திருப்பதி ஏழுமலையான் தினமும் எத்தனை நகைகள் அணிகிறார்? அவருக்கு பிடித்த நைவேத்தியம் என்ன தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

திருப்பதி: உலகத்திலேயே அதிக மக்கள் தினசரி வந்து சாமி தரிசனம் செய்யும் கோவில் என்றால் அது திருப்பதி ஏழுமலையான் கோவில்தான். திருப்பதிக்கு சென்று ஏழுமலையானை தரிசனம் செய்து வந்தால் வாழ்வில் திருப்பம் நிச்சயம் என்று சொல்வார்கள். கலியுகத்தின் கண்கண்ட தெய்வமான திருமாலின் அற்புதமான திருத்தலம் இது. எப்போதுமே தங்க வைர நகைகளை அணிந்து பக்தர்களுக்கு தரிசனம் தரும் ஏழுமலையானின் சிறப்புகளைப் பற்றி சனிக்கிழமையான இன்று தெரிந்து கொள்வோம்.

ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில், கிழக்குத்தொடர்ச்சி மலைகளின் அடிவாரத்தில் அமைந்திருக்கிறது திருப்பதி. இந்த நகரத்தை ஒட்டியுள்ள திருவேங்கட மலையின் மீதுதான் ஏழுமலையான் கோயில் கொண்டிருக்கிறார். சேஷாத்திரி, நீலாத்திரி, கருடாத்திரி, அஞ்சனாத்திரி, வ்ருஷபாத்ரி, நாராயணாத்ரி, வேங்கடாத்ரி ஆகிய ஏழுமலைகளுக்கும் அதிபதி என்பதால் பெருமாளுக்கு ஏழுமலையான் என்றும் பக்தர்களால் அழைக்கப்படுகிறார். உலகிலேயே அதிகமான பக்தர்கள் வழிபட செல்லும் இந்து கோயில் திருப்பதி ஏழுமலையான் கோயிலாகும். இங்கு ஒரு நாளைக்கு சராசரியாக 50 முதல் 70 ஆயிரம் பக்தர்கள் சுவாமியை தரிசித்து வருகின்றனர். விசேஷ நாட்களில் 5 லட்சம் பக்தர்கள் வரை ஏழுமலையானை தரிசிக்கின்றனர்.

இந்த மாதம் கோவிலில் வருகிற 19ஆம் தேதி கோகுலாஷ்டமி ஆஸ்தானம், 20ஆம் தேதி கோவில் எதிரே உறியடி உற்சவம், 30ஆம் தேதி வராஹ ஜெயந்தி, 31ஆம் தேதி விநாயக சதுர்த்தி விழாக்கள் நடக்கிறது. பிரம்மோற்சவ விழா வரும் செப்டம்பர் 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 9 நாட்கள் நடத்தப்பட உள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டு காலமாக பிரம்மோற்சவ விழா ஏகாந்தமாக நடைபெற்றது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மாட வீதிகளில் வாகன சேவைகள் நடைபெறுவதால் அதிக அளவிலான பக்தர்கள் வரக்கூடும். கருட சேவை புரட்டாசி மாதம் 3வது சனிக்கிழமை நடப்பதால் அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரம்மோற்சவ விழா நாட்களில் ரூ.300 டிக்கெட் தரிசனம், முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கைக்குழந்தைகளுடன் வரும் பெற்றோருக்கான தரிசனம் உள்பட அனைத்து வகையான தரிசனமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. பிரம்மோற்சவம் நடைபெற உள்ள இந்த நேரத்தில் ஏழுமலையான் கோவிலின் சிறப்புகளைப் பற்றி பார்க்கலாம்.

கொதிக்கும் ஏழுமலையான்

கொதிக்கும் ஏழுமலையான்

திருப்பதி மலைமேல் உள்ள ஏழுமலையான் திருவுருவச்சிலை எப்போதும் 110 டிகிரி ஃபாரன்கீட் வெப்பத்தில் இருக்கிறது. திருமலை 3000 அடி உயரத்தில் உள்ள குளிர்பிரதேசம். அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீர், பால் மற்றும் திரவியங்களால் அபிஷேகம் செய்கிறார்கள். ஆனால், அபிஷேகம் முடிந்தவுடன் ஏழுமலையானுக்கு வியர்க்கிறது. பீதாம்பரத்தால் வியர்வையை ஒற்றி எடுக்கிறார்கள். வியாழக்கிழமை அபிஷேகத்திற்கு முன்னதாக, நகைகளைக் கழற்றும் போது, ஆபரணங்கள் எல்லாம் சூடாகக் கொதிப்பதாக கூறப்படுகிறது.

என்னென்ன பொருட்கள்

என்னென்ன பொருட்கள்

பெருமாளின் அபிஷேகத்திற்காக ஸ்பெயினில் இருந்து குங்குமப்பூ, நேபாளத்திலிருந்து கஸ்தூரி, சைனாவிலிருந்து புனுகு, பாரிஸ் நகரத்திலிருந்து வாசனை திரவியங்கள் முதலிய விலை உயர்ந்த பொருட்கள் வரவழைக்கப்பட்டு, தங்கத்தாம்பாளத்தில் சந்தனத்தோடு கரைக்கப்படும் 51 வட்டில் பால் அபிஷேகம் செய்யப்படும். பிறகு கஸ்தூரி சாத்தி, புனுகு தடவப்படும், காலை 4,30 மணி முதல் 5,30 மணி வரை அபிஷேகம் நடைபெறுகிறது. அபிஷேகத்திற்கு சுமார் ஒரு லட்ச ரூபாய் செலவு ஆகும். சீனாவிலிருந்து சீனச்சூடம், அகில், சந்தனம், அம்பர், தக்கோலம், இலவங்கம், குங்குமம், தமாலம், நிரியாசம் போன்ற வாசனைப் பொருட்கள் ஏழுமலையான் திருக்கோயிலுக்காக அனுப்பப்படுகின்றன. ஐரோப்பாவில் உள்ள ஆம்ஸ்டர்டாமில் இருந்து பக்குவப்படுத்தப்பட்ட ரோஜா மலர்கள் பக்தர்களால் திருப்பதிக்கு விமானத்தில் அனுப்பி வைக்கப்படுகின்றன. ஒரு ரோஜா மலரின் விலை சுமார் 80 ரூபாய்.

விலை மதிப்பில்லாத ஆபரணங்கள்

விலை மதிப்பில்லாத ஆபரணங்கள்

அபிஷேகத்தின் போது ஏழுமலையான் தனது மூன்றாவது கண்ணை திறக்கிறார் என்ற ஐதீகம் உள்ளது. ஏழுமலையானின் சாளக்கிராம தங்கமாலை 12 கிலோ எடை. இதை சாத்துவதற்கு மூன்று அர்ச்சகர்கள் தேவை. சூரிய கடாரி 5 கிலோ எடை. பாதக்கவசம் 375 கிலோ. கோவிலில் இருக்கும் ஒற்றைக்கல் நீலம் உலகில் யாரிடமும் கிடையாது. இதன் மதிப்பு ரூ.100 கோடி. ஏழுமலையானின் ஆபரணங்களில் குறிப்பிடத்தக்க ஆபரணம் 500 கிராம் எடைகொண்ட பச்சை மரகத கல்லாகும். இதனை மதிப்பீடு செய்ய இயலவில்லை. இந்த பச்சைக்கல் மரகதத்தை விசேஷ நாட்களில் அலங்காரம் செய்ய பயன்படுத்துகின்றனர். கோயிலில் மூலவருக்கு தினந்தோறும் 120 வகையான ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு அலங்காரம் செய்யப்படுகிறது. மேலும், உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பருக்கு 383 வகையான ஆபரணங்கள் அலங்கரிக்கப்படுகிறது.

தங்க பீதாம்பரம்

தங்க பீதாம்பரம்

ஏழுமலையானின் தங்க பீதாம்பரம் மட்டும் 40 கிலோ எடை கொண்டதாகும். ஏழுமலையான் உடை 21 முழ நீளமும் 6 கிலோ எடையும் கொண்ட புடவை பட்டு பீதாம்பரமாகும். இந்த ஆடையை கடையில் வாங்க முடியாது. திருப்பதி தேவஸ்தான அலுவலகத்தில் 12500 ரூபாய் செலுத்த வேண்டும். வாரத்தில் ஒரு முறை வெள்ளிக்கிழமை அன்று மட்டும் தான் வஸ்திரம் சாத்துவார்கள். இது மேல் சாத்து வஸ்திரம். பணம் செலுத்திய பிறகு வஸ்திரம் சாத்துவதற்கு மூன்று வருடங்கள் காத்திருக்க வேண்டும்.

உண்டியல் வருமானம்

உண்டியல் வருமானம்

உலகிலேயே அதிக வருமானம் ஈட்டும் இந்து கோயில்களில் திருப்பதி ஏழுமலையான் கோயில் முதலிடத்தை வகிக்கிறது. இந்த வருமானம் அனைத்தும், ஏழுமலையான், தன் திருமணத்தின் போது, குபேரனிடம் பெற்ற கடனுக்கான வட்டியாக செலுத்தப்படுவதாக பல ஆண்டுகளாக, பக்தர்களால் நம்பப்படுகிறது. திருப்பதி ஏழுமலையானின் உண்டியலில் தினந்தோறும் சராசரியாக ரூ. 3 கோடி வரை பக்தர்கள் காணிக்கை செலுத்தி வருகின்றனர். கடந்த ஜூலை மாதம் 23 லட்சத்து 40 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். உண்டியல் வருமானமாக ரூ.139 கோடியே 33 லட்சம் கிடைத்துள்ளது. கடந்த ஜூலை மாதம் ஐந்து நாட்கள் ஐந்து கோடி ரூபாய்க்கும் அதிக தொகையை பக்தர்கள் ஏழுமலையானுக்கு காணிக்கையாக சமர்ப்பித்திருந்தனர். ஜூலை நான்காம் தேதி 6 கோடியே 18 லட்சம் ரூபாய் ஏழுமலையானுக்கு காணிக்கையாக கிடைத்தது. இது வரை ஏழுமலையானுக்கு ஒரே நாளில் கிடைத்த அதிக காணிக்கை தொகை இதுவே ஆகும்.

 லட்டு பிரசாதம்

லட்டு பிரசாதம்

திருப்பதி செல்லும் பக்தர்கள் லட்டு பிரசாதத்தை விரும்பி வாங்கிச் செல்கின்றனர். ஜூலை மாதத்தில் லட்டு பிரசாதம் ரூ.1 கோடியே 7 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. 53 லட்சத்து 41 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னப்பிரசாதம் வழங்கப்பட்டுள்ளது. 10 லட்சத்து 97 ஆயிரம் பக்தர்கள் தலைமுடியை காணிக்கையாக செலுத்தி உள்ளனர். ஆகஸ்ட் 10ஆம் தேதியன்று 74 ஆயிரத்து 497 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 36 ஆயிரத்து 244 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். அன்று ஒருநாள் உண்டியல் வருமானமாக ரூ.5 கோடியே 15 லட்சம் கிடைத்தது.

அன்னதானம்

அன்னதானம்

திருப்பதி திருக்கோயில் சமையல் கட்டு மிகவும் பெரியதாகும். பொங்கல், தயிர்சாதம், புளிச்சாதம், சித்ரான்னம், வடை, முறுக்கு, ஜிலேபி, அதிரசம், போளி, அப்பம், மெளகாரம், லட்டு, பாயசம், தோசை, ரவாகேசரி, பாதாம்கேசரி, முந்திரிப்பருப்பு கேசரி போன்றவை தினமும் பெரிய அளவில் தயார் செய்யப்படுகின்றன. ஆசியாவிலேயே திருமலை தரிகொண்டா வெங்கமாம்பாள் இலவச உணவு மையத்தில் தினமும் 5,000 கிலோ காய்கறிகளில் உணவு தயாரிக்கப்படுகிறது.

மண்சட்டியும் தயிர்சாதமும்

மண்சட்டியும் தயிர்சாதமும்

என்னதான் வகை வகையாக சமைத்தாலும் ஏழுமலையான் விரும்பி சாப்பிடுவது என்னவோ தயிர்சாதம்தானம். ஏழுமலையானுக்கு தினமும் ஒரு புதிய மண்சட்டி வாங்குகிறார்கள். இதில் தயிர்சாதம் தவிர வேறு எந்த நைவேத்தியமும் கோவில் கர்பக்கிருகத்திற்குக் குலசேகரப் படியைத் தாண்டாது. வைரம், வைடூரியம், தங்கப்பாத்திரங்கள் எதுவும் குலசேகரப்படியைத் தாண்டச் செல்லாது. ஆண்டவனுக்கு நைவேத்தியம் செய்யப்பட்ட எச்சில் மண்சட்டியும், தயிர்சாதமும் ஒரு பக்தனுக்குக் கிடைக்கப் பெற்றால் அது மிகப்பெரிய பாக்கியமாகும்.

வெறுங்கை வேடன் ஏழுமலையான்

வெறுங்கை வேடன் ஏழுமலையான்

ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் போது ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலில் இருந்து ஸ்ரீ ஆண்டாள் அணிந்த மாலைகள் மங்கல பொருட்கள் திருப்பதி கொண்டு வரப்பட்டு ஏழுமலையானுக்கு சாத்தப்படுவது காலம் காலமாக நடைபெற்று வருகிறது. நம்முடைய இந்து தெய்வங்களுக்கு கையில் ஏதாவது ஓரு ஆயுதம் இருக்கும். ஏழுமலையான் திருவுருவச்சலையில் எந்த வித ஆயுதமும் கிடையாது. அவர் நிராயுதபாணியாக இருக்கிறார். அதனால் தான் தமிழ் இலக்கியத்தில் நம் முன்னோர்களால், வெறுங்கை வேடன் என்று அழைக்கப்படுகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+