For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தேர்தல் பொங்கல்

By Staff
Google Oneindia Tamil News

தைப் பொங்கல் வந்து விட்டது. மார்ச் மாதவாக்கில் தேர்தல் வரவிருக்கிறது.அரசியல்வாதிகள் படைக்கப் போகும் "தேர்தல் பொங்கல் எப்படி இருக்கும் என்பதைகற்பனைக் குதிரையைத் தட்டி விட்டுப் பார்ப்போமா?

முதலில் போயஸ் கார்டன்.

Jeyalalithaஒரு பக்கம் பொங்கல் வைக்க பானை, பூஜைப் பொருட்கள் தயாராகிக்கொண்டிருந்தது. மறுபக்கம் பட்டுச் சேலைகள் சரசரக்க பெண்கள் நடமாட்டம்.அப்போது உள்ளிருந்து ஒரு குரல், "என்ன பொங்கலுக்கு எல்லாம் ரெடியா...?மாவட்டச் செயலர்கள் ஒருத்தர விடமா கூப்பிடுங்க., நம்ம பொங்கல் சிறப்பாஅமையனும். சூரியன் உதிக்கறதுக்குள்ள பொங்கல் வைக்கனும்.

அந்த "ஐயா வைக் கூப்பிடுங்க. ரம்ஜான் நோன்புக்கு ஒன்னா கஞ்சி குடிச்சப்போ, என்காதில என்னவோ சொன்னாரு. கூட்டாப் பொங்கல் வைக்கலாமானு கேட்டமாதிரிஇருந்துச்சு. அவருகிட்டேயும் ஒரு வார்த்த கேளுங்க.

மக்கள் நம்மள மன்னிச்சாட்டுங்கான்னு சொல்லு. தயங்காம சேர்ந்தா, "கூட்டுப்பொங்கல் தித்திப்பா இருக்கும். காங்கிரசும் கைகொடுக்கச் சொல்லு. வேணும்னாசூட்கேஸ் அனுப்பவானு கேட்டுட்டு வா என அம்மாவின் குரல் பலமாக ஒலித்தது.

அப்படியே அங்கிருந்து ஜகா வாங்கி சத்யமூர்த்தி பவன் பக்கம் வந்தால், அங்கே மூப்பனார்தனியே அமர்ந்து சீவலை வாயில் அடக்கிக் கொண்டிருந்தார். நம்மைப் பார்த்ததும்,என்ன இந்தப் பக்கம்? என்று கேட்டார். பொங்கல் ஏற்பாடுகள் எப்படி என்று நாம்இழுக்க, அதுபத்தி செயற்குழுதான் முடிவு செய்யனும் என்றார்.

தேர்தல் பொங்கல் பத்தி முடிவே செய்யலையா என்றோம் விடாமல். அது பத்திஒன்னும் தெரியலையே என்றார். நாமும் சளைக்காமல், தேர்தல் பொங்கலுக்கு இப்படிசும்மா இருந்தா எப்படி? என்று கேட்க, காங்கிரஸ் எந்தப் பக்கம் என நம்மிடம்கேட்டார் மூப்பனார். அவங்களும் யோசிக்கிறாங்க என்றதும், அப்போ காமராஜ்ஆட்சி அம்போ தானா? என்றார்.

பதிலுக்கு, அம்மா இருக்காங்களே எனச் சொல்ல, சரி, அவங்களே ஆட்சிஅமைக்கட்டும். ஆதரவுக் கையோடு சைக்கிளையும் கொடுப்போம். ஏறி, சொகுசாப்போகட்டும் என்றார். அப்படியே கழன்று கொண்டோம்.

Karunanidhiஅடுத்து கோபாலபுரம். காலையிலேயே எழுந்து விட்ட அவர் கையில் நோட்டுடன்கடிதம் எழுதிக் கொண்டிருந்தார். உடன் பிறப்பே...! சூரியன் உதயமாகும் நேரம். நமதுகோட்டையைக் காக்க புறப்படுவாய். விழித் தெழ வேண்டிய நேரத்தில் இன்னும்உறங்கிக் கொண்டிருந்தால் அம்மையார் பதிலுக்கு கவிதைக்கு பதிலாக கடிதமே எழுதிவிடுவார்.

இப்போதே எரியாத தெரு விளக்குகளை எரிய வையுங்கள். ஓடாத பஸ்களை ஓடவிடுங்கள். மக்களுக்கு இலவசமாக வேஷ்டி சட்டையை வழங்குங்கள். யாருக்கும்இல்லையென்று சொல்ல வேண்டாம். கஜானா காலியானாலும் பரவாயில்லை. அடுத்தமுறை நிரப்பிக் கொள்ளலாம்.

கூட்டணியில் எத்தனை இடம் கேட்கப் போகிறார்களோ தெரியவில்லை. பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்துக் கொண்டது, தப்பாத் தெரியுது. ஆனா தமிழ்நாட்டில் நம்கூட்டணியில், ராமதாஸ், வாழப்பாடி பிரச்னை எப்போது ஓயுமோ தெரியவில்லை.மறுபடியும் ப்பனாரைப் பிடிக்கலாம் என்றால், நெருங்கி நெருங்கி வந்து விலகிப்போறாரே, என்ன செய்ய?

சரி போகட்டும். அடுத்த முதல்வராக தளபதி ஸ்டாலினைத் தயார்படுத்த வேண்டும்.அதற்காக நீ இரவு, பகலாக உழைக்கத் தயாராக இருக்க வேண்டும். இது இந்தஅண்ணனின் அன்புக் கட்டளை.

கூட்டணிக் கட்சிகளின் வாலை ஒட்ட நறுக்க, தேர்தலில் கொஞ்சம் கொஞ்சம் இடம்கொடுத்தால் போதும். நம்மை விட்டுப் போய் அந்த அம்மையாருடன் ஒட்டிக் கொள்ளமாட்டார்கள்.

பாட்டாளி மக்கள் கட்சி என்ன சொன்னாலும் கேட்காதே. காதைத் திருப்பிக் கொள்.அவர்கள் அப்படித்தான என முடித்தார் கருணாநிதி.

Ramdossஅடுத்து ராமதாஸ்.என்ன இருந்தாலும் புதுவையில பொங்கல் வைக்கப் போறது நாங்கதான். இந்த வருசம் அங்க பொங்கல் வைப்போம். அடுத்த 5 ஆண்டுக்குள்தமிழ்நாட்டில பொங்கல் வைப்போம், ஆனா ராமமூர்த்தி இருந்தா அங்கே போகமாட்டோம்.

எங்களுக்கு எத்தனை எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள். ராமமூர்த்திக்குப் பயந்து தேசியஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலக மாட்டோம். விலகினால் எங்களுக்கு மந்திரிபதவி போயிடுமே என்றார் டாக்டர்.

அப்படியே தி.நகர் பக்கம் வந்தபோது, இனிய தமிழ் மக்களுக்கு எங்கள் பொங்கல்வாழ்த்துக்கள். ஆங்கிலப் புத்தாண்டைக் கொண்டாடும் இந்த நன்னாளில், தமிழர்திருநாள், வள்ளுவராண்டு என தமிழ் மொழியைக் காக்க நமது பொங்கலைப்படைப்போம்.

கருணாநதி என்ன கொடுக்கிறாரோ ஏற்றுக் கொள்ளலாம். அது தான் இப்போதைக்குநமக்கு நல்லது. மத்தியில் சுய ஆட்சி, மாநிலத்தில் கூட்டாட்சி என்பதே நமது லட்சியம்என முழங்கிக் கொண்டிருந்தார் பா.ஜ.க. பொதுச் செயலர் இல. கணேசன்.

கேட்டுக் கொண்டு, திரும்பி வந்தபோது, ஒருவர் நம்மை நிறுத்தினார். உங்களுக்காகஒரு ரகசியத்தை இப்போ சொல்றேன். பொங்கல் தமிழர் திருநாளே கிடையாது,தெரியுமா? என்றார்.

Subramania Swamyஅதிர்ச்சியுடன் அவரைப் பார்த்தோம். அவரே தொடர்ந்தார், ரொம்ப காலமா அதுகொண்டாடப்படவேயில்லை. நான்தான் கோர்ட்டில் கேஸ் போட்டு, தமிழர்களுக்காகஇந்த திருநாளைக் கொண்டு வந்தேன். ஆனால் என்னைத் தமிழர்கள் மதுரையில்தோற்கடித்து விட்டார்கள். இதை எதிர்த்து, ஜப்பானில் கேஸ் போடப் போறேன்என்றார்.

மிரண்டு போய் அவர் யார் என்று பார்த்தபோது, சுப்ரமணியசுவாமி. அப்புறமும்அங்கே நாங்கள் நின்றிருப்போம் என்றா நினைக்கிறீர்கள்?

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X