கோமதி சக்கரத்தை சிவப்பு துணியில் கட்டி.. வீட்டில் பணம் சேர உதவும் கோமதி சக்கரங்கள்.. இப்படி வையுங்க
சென்னை: ஆன்மீகத்தில் கோமதி சக்கரம் மிகுந்த முக்கியத்துவம் பெற என்ன காரணம்? நகையாக இதை அணிய முடியுமா? எப்போது அணியலாம்? தொழில் விருத்திக்கு கோமதி சக்கரத்தை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்? இவைகளை பற்றி வாஸ்துவில் தெளிவாகவே சொல்லப்பட்டுள்ளது. பிசினஸ் செய்பவர்கள் இந்த கோமதி சக்கரத்தை எப்படி பயன்படுத்தலாம்? இவைகளை பற்றி இங்கே சுருக்கமாக பார்க்கலாம்.
கோமதி நதியில் இயற்கையாக உருவாகும் இந்த ஓடு, விஷ்ணுவின் சுதர்சன சக்கரத்தைக் குறிப்பதால் ஆன்மீகத்தில் தெய்வ சக்தியை பெற்றுள்ளது. எனவேதான், லட்சுமி பூஜையில் கோமதி சக்கரத்தை பயன்படுத்துவார்கள்..

ரகசிய கல் - பலன்கள்
கோமதி சக்கரம் என்பது ஒரு தெய்வீக கல் ஆகும்.. வட மாநிலங்களில் பிரபலமாக உள்ள ஸ்ரீமகாலட்சுமி அம்சம் பொருந்திய இந்த வகைக் கல், தென் மாநிலங்களில் அதிகம் அறியப்படாமல் இருப்பதற்கு காரணம், அதனை ரகசியமாக பலரும் பயன்படுத்தி வந்ததுதானாம். வீட்டிற்கு செல்வத்தையும், செழிப்பையும் ஈர்க்க உதவும் வாஸ்து கல்லாகும்..
கோமதி சக்கரத்தை பூஜையில் பயன்படுத்தும்போது, அதிலுள்ள சுழி ஆகாயத்தை பார்த்ததுபோல் வைக்கவேண்டுமாம்.. பூஜைக்கு பிறகு எப்படி வேண்டுமானாலும் வைக்கலாம். பூஜையில் வெறுமனே வைத்துவிடாமல், சிவப்பு பட்டுத்துணியில் வைத்து அதை ஒரு வெள்ளி அல்லது செம்பு தட்டில் வைக்க வேண்டும்.
தோஷம் நீக்கும் சக்கரம்
குடும்பத்தை சுற்றியிருக்கும் தோஷங்களை இந்த கோமதி சக்கரம் நீக்குவதாக நம்பப்படுகிறது.. தீய சக்திகள் மற்றும் எதிர்மறை ஆற்றல்களிலிருந்தும் குடும்பத்தை பாதுகாப்பதாக நம்பப்படுகிறது.
வீடு மட்டுமல்ல, தொழில் செய்யும் இடங்களிலும் இந்த கோமதி சக்கரத்தை வைக்கலாம்.. ராகு கேது போன்ற கிரக தோஷங்களை சமநிலைப்படுத்த, இது உதவுகிறது..
அதாவது, பசுவின் திருஷ்டி சக்தியே இந்த கோமதி சக்கரமாகும். எனவே, இதனை வீட்டின் எந்த பாகத்தில் வைத்தாலும் திருஷ்டி விலகுமாம். இந்த சுழியில் நாகலட்சுமி குடிகொண்டிருப்பதாக நம்பப்படுவதால், இதனால் நாகதோஷங்கள் விலகிவிடுமாம். பெரும்பாலும், சிவப்பு வண்ண துணியின் மீது வைத்துதான்,இந்த கோமதி சக்கரத்தை பயன்படுத்துவார்கள். அப்போதுதான், மகாலட்சுமியின் அருளை பூரணமாக பெற முடியும்.
நிதி நிலைமை சீராகும்
பீரோ அல்லது பணப்பெட்டியில் கோமதி சக்கரத்தை வைப்பதால், நிதி சிக்கல் சீராகும்.. நேரடியாகவே இதனை பயன்படுத்தாமல், சிவப்பு துணியில் 11 கோமதி சக்கரங்களை சுற்றி வைக்கலாம்.. இதனால் பணம் தங்கியிருக்கும்..
எனவே, வீடு அல்லது அலுவலகம் அல்லது கடைகளில் கதவுக்கு அருகில் கோமதி சக்கரங்களை வைக்கலாம்.. அதேபோல, வாசலுக்கு அருகில் புதைத்து வைக்கலாம்.. கதவின் மேற்புறத்திலும் ஒட்டி வைக்கலாம்.இதனால் தீய சக்தி இருந்தாலும் விலகிவிடும்.
தொழிலில் உள்ள தடை நீங்க
பிசினஸில் ஏதாவது தடையிருந்தால் தலையணைக்கு அடியில் இதனை வைத்து தூங்கலாம். அல்லது 11 கோமதி சக்கரங்களை பூமியில் புதைத்து வைத்தாலும் தொழிலில் லாபத்தை பார்க்கலாம்..
எனவேதான், சொந்தமாக தொழில் செய்பவர்கள், கோமதி சக்கரத்தை சிலர் மோதிரமாக செய்து அணிந்து கொள்வார்கள்.. ஆனால் அப்படி அணியும்போது, வெள்ளிக்கிழமை அல்லது பௌர்ணமி தினத்தில் மோதிரத்தை அணிந்து கொள்ளலாம். கழுத்தில் அணியும் சங்கிலி வடிவிலும் இந்த கோமதி சக்கரத்தைப் பயன்படுத்தலாம்.
கோமதி சக்கரத்தை விலைக்கு வாங்குவதை காட்டிலும், பெரியோர்களிடமிருந்தோ அல்லது உறவினர்களிடமிருந்தோ அன்பளிப்பாக பெறுவது கூடுதல் சிறப்பானது என்பார்கள்.. ஒருவேளை விலைக்கு வாங்குவதாக இருந்தாலும் நல்ல நாளாக பார்த்து வாங்குவது நல்லது.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications