி மாதம் 6ம் தேதி (22.08.2001) புதன்கிழமை கொண்டாடப்படுகிறது.

விநாயகப் பெருமானுக்கு கஜானன கணபதி, தூமகேது, வல்லப கணபதி, ஐங்கரன், யானை முகத்தோன் என்ற பெயர்களும் உண்டு.

விநாயகருக்கு ப்ரும்மணஸ்பதி என்ற பெயரும் உண்டு. ப்ரும்னஸ்பதி என்றால் வேதத்துக்கே தலைவன் என்று பொருள்.

எந்த காரியம் செய்ய வேண்டும் என்றாலும் முதலில் விநாயகரை வணங்கி துவங்க வேண்டும். இவரை வணங்கி துவங்கும் காரியம் அனைத்தும் சித்திக்கும்,அந்த காரியங்களில் தடங்கல் வராமல் இருக்க விநாயகர் துணை புரிவார். இதனால் இவருக்கு முழு முதற் கடவுள் என்ற பெயரும் உண்டு.

Ganeshaவிநாயகர் தனது ஐந்து கரங்களில் பாசம், அங்குசம், ருத்திராட்ச மாலை, தந்தம், மோதகம் ஆகியவை திகழ்கின்றன. இதனால் இவருக்கு ஐங்கரன் என்றபெயர் வழங்கப்படுகிறது.

தென்னாட்டில் பிரம்ச்சாரியாக வணங்கப்படும் விநாயகப் பெருமான் வடநாட்டில் சித்திய. புத்தி என்று இரண்டு மனைவிகளுடன் காட்சியளிக்கிறார்.

முதன் முதலாகத் தோன்றி சித்தி. புத்தி என்ற இரண்டு பெண்களை திருமணம் செய்து கொண்டு மும்மூரத்திகளையும் படைத்து அவர்களுக்கு சதுர்த்தி விரதத்தைஉபதேசித்து அருளியதாக கூறி அவரை வக்ர துண்ட கணபதி என்று கூறி வடநாட்டினர் வழிபடுகின்றனர்.

இவரது நாபி பிரம்மஸ்வரூபமாகவும், முகம் விஷ்ணு அம்சம் பொருந்தியதாகவும், கண்கள் சிவமயமாகவும், இடப்பாகம் சக்தி ஸ்வருபமாகவும்,வலப்பாகம் சூரியனாாகவும் அமைந்த திருவுருவம் விநாயகருடையது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X