For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வாழ்க தீபாவளி, பொங்கலும் வாழ்க!

By Staff
Google Oneindia Tamil News

மத மாற்றத்திற்கு என்ன காரணம் .. ?

மதமாற்றங்கள் ஏற்படுவதற்கு வறுமைதான் காரணம் என்று கூறுகிறார்கள். அது உண்மையே கிடையாது. மதப்பிடிப்பின்மைதான்மதமாற்றத்திற்கு முக்கியக் காரணம்.

Ramagopalanவெள்ளிக்கிழமைகளில் பள்ளிவாசல்களுக்கு முன்பு நூற்றுக்கணக்கான பிச்சைக்காரர்கள் அமர்ந்திருப்பார்கள். தொழுகை முடிந்துதிருப்புபவர்கள் அவர்களுக்கு பணம் தருவார்கள். இந்தப் பிச்சைகாரக்களிடம் நல்ல உடை இருக்காது. நல்ல சாப்பாடு சாப்பிட்டுபல நாட்கள் ஆகியிருக்கும். ஆனால் அவர்களில் ஒருவரையாவது உங்களால் மதம் மாற்றம முடியுமா? முடியாது, காரணம்அவர்களிடம் உள்ள மதப்பிடிப்பு.

அதுபோல இந்துக்களிடம் மதப்பற்றை, மதப்பிடிப்புணர்வை உருவாக்க நாம் தவறி விட்டோம். அதற்கு என்னைப் போன்றநபர்கள்தான் பொறுப்பேற்க வேண்டும்.

தாழ்த்தப்பட்ட சதாயத்தினர் மதம் மாறுகிறார்கள் என்றால் அவர்களின் வறுமை காரணமாக அல்ல, சமுதாயத்தால் அவர்கள்கவனிக்கப்படுவதில்லை. எனவேதான் தங்களைக் கவனிக்கும் மதத்திற்கு அவர்கள் செல்கிறார்கள்.

தாழ்த்தப்பட்டவர்களும் இந்துக்கள்தான். இந்து மதத்தின் நலிந்த பிரிவில் இருப்பவர்கள் என்று அவர்களை கருத வேண்டும். ஒருதாய்க்கு ஐந்து குழந்தைகள் இருக்கிறது. அதில் ஒரு குழந்தை நோஞ்சானாக இருக்கிறது என்றால் தாய் அதைக் கவனிக்காமல்விட்டு விட முடியுமா?

அதுபோலத்தான், இந்து மதம் என்ற தாய்க்கு பல ஜாதிக் குழந்தைகள். அதில் தாழ்த்தப்பட்ட பிரிவினர் என்ற குழந்தைநோஞ்சானாக இருக்கும்போது அதை கவனிக்காமல் விட முடியுமா? எனவே இந்த மதமாற்றம் என்ற பிரச்சினையைதாயுள்ளத்தோடு அணுகி சீர் செய்ய வேண்டும்.

இதுபோன்ற சமுதாயப் பிரச்சினைகளைத் தீர்க்க ஆன்மீக வாதிகளால்தான் முடியும். சகோதர உணர்வுடன் அணுக வேண்டியபிரச்சினை இது. அரசியல் மூலம் இதற்குத் தீர்வு காண முடியாது.

அதேபோல, ஜாதிகள் இருப்பதில் தவறில்லை. அவை நமது அடையாளங்கள். தஞ்சாவூர், ராமநிாதபுரம் மாவட்டங்களுக்குப்போனால் அங்குள்ளவர்கள் பத்திரங்களைப் பதிவு செய்யப் போனால் தங்களது பெயர்களைக் கூறும்போது, ராமசாமித் தேவர்மகன் அப்துல் இப்ராகிம் என்றுதான் கூறுவார். எனவே, ஜாதி இல்லாமல் இருக்க கூடாது. அது வேண்டும்.

ஜாதிகளால் பல நன்மைகள் உண்டு. ஈரோடு, கோவை பக்கம் போனால் கொங்கு வேளாள கவுண்டர்கள் அதிகம். திருப்பூரில்பனியன் தொழிலில் ஈடுபடுவோரில் 90 சதவீதம் பேர் இவர்கள்தான். இவர்களுக்குள் ஏதாவது பிரச்சினை என்றால்ஒருவருக்கொருவர் நிச்சயம் உதவுவார்கள். கஷ்டம் வந்தால் கைகொடுப்பார்கள்.

சிவகாசியில் பட்டாசுத் தயாரிப்பு, அச்சகத் தொழில் ஆகியவை நாடார் சதாயத்தினரின் கையில் உள்ளது. அவர்களுக்குள்யாராவது கஷ்டப்பட்டால் கை கொடுத்து உதவுவார்கள். ஏனென்றால் ஒருவருக்கொருவர் சொந்தக்காரராக இருப்பார். எனவேஜாதிகளால் சமூகப் பாதுகாப்பு உள்ளது.

ஜாதிகளால் கெடுதல் ஏற்படுகிறது என்றால், ஜாதிப் பற்று, வெறியாக மாறும்போதுதான். அதுதான் தவறு. பற்று, பற்றாகவே இருக்கவேண்டும். வெறியாக மாறினால்தான் பிரச்சினை. இரண்டு ஜாதிக்காரர்கள் காதலித்துத் திருமணம் செய்கிறார்கள். அப்படித்திருமணம் செய்தவுடனேயே இரு ஜாதிகளுக்கும் உரியவர்களாகி விடுகிறார்கள். எனவே அவர்கள் ஜாதிகளற்றவர்களாகிவிடுகிறார்கள்.

அரசாங்கம் ஜாதிகளைக் கேட்பது தவறு என்றால், நீங்கள் ஜாதியைக் குறிப்பிட மாட்டேன் என்று கூறுங்கள், இப்படி மக்கள்அனைவரும் கூறத் தொடங்கி விட்டால், பிறகு அரசாங்கம் ஏன் கேட்கிறது? ஜாதிகளை தலில் மக்களாகிய நாம்தான்புறக்கணிக்க வேண்டும், அப்போதுதான் அரசும் அதனைப் பின்பற்றும்.

மத்திய பா.ஜ.க. அரசு எப்படி ?

மத்தியில் இருப்பது பாரதீய ஜனதா அரசே கிடையாது. இது கூட்டணி அரசு. பல கட்சிகளின் கொள்கைகள், வழிமுறைகளுக்கேற்றபொது கருத்தை உருவாக்கிக் கொண்டு அதன்படி இந்த அரசு செயல்பட்டுக் கொண்டுள்ளது.

பாரதீய ஜனதாவின் கொள்கைகளை இந்த அரசு பிரதிபலிக்கவில்லை. தனித்து ஆட்சியில் இருந்தால் மட்டுமே அது பாரதீய ஜனதாஅரசாக இருக்க முடியும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X