திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கும் பக்தர்களுக்கு 16ம் தேதி முதல் புதிய ரூல்ஸ்! மீறினால் அனுமதி இல்லை!
திருப்பதி: திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ரூ 300 சிறப்பு தரிசன டிக்கெட் பெற்றவர்களுக்கும், இலவச தரிசனத்திற்கு டோக்கன் பெற்றவர்களுக்கும் வரும் 16ஆம் தேதி முதல் புதிய நடைமுறை வரும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையானை துவாரபாலகர்களை தாண்டி உள்ளே சென்று தரிசனம் செய்து வந்ததை யாராலும் மறக்க முடியாது. ஆனால் கூட்டம் அதிகரிக்க அதிகரிக்க தற்போது உள்ளே அனுமதிக்காமல் அப்படியே துவார பாலகர்கள் இருக்கும் இடத்துடன் வெளியே அனுப்பி விடுகிறார்கள்.

அந்த வகையில் நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். பண்டிகை காலங்களில் லட்சக்கணக்கானோர் வருகை தந்து ஏழுமலையானை தரிசிக்கிறார்கள்.
அப்போதெல்லாம் ரூ 50 தரிசன டிக்கெட் மேல் திருப்பதியிலேயே கிடைத்தது. ஆனால் தற்போது ரூ 300 தரிசன டிக்கெட் ஆன்லைனில் மட்டுமே அதுவும் 90 நாட்களுக்கு முன்புதான் புக் செய்ய முடியும். எனவே நினைத்த நேரத்தில் ஏழுமலையானை பார்க்க வேண்டும் என்றால் தர்ம தரிசனத்திலோ அல்லது நடைபாதை தரிசனத்திலோ செல்ல வேண்டும்.
இந்த நிலையில் தர்ம தரிசனத்தில் மணிக்கணக்கில் காத்திருப்பதை தடுக்கவே அதற்கு டோக்கன் வழங்கப்படுகிறது. அதில் நேரம் குறிப்பிடப்பட்டிருக்கும். அந்த நேரத்தில் உள்ளே செல்லலாம். பொதுவாக ரூ 300, டோக்கன் பெற்று செல்லும் தர்ம தரிசனத்தில் தேவஸ்தான் பாதுகாப்பு அதிகாரிகள் டைம் பார்த்து யாரையும் அனுமதிப்பதில்லை.
உதாரணமாக பகல் 3 மணிக்கு டிக்கெட் புக் செய்திருந்தால், 1 மணிக்கு சென்றாலும் அனுமதித்தனர், மாலை 5 மணிக்கு சென்றாலும் அனுமதித்தனர். இதனால் ஏற்கெனவே 1 மணிக்கு டிக்கெட் எடுத்தவர்கள், மாலை 5 மணிக்கு டிக்கெட் எடுத்தவர்களுடன் இப்படி நேரத்தை தவறவிடுவோரின் கூட்டமும் சேர ஏழுமலையானை தரிசிக்க நீண்ட நேரம் எடுத்துக் கொள்கிறது.
இதனால் குழந்தைகள், முதியவர்கள், உடல் உபாதை உள்ளவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். இதை கருத்தில் கொண்டு தேவஸ்தானம் இனி ரூ 300 தரிசனம், இலவச தரிசன டோக்கன் (எஸ்எஸ்டி) வைத்திருப்பவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே தரிசன வரிசையில் நுழைய அனுமதிக்கப்படுவார்கள்.
ஒதுக்கப்பட்ட நேரத்திற்கு முன்பாகவோ அல்லது தாமதமாகவோ வர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை வரும் 16 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. எனவே இனி பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க தேவையில்லை என்கிறார்கள். நேரத்தை கடைப்பிடித்து எந்த சிரமமும் இன்றி ஏழுமலையானை தரிசித்து வாருங்கள்.
ஜூன் மாதத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கான ரூ 300 தரிசன டிக்கெட் இந்த மாதம் 24 ஆம் தேதி வெளியிடப்படும். அது போல் சிறப்பு தரிசன டிக்கெட் பெற்றவர்களுக்கு அன்று பிற்பகலே அறைக்கான முன்பதிவும் வெளியாகும்.
அது போல் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை மறுநாள் (மார்ச் 13 ஆம் தேதி) ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறுகிறது. இதனால் அன்றைய தினம் காலை 6.30 மணி முதல் 9 மணி வரை கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப் பணி நடக்கிறது. அப்போது கோயிலின் மூலவர் அறை, சுவர்கள், மேற்கூரைகள், மாடங்கள், தூண்கள், பூஜைகளுக்கு பயன்படுத்தக்கூடிய பாத்திரங்கள் உள்பட கோயில் வளாகம் முழுவதும் சுத்தம் செய்யப்படுகிறது.
எனவே குறிப்பிட்ட நேரத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள். மூலவருக்கு பூஜைகள் முடிந்ததும்தான் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications