Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கடக ராசிக்காரரின் ராஜ யோகமும், அதிர்ஷ்ட சான்ஸும்! நீங்கள் சூப்பர் கேரக்டர்.. கடகம் ராசியின் மகத்துவம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சந்திரனின் ஆதிக்கத்தில் பிறந்து, கடலை போன்ற ஆழமான உணர்வுகளையும் நண்டை போன்ற உறுதியான குணத்தையும் கொண்டவர்கள் கடக ராசிக்காரர்கள்.. மாற்றங்களுக்கு மத்தியில் மாறாத லட்சியத்தோடு பயணிக்கும் இவர்களின் அசாத்தியமான குணநலன்களையும், வாழ்வை மாற்றும் அந்த அதிர்ஷ்ட ரகசியங்களையும் இங்கே சுருக்கமாக பார்ப்போம்...!!!

9 கோள்களில் ராணி என்று அழைக்கப்படும் சந்திரனை ராசி அதிபதியாக கொண்டவர்கள் கடக ராசிக்காரர்கள்.. வளர்பிறை, தேய்பிறை சந்திரனைப் போலவே இவர்களது குணாதிசயங்களும் அடிக்கடி மாறிவிடுமாம்..

Kadagam Rasi Cancer Zodiac

உயர்ந்த லட்சியங்கள்

நண்டு சின்னத்தை பெற்ற இவர்கள், நண்டினை போலவே தங்கள் எல்லைகளை ஆக்ரோஷமாக பாதுகாப்பார்கள்.. யாராவது இவர்களது தனிப்பட்ட எல்லைக்குள் நுழைய முயன்றால், அவர்களைத் தாக்கவும் தயங்க மாட்டார்கள்.. அதேசமயம், உயர்ந்த லட்சியங்களை கொண்ட இவர்கள், அனைவரிடமும் தோழமையுடன் பழகும் மென்மையான சுபாவம் கொண்டவர்கள்..

கடக ராசியினரின் மிகப்பெரிய பலமே அவர்களின் துணிச்சலும் தன்னம்பிக்கையும்தான்.. அறிவாளிகளாகவும், சுறுசுறுப்பானவர்களாகவும் விளங்கும் இவர்கள், காமெடியாக பேசி மற்றவர்களை கவரும் திறன் கொண்டவர்கள். மகிழ்ச்சியாக வாழ்வதில் அதிக ஆர்வம் காட்டுவார்கள்..

கடகம் ராசிக்காரர்கள்

சிரிப்பு அல்லது அழுகை எதுவானாலும், சத்தம் போடாமல் அமைதியாகவே வெளிப்படுத்துவார்கள்.. அதேநேரம், இவர்கள் உடல் மற்றும் மனரீதியாக எளிதில் காயப்படக்கூடியவர்கள். சின்ன சின்ன விஷயங்களுக்கும் ரொம்ப கோபப்படுவார்கள்.. ஆனால் இவர்களது கோபம் அமைதியாக இருக்கும், ஒருமுறை கோபம் வந்துவிட்டால், சம்பந்தப்பட்டவர்களிடம் பல வருடங்கள் கூட பேசாமல் இருக்கும் பிடிவாதம் கொண்டவர்கள்..

மற்றவர்களிடம் உள்ள குறைகளை பெரிதுபடுத்தாமல் பழகும் இவர்களது இளகிய குணம் சில நேரங்களில் மற்றவர்களால் தவறாக பயன்படுத்தப்படலாம். பிறருக்கு உதவி செய்வதில் மகிழ்ச்சி காணும் இவர்கள், தங்களது கனிவான குணத்தை யாராவது மிஸ்யூஸ் செய்தால், உடனடியாக கடினமானவர்களாக மாறிவிடுவார்கள்..

ஞாபக சக்தி அதிகம்

ஜல ராசி என்பதால் இவர்களுக்கு தண்ணீர் நிறைந்த பகுதிகளான கடற்கரை மற்றும் நதிக்கரையோரம் வசிக்கப் பிடிக்கும்.. அபாரமான ஞாபக சக்தி கொண்ட இவர்கள், பல வருடங்களுக்கு முன்பு நடந்த நிகழ்வுகளை கூட துல்லியமாக நினைவில் வைத்திருப்பார்கள்.. இதனால் இவர்கள் சிறந்த கவிஞர்களாகவும், எழுத்தாளர்களாகவும், அரசியல்வாதிகளாகவும், ஓட்டல் அல்லது புத்தக வியாபாரிகளாகவும் ஜொலிப்பார்கள்..

குடும்பத்தின் மீது தீராத பாசம் கொண்ட இவர்கள், குறிப்பாக தாய்ப்பாசத்திற்கு கட்டுப்பட்டவர்கள்.. தனது உடன்பிறப்புகளை கண்ணில் வைத்து பாதுகாப்பார்கள். இவர்களுக்கு 5-ம் இடமான விருச்சிக ராசி அல்லது 7-ம் இடமான மகர ராசியில் வாழ்க்கை துணை அமைந்தால் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்..

கடக ராசிக்காரர்கள் அதிர்ஷ்டம்

கடக ராசி பெண்களுக்கு கன்னி, மகரம், ரிஷபம் ராசி வரன்கள் பொருத்தமானவை.. இந்த பெண்கள் பெரும்பாலும் பொறுப்புகளை தாமே சுமந்து வெற்றிகரமாக முடிப்பார்கள்.. கணவருக்காக தன்னையே அர்ப்பணிக்கும் குணம் கொண்ட இவர்கள், சில நேரங்களில் அப்பாவிகளாக இருப்பதால் மற்றவர்களால் ஏமாற்றப்படவும் வாய்ப்புள்ளது.

இவர்களுக்கு 14, 26 மற்றும் 30 வயதுகளில் நல்ல யோகம் தேடி வரும்.. சந்திரனின் ஆதிக்கம் கொண்டவர்கள் என்பதால், முத்து மாலையோ அல்லது மோதிரமோ அணிவது மன அமைதியையும் அதிர்ஷ்டத்தையும் தரும்.. ஆனால் நீலக்கல் மற்றும் பவளம் அணிவதைத் தவிர்க்க வேண்டும்.. இவர்களது அதிர்ஷ்ட எண்கள் 2 மற்றும் 7 ஆகும்.. எண் 4 இவர்களுக்கு அசுபமானதாகக் கருதப்படுகிறது.

எவ்வளவு சிக்கல்கள் வந்தாலும் அதைத் திறமையாகக் கையாளும் கடக ராசிக்காரர்கள், ஒரு தவறு செய்துவிட்டால் அதை நேர்மையாக ஒப்புக் கொண்டு மன்னிப்பு கேட்கும் உயர்ந்த பண்பு கொண்டவர்கள்.. இவர்களது விடாமுயற்சியே இவர்களது வெற்றியின் ரகசியமாகும்...!!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+