• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நோய் தீர்க்கும் வேதங்கள்

By Staff
|

இந்து மதத்தின் அளப்பறிய பொக்கிங்கள் தான் ரிக், யஜூர், சாம, அதர்வன ஆகிய நான்கு வேதங்கள். இவை காலங்களைக் கடந்தவை.

அபரிமிதமான அறிவையும், ஞானத்தையும், மந்திர சக்தியையும் தன்னுள் அடக்கியுள்ள இந்த வேதங்கள் நமது மனதையும், ஆன்மாவையும் சுத்தமாகவும்,ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள உதவுகின்றன.

டென்சனும் அவசரமும் நிறைந்தபோய்விட்டது நமது அன்றாட வாழ்க்கை. இங்கே மன அமைதி என்பது எத்தனை கோடி கொடுத்தாலும்அரிதாகிவிட்டது. இந்த அவசரகதி வாழ்க்கையிலும் நிம்மதியாய் வாழ்ந்திட முடியும் என்கிறார் வேத பண்டிதரான ஸ்ரீதத்வமசி தீக்ஷித்.

வேதத்தைக் கேட்பதன் மூலமே மன அமைதியைத் தேடிட முடியும் என்கிறார். வேகமாக உலகத்தில் வேதம் படிக்கவோ, அந்தசொற்பொழிவுகளிலோ போய் உட்கார யாருக்கு நேரம் இருக்கிறது?.

இதற்கு ஒரு தீர்வு கண்டுள்ளார் தீக்ஷித். வேத மந்திரங்களைக் கொண்ட ஆடியோ சி.டி. கேசட்களை வெளியிட்டு பெரும் சேவை செய்துள்ளார் இந்த வேதபண்டிதர்.

வேதங்களைக் கடைந்து, அதனுள் இருக்கும் அற்புதமான சக்தியை, நம் உடல் நலத்தை குணமாக்க பயன்படுத்தி வருகிறார். இதய நோய்கள், படபடப்பு,கர்ப்பிணிகள் ஆகியோரின் பிரச்சனைகளுக்கு வேத மந்திரங்கள் மூலம் மகத்தான தீர்வுகளைக் கொடுக்கும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளதுஇவரது ஓஜாஸ் பவுன்டேஷன் என்ற வேத மருத்துவ அறக்கட்டளை.

அறக்கட்டளையை உருவாக்கியுள்ள தீக்ஷித் உடன் ஒரு பேட்டி:

வேத ஒலிகளைக் கேட்பதன் மூலமே உடலையும் உள்ளத்தையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும். வேதத்தின் பார்வையில் உடல் நலத்தைப்பார்த்தோமேயானால் இது சாத்தியம் என்பது புரியும்.

வேத மந்திரத்தின் மூலம் நமது உடலையும் மனதையும் கட்டுப்படுத்தி, சாந்தப்படுத்தி, நலப்படுத்த முடியும்.

பாற்கடலைக் கடைந்தபோது அமுதம் கிடைத்தது மாதிரி தான் வேத ஆராய்ச்சிகளின்போது எனக்கு அவற்றின் அற்புதமான மருத்துவ குணங்கள் புரிந்தன.

வேதத்தில் கொட்டிக் கிடக்கும் ஒவ்வொரு மந்திரத்திற்கும் ஒரு அற்புதமான குணம் உள்ளது. உடலை குணப்படுத்துவதற்கு மட்டும் அல்லாது, அதைசீராக வைத்துக் கொள்ளவும், வரும் முன் காப்போம் என்ற வகையிலும், உடலை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் இந்த மந்திரங்களைப்பயன்படுத்தலாம்.

வேதனையில்லாத உடல் ஆரோக்கியத்தைப் பெற எக்கச்சக்கமான வேத மந்திரங்கள் உள்ளன. உடலோடு ஒட்டிக் கொண்டுள்ள ஆன்மாவைஆராய்ந்து, அதன் குறைபாடுகளைத் தீர்த்தால், நிச்சயம் அளப்பறிய பலன்கள் கிடைக்கும்.

மனித உடலின் 3 முக்கிய அம்சங்களான மனம், ஆன்மா மற்றும் உடல் ஆகிய மூன்றும் சரியாக இருந்தால்தான் ஒரு மனிதன் சிறப்பாக செயல்படமுடியும் என்று வேதங்கள் கூறுகின்றன.

இப்போதைய உலகில் டென்ஷன், மன அழுத்தம், பதற்றம் இவற்றை அன்னியப்படுத்தி விட்டு ஒருவரால் செயல்பட முடியாது. எங்கு பார்த்தாலும்வேகம், அவசரம் என்பது வாழ்வில் அவசியமான அம்சங்களாகி விட்டன.

இதன் விளைவு மாரடைப்பு, ரத்த அழுத்தம், மன அழுத்தம், சர்க்கரை வியாதி, அல்சர், தலைவலி, உடல் பருமன், பதற்றம், ஏதாவது ஒரு கெட்டபழக்கத்திற்கு அடிமையாகுதல் போன்றவை.

இப்படி வரும் அவஸ்தைகளிலிருந்து எப்படி மீள்வது?

இந்த உடல் உபாதைகளுக்கு மருத்துவ சிகிச்சையோடு வேத சிகிச்சையையும் எடுத்துக்கொள்ளும்போது குணமாகும் வேகம் அதிகரிப்பதோடு,மறுபடியும் அது நம்மை அண்டாமல் தவிர்க்கவும் முடியும்.

இந்த கோட்பாடுகளின் அடிப்படையில் தற்போது இரண்டு முக்கிய வேத ஒலி சிகிச்சை முறைகளை அறிமுகப்படுத்தியுள்ளோம்.

கர்ப்பிணிப் பெண்களின் பிரச்சனைகளைத் தீர்க்கவும், இதயத்தை நலமாக வைத்திருக்க உதவும் வேத மந்திரங்கள் அடங்கிய இரு சி.டிக்களைவெளியிட்டுள்ளோம்.

Ojas Life Energy for the expectant mother என்ற இந்த சிடி வேத மந்திரங்களைக் கொண்டது. கர்ப்பத்தில்இருக்கும் சிசுவின் மனதுக்குள் வேத சக்தியை ஊடுறுவச் செய்தால், குழந்தையின் ஆன்மா அதி சுத்தகமாகஉருவாவதோடு, அளப்பறியத சக்தியுடன் அந்தக் குழந்தை வளர வழி செய்ய முடியுமாம்.

வயிற்றில் வளரும் குழந்தை மென்மையான, குறிப்பிட்ட சில இசையை கேட்கும்போது, அதன் கற்கும் திறனும்,அதன் குண நலன்களும் மேம்படுகிறது. இந்த மந்திரங்களைக் கேட்கும் தாய்க்கும் புத்துணர்வு கிடைக்கிறது. சிசுநிலையிலிருந்து அதன் ஆறு வயது வரை இந்த சிடி உதவும்.

இதேபோல, இதயம் உள்ள ஒவ்வொரு நபரும் வைத்திருக்க வேண்டிய பொக்கிஷமாக Ojas Life Energy for ahealthy heart என்ற இன்னொரு சிடி மற்றும் கேசட்டை வெளியிட்டிருக்கிறது ஓஜாஸ். இதயம் சம்பந்தமானஅனைத்து நோய்களையும் தவிர்க்க இந்த வேத மந்திரங்கள் உதவும். மன அழுத்தம், ரத்தக் கொதிப்பு, மாரடைப்புஎன சகல விதமான உபாதைகளையும் தவிடு பொடியாக்குகிறது இந்த சி.டி.

மேலும், இதய நோய்களைத் தவிர்ப்பது தொடர்பான டிப்ஸ்கள் அடங்கிய கையேடும் இந்த சிடியுடன் இலவசமாகவழங்கப்படுகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more