வானில் சத்தமிட்ட கருடன்.. வட்டமிடுவதற்கு காரணம் இதுதானா? கருட தரிசனத்தில் இத்தனை பலன்களா
சென்னை: கருடனை தரிசிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன? கருடன் வட்டமிடுவதன் பலன்கள் என்னென்ன? எந்தெந்த கிழமைகளில் கருடனை வணங்கினால், என்னென்ன பலன்கள் கிடைக்கும்?
பறவைகளின் அரசன் கருடன் ஆவார்.. எல்லா திசைகளிலும் வேகமாக பறக்கக்கூடிய பறவை.. வட்டம் அடிக்கும்போது பருந்துகள் இன்னமும் உயரத்தில் பறக்கும்.. அப்படி உயரே பறக்கும்போது, அதுவரையில் பார்த்த பகுதியைவிட, சற்று அதிக பகுதியை பார்க்க முடியும்... இதனால், அதிக சக்தியும் வீணாகாது. இப்படி வட்டமடிப்பது எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம்.

அதேபோல, கருடன் மூன்று முறை மட்டுமே வட்டமிடும் என்பார்கள்.. ஆனால், இரையை தேட எத்தனை முறை வேண்டுமானாலும் வட்டமிடுமாம்.. இரை கிடைக்கும்வரைகூட வட்டமிடும் என்கிறார்கள்.
ஆன்மீகத்தில் கருடனுக்கு நிறைய தொடர்பும், முக்கியத்துவமும் உள்ளன.. ஸ்ரீமன் நாராயணனின் பெருமைக்குரிய வாகனமாக திகழ்பவன் கருடன்... கொற்றப்புள், தெய்வப்புள், வேதஸ்வரூவன், பட்சிராசன், சுவர்ணன், விஜயன், பெரிய திருவடி என பல்வேறு பெயர்கள் கருடனுக்கு உண்டு..
தரிசனம்: ஞானம், பலம், ஐஸ்வர்யம், வீர்யம், அதீத சக்தி, தேஜஸ் போன்ற 6 விதமான குணங்களுடன் கருடன் திகழ்கிறார்.. கருடன் வானத்தில் பறக்கும்போது தரிசனம் செய்வது நல்லது.. வானத்தில் கருடன் வட்டமிடுவதும், சத்தமெழுப்பதும் மங்களமான அறிகுறியாகும்.. கருடனின் குரலை கேட்பதும் நல்ல பலன்களையே தரும்.
ஸ்ரீ கருட பகவானுக்கு சிவப்பு நிறமுள்ள பட்டு வேஷ்டியை அணிவித்து, மல்லிகைப்பூ, மருக்கொழுந்து, கதிர்ப்பச்சை சம்பகப் பூக்களால் அர்ச்சனை செய்வார்கள்.. கருட பெருமான் திருமாலின் 2 திருவடிகளையும் தன்னுடைய ஒரு கரங்களால் தாங்கி ஊர்வலமாக வரும் காட்சியே கருட சேவை என்பார்கள்.. காஞ்சிபுரத்தில் கருட சேவையை அதிகாலையில் தரிசிப்பது மிகவும் சிறப்பானது.
கருடன் தரிசனம்: அனைத்து திருக்கோயில்களிலும் பிரம்மோற்சவத்தின்போது, பெருமாள் கருடன வாகனத்தில் எழுந்தருளும்போது, வானில் கருடன் பறப்பதை காண முடியும். ஆனால், கைகூப்பி வணங்காமல் மனதால் நினைத்து வணங்க வேண்டுமாம். அதேபோல, கும்பாபிஷேகத்தின்போது எவ்வவு பூஜைகள், யாகங்கள் நடந்தாலும் பூஜையின்போது கருடன் வந்து தரிசனம் தந்தால்தான் கும்பாபிஷேகமே முழுமை பெறுகிறது.
வாழ்வில் ஏற்படும் அனைத்துவித பிரச்சினைகளுக்கும் நிரந்தரத்தீர்வைத் தருவது கருட தரிசனம் ஆகும்.. இந்த கருட தரிசனத்தினால், பாவத்தை போக்க முடியும்.. நாக தோஷத்திலிருந்து மீனள முடியும்.. நீண்ட கால நோயிலிருந்து விட முடியும்.. தோல் வியாதிகளிலிருந்து விடுதலை பெற முடியும்.. பூஜைகள் அல்லது மந்திர உச்சரிப்புகளில் அறியாமல் நடக்கும் தவறுகளால் ஏற்படும் பாவத்தை போக்கவும் இந்த கருட தரிசனமே சிறப்பானது.
பலன்கள்: கருடனைத் தரிக்கும் கிழமைகளை பொறுத்து அதன் பலன்களை நாம் பெறலாம்.. ஞாயிறுகளில் கருட தரிசனம் செய்தால், தீராத நோயும் தீரும்.. திங்கட்கிழமைகளில் கருட தரிசனம் செய்தால், குடும்பம் நலம் தழைக்கும்.. செவ்வாய்க்கிழமைகளில் கருட தரிசனம் செய்தால், தைரியம் பெருகும்.. புதன்கிழமை தரிசனமானது எதிரிகளை அழித்தொழிக்கும்.. வியாழக்கிழமை பகைவர்கள் வைத்த சூன்யம் நீங்கும்.. வெள்ளிக்கிழமை கருட தரிசனமானது, தனவரவை தரக்கூடியது. சனி கருட தரிசனம் செய்தால், ஆயுள் நீண்டு நற்கதியை அடையலாம்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications