காமதேனு.. கேட்டதையெல்லாம் தரும் தெய்வீக பசு.. வீட்டில் இந்த திசையில் காமதேனு சிலையை வெச்சிடாதீங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: சுரபி என்று அழைக்கப்படும் காமதேனு பசுவின் சிறப்புகள் என்னென்ன தெரியுமா? பெண்ணின் தலை மற்றும் மார்பையும், பசுவின் உடலையும், மயில் தோகையையும் கொண்டது. இந்த காமதேனுவின் படங்களை வீடுகளில் எந்த திசையில் வைக்க வேண்டும்?

அசுரர்களும் தேவர்களும் பாற்கடலைக் கடைந்தபோது அதிலிருந்து பல்வேறு வஸ்துக்கள் தோன்றியதாகவும், அதில் ஒன்றுதான் காமதேனு பசு என்றும் சொல்வார்கள்..

spirituality

வாயு புராணத்தில் காமதேனு பசுவை பற்றி எப்படி விவரிக்கப்பட்டிருக்கிறது தெரியுமா? இந்த பசுவின் பற்களில் புயல், மின்னல் தேவதையான மருத்தும், நாக்கில் சரஸ்வதியும், குளம்பில் கந்தர்வர்களும், மூட்டுகளில் சத்வ ரிஷிகளும், இரு கண்களில் சூரிய சந்திரர்களும், திமிலில் நட்சத்திரங்களும், கோமியத்தில் கங்கையும், உடல் முழுவதும் ரிஷிகளும், சாணத்தில் லட்சுமியும், மயிர்க்கால்களில் அனைத்து வித்தைகளும் உள்ளது.

மன்னித்தல்: காமதேனு நடக்கும்போது அதை சூழ்ந்து தைரியம், பொறுமை, மன்னித்தல், புஷ்டி, புத்தி, நினைவாற்றல், மேதைமை முதலானவற்றிற்கு உரிய தேவதைகள் வந்துகொண்டே இருப்பதாகவும், அனைத்து தேவர்களும் அதற்கு முன்னால் சென்று கொண்டிருப்பதாகவும் அந்த புராணத்தில் வர்ணிக்கப்பட்டுள்ளது..

இப்படி காமதேனுவின் உடலில் அனைத்து தெய்வங்களும் குடிகொண்டிருப்பதால், காமதேனுவை வணங்கினாலே அனைத்து தெய்வங்களையும் வணங்கியதற்கான பலன் கிடைத்துவிடுமாம். அதுமட்டுமல்ல, காமதேனுவின் 4 கால்களும் 4 வேதங்களை குறிக்கிறதாம். தேவலோகத்தில் அனைத்து பசுக்களின் தாயாகவும் காமதேனு பார்க்கப்படுவதால், இதனை வணங்கினால் சகல ஐஸ்வர்யமும் வந்து சேரும் என்பது ஐதீகமாகும்.

காமதேனு படம்: அதனால்தான் தொழில் செய்யக்கூடிய இடங்களில் எல்லாம், காமதேனு படங்களை வைத்திருக்கிறார்கள்.. ஆனால், இந்த காமதேனு படம் எப்படி இருக்க வேண்டும்? எந்த திசையில் வைக்க வேண்டும்? என்பதையும் நம் முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளனர்.

எப்போதுமே காமதேனு படம் வாங்கினால், கன்றுடன் இருப்பது போன்று வாங்க வேண்டும்.. அதிலும் அக்கன்று, காமதேனுவின் மடியில் பால் குடிப்பது போல் இருந்தால் இன்னும் சிறப்பு. அதேபோல, இந்த படம் சிறிதும் உடையாமல் இருக்க வேண்டும்.. கீறல்கள் விழுந்துவிடாமல் பார்த்து கொள்ள வேண்டும்..

தம்பதி: வீட்டில் இந்த படத்தை வைத்திருக்கும்போது, கணவன் - மனைவி உறவு, ஆரோக்கியம் மேம்படும்... அதேபோல அலுவலகத்திலும் மாட்டி வைப்பதால், தொழிலில் விருத்தி உண்டாகும். எங்கெங்கு சிக்கல்கள், பிரச்சனைகள், தடங்கல்கள் உள்ளதோ, அங்கெல்லாம் இந்த காமதேனு படத்தை மாட்டி வைக்கலாம்.

காமதேனு சிலை மட்டுமல்ல, காமதேனு படத்தையும், வீட்டில் வடக்கு திசையில்தான் வைக்க வேண்டுமாம்.. குறிப்பாக. காமதேனுவின் தலை வீட்டிற்குள் பார்த்தமாறு வைக்க வேண்டும்.. வட கிழக்கு திசையிலும் மாட்டிக்கொள்ளலாம். இதனால் பண வரவு உண்டாகும். ஆனால் எக்காரணம் கொண்டும் தென் மேற்கு திசையில் காமதேனு படத்தையும், சிலையையும் வைக்கக்கூடாது என்கிறார்கள். இதனால் குடும்பத்தில் வறுமை சூழ்ந்து கொள்ளும்..

பரிசு பொருள்: அதேபோல, தென் கிழக்கு திசையிலும் இந்த படத்தை, சிலையை மாட்டக்கூடாது.. இதனால், ஆரோக்கியம் பாதிக்கப்படும், குடும்ப உறவில் விரிசல் ஏற்பட்டுவிடும். அதைவிட முக்கியமாக, இந்த காமதேனு படத்தை யாருக்குமே பரிசாக தரக்கூடாது.,. அப்படி தருவதால், உங்களுக்கு வரக்கூடிய செல்வமும், ஆரோக்கியமும் தடைபட்டுவிடுமாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+