வாதாபி கணபதி
துன்பப்படுவோர் துயரை தடுப்போரில் முதன்மை வாய்ந்தவர் விநாயகர். முழு முதற் கடவுளாகிய அவரை தஞ்சமென்று சரணடைந்து விட்டால் மலை போல்வந்த துயரும் பனி போல் நீங்கி விடும்.
ஒரு முறை வாதாபி, இல்வலன் என்ற இரண்டு அசுரர்கள் கடுமையாக தவம் இருந்து பல அரிய வரங்களை பெற்றனர். வரம் பெற்ற பின் ரிஷிகளுக்கும்,சாதுக்களுக்கும் தொல்லை தந்து அவர்கள் செய்யும் யாகம், பூஜை போன்றவற்றிற்கு ஊறு விளைப்பது அசுரர்களின் வழக்கம்.
இவர்களும் அதற்கு விதிவிலக்கானவர்கள் அல்ல. இவர்கள் ரிஷிகளை தந்திரமாக கொல்வார்கள்.
தம்பி இல்வலன் தன் சக்தியால் அண்ணன் வாதாபியை மிருகமாக்குவான். அதை கொன்று, அந்த மாமிசத்தால் யாருக்கும் தெரியாத வகையில் சுவையானஅறுசுவை உணவை சமைப்பான்.
அதை மிகவும் பவ்யமாக ரிஷிகளுக்கும், முனிவர்களுக்கும் படைப்பான். அவர்கள் சாப்பிட்டு முடித்தும், வாதாபி வா என்று அழ்ைபபான் இவ்வலன்.உடனே சாப்பிட்ட ரிஷிகளின் வயிற்றை கிழித்துக் கொண்டு வாதாபி வெளியே வருவான். ரிஷிகள் இறந்து போவார்கள்.
தாங்கள் பெற்ற இந்த அரிய வரத்தின் மூலம் பல முனிவர்களையும் கொன்று வந்தார்கள் இவர்கள்.
தங்கள் சாமர்த்தியத்தை அகத்திய மாமுனிவரிடமும் காட்ட நினைத்தனர் அரக்கர்கள் இருவரும்.
அகத்தியரை அழைத்த விருந்து படைத்தான் இவ்வலன். ஆனால் அகத்தியர் சாப்பிட்டு முடித்தவுடன் வாதாபி ஜீரோணத்பவ(வாதாபி ஜீரணமாகிவிட்டான்)என்று தன் வயிற்றை தடவினார்.
வாதாபி அழிந்து போனதும், இல்வலன் உயிர் பிழைப்பதற்காக கடலுக்கு அடியில் சென்று ஒளிந்து கொண்டான்.
அப்போது விநாயகரை பிரார்தித்தார் அகத்தியர். விநாயகர் அருளிய வரத்தால் கடலையே தன் உள்ளங்கையில் ஏந்தி உறிஞ்ச இவ்வலனும் அகத்தியர்வயிற்றுக்குள் சென்று ஜீரணமானான்.
தனக்கு அருள் புரிந்த விநாயகரை பிரதிஷ்டை செய்து அவருக்கு வாதாபி கணபதி என்றும் பெயர் வைத்தார் அகத்தியர்.












Click it and Unblock the Notifications