நம் உயிரை எடுக்கும் எமனின் நட்சத்திரம் என்ன தெரியுமா? நீங்கள் அந்த ஸ்டாரா பாருங்க!
சென்னை: ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் 27 நட்சத்திரங்களுக்கும் தனித்தனி குணாதிசயங்கள் உண்டு. அப்படியிருக்கையில் எமனின் நட்சத்திரம் எது என்பது தெரியுமா?
ஜோதிடத்தில் நட்சத்திரம், நாள், கோள், ராசி, என எல்லாமே முக்கியமானதுதான். கிரகங்களை விட நட்சத்திரங்களுக்கு வலிமை அதிகம் என்கிறார்கள். அதனால்தான் ஒரு குழந்தை பிறந்ததும் அந்த குழந்தை எந்த நட்சத்திரம் என்பதை கணித்து வைத்துக் கொள்கிறார்கள்.

ஒருவருடைய ஜாதகமே அவரவர் பிறந்த நட்சத்திரத்தின் அடிப்படையில்தான் அமைகிறது. ஜோதிடத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 27 நட்சத்திரங்களுக்கும் தனித்தனி குணாதிசயங்கள் இருக்கின்றன. மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிகளை சூரியன், சுக்கிரன், செவ்வாய் என்ற 9 கோள்களும் ஆட்சி செய்கின்றன.
ஒரு ராசிக்கு இரண்டே கால் நட்சத்திரங்கள் என 12 ராசிகளுக்கும் மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளன. ராகு பகவான் ஆட்சி செய்யும் நட்சத்திரங்கள் திருவாதிரை, சுவாதி, சதயம் ஆகியவை ஆகும். கேது பகவான் அசுவினி, மகம், மூலம் ஆகியவற்றை ஆள்கிறார்.
அது போல் சுக்கிரன், பரணி, பூரம், பூராடம் ஆகிய மூன்று நட்சத்திரங்களையும் ஆள்கிறார். சூரியன் கார்த்திகை, உத்திரம், உத்தராடம் ஆகிய 3 நட்சத்திரங்களையும் சந்திரன் ரோகிணி, அஸ்தம், திருவோணம் ஆகிய நட்சத்திரங்களையும் செவ்வாய் கிரகமானது மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் ஆகிய 3 நட்சத்திரங்களையும் ஆள்கிறார்கள்.
குரு பகவான், புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய 3 நட்சத்திரங்களையும் ஆள்கிறார். சனி பகவான் பூசம், அனுஷம், உத்திரட்டாசி ஆகிய 3 நட்சத்திரங்களையும் ஆள்கிறார். இப்படியாக அவரவருடைய ராசி, நட்சத்திரங்களுக்கேற்ப தெய்வங்களை வழிபட வேண்டும் என்கிறார்கள். மேலும் எமதர்மனின் நட்சத்திரம் சதயம் என சொல்லப்படுகிறது. இது எந்தளவுக்கு உண்மை என தெரியவில்லை. ஆங்காங்கே படித்ததில் இருந்து கிடைத்தது இதுதான்.
அது போல் விஷ்ணுவின் நட்சத்திரம் திருவோண், சனியின் நட்சத்திரம் ரேவதி, சுக்கிரனின் நட்சத்திரம் மகம், கணபதியின் நட்சத்திரம் உத்திராடம், அனுமனின் நட்சத்திரம் மூலம், முருகனின் நட்சத்திரம் விசாகம், தஷ்சிணாமூர்த்தியின் நட்சத்திரம் பூசம் லட்சுமியின் நட்சத்திரம் அனுஷம் ஆகும். அது போல் காமதேனுவின் நட்சத்திரம் உத்திரட்டாதி ஆகும். ஐயப்பன் அஸ்த நட்சத்திரம் ஆவார்.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications