மிதுன ராசிக்காரர்களே.. நீங்கள் கொடுத்து வைத்தவர்கள்.. இவ்வளவு திறமைகளா? இது மிதுனத்தின் ஸ்பெஷாலிட்டி
சென்னை: மிதுன ராசிக்காரர்கள் பொதுப்பலன்கள் குறித்தும், திருமணம் செய்து கொள்ள பொருத்தமான ராசி எது என்பது குறித்தும் ஜோதிடத்தில் விரிவாகவே எழுதிவைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, மிதுன ராசிக்காரர்கள் எப்போதும் இரட்டை சிந்தனையுள்ளவர்களாகவே இருப்பார்களாம்.. எந்த ஒரு காரியத்தை துவங்கும்போதும், அதன் நல்லது - கெட்டது என இரண்டையுமே நன்கு ஆராய்ந்து, அதற்கு பிறகே காரியத்தில் இறங்குவார்களாம். மிகவும் சாமர்த்தியமாகவும், நிதானமாகவும் எதையும் கையாண்டு, வெற்றி பெறக்கூடியவர்கள். போலியான ஆடம்பரத்துக்கு விழ மாட்டார்கள்..

பேச்சு: கலகலவென்று பேசக்கூடியவர்கள்.. இவர்களது கள்ளங்கபடமற்ற பேச்சுக்கு, நட்பு வட்டாரம் பெருகி கிடக்கும்.. ஏழை பணக்காரன் என்ற எந்த வித்தியாசத்தையும் பார்க்க மாட்டார்கள்.. மூடநம்பிக்கைக்கு இடம் கொடுக்காதவர்கள்.. புதன் ராசிக்காரர் என்பதால், சென்டிமென்ட்டுக்கு ஆளாக மாட்டார்களாம்.. வசதியாக வாழ வேண்டும் என்ற விருப்பம் உள்ளவர்கள்.
தாங்கள் சொன்னதை சரியென்று சாதிக்கும் மனப்பான்மை உடையவர்கள்.. தாராள குணமும் இவர்களிடம் உண்டு.. முற்போக்கு சிந்தனை இருநதாலும், பழமையை விடாமலும் இருப்பார்கள். ஆயிரம் மனப்போராட்டம் இருந்தாலும் வெளியில் காட்டிக்கொள்ள மாட்டர்கள்.
கல்விமான்: புதன் அமைந்துள்ளதால், சிறந்த கல்விமான்களாக அல்லது பத்திரிகை ஆசிரியராக இருப்பார்கள்.. ஒருவேளை, சுக்கிரனும், புதனும் சேர்ந்திருந்தால், சினிமா போன்ற கலைத்துறையிலும் சிறந்து விளங்குவார்கள்.. புத்தகங்களை வேகமாக படிப்பவர்கள்.. இவர்களது பேச்சில் கண்ணியம் இருக்கும்.
சினிமா, இசை, நடனம், பாடல் என கலை ரசனை அதிகம் உள்ளவர்கள்.. வெறும் ரசனையுடன் இல்லாமல், ஒவ்வொரு கலைகளை பற்றியும் நுட்பமாக அறிந்து வைத்திருப்பார்களாம்.. கலைகளில் நாட்டம் உள்ளவர்களாக இருக்கும் மிதுன ராசிக்காரர்களுக்கு, சிலசமயம் இவர்களது ரசனைக்கு பொருத்தமில்லாத துணை அமைந்துவிடுமாம். எனினும் அதை பெரிதுப்படுத்த மாட்டார்களாம்.
அன்பு: யாராவது ஒருவர் மீது அளவுக்கதிகமான அன்பை பொழிவார்கள்.. சிலருக்கு காதல் தோல்வி எற்படலாம்.. அதேபோல, மிதுன ராசிக்காரர் தன்னுடைய துணையை விட்டு பிறர் மீது அன்பு செலுத்தவும் வாய்ப்புகள் உண்டு...
மிதுன ராசிக்காரர்களுக்கு ரிஷபம், துலாம், மகரம் போன்றவை பொருந்தா ராசிகள்.. இவர்களுடன் திருமணம் நடந்தால், மகிழ்ச்சி குறைவுதான்.. இதற்காக துணையை விட்டு பிரிய மாட்டார்கள்.. விவாகரத்தும் செய்ய மாட்டார்கள்.. அனுசரித்து போகவே விரும்புவார்கள். சிறுநீரக தொடர்பான நோய், நரம்புத்தளர்ச்சி, சுவாச கோளாறு தொந்தரவு ஏற்படலாம்.
சுறுசுறுப்பு: இவர்களை யாராலும் சரியாக புரிந்து கொள்ள முடியாது.. நெருங்கி பழகுபவர்களால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்... எந்நேரமும் சுறுசுறுப்பாக இருப்பவர்கள்.. யாரிடமும் அடிபணிய மாட்டார்கள். தங்களது கருத்தை வெளிப்படுத்த மாட்டார்கள். பிறர் சொல்லும் கருத்தையும் ஏற்க மாட்டார்கள். தவிர்க்க முடியாத சூழலில், பிறர் கருத்தை ஏற்பார்கள். தங்களுக்கு சாதகமாக, தங்களுக்கு ஆதரவாக இருப்பவர்களுடன் மட்டுமே நட்பு வைத்துக் கொள்வார்கள்.
மிதுன ராசிக்காரர்களுக்கு 9ம் இடமான கும்பம், 10ம் இடமான மீனம் என இந்த 2 ராசிகளிலும் வாழ்க்கைத்துணை கிடைத்தால் வாழ்க்கை ஓஹோவென இருக்கும். அதிலும் கும்ப ராசிக்காரர்கள் துணையாக அமைந்தால், மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.
ராசிகள்: மீன ராசிக்காரர்கள் துணையாக அமைந்தால், பொருளாதார சிக்கல் இல்லாமல் செழிப்புடன் வாழ்க்கை இருக்குமாம். 5-ம் இடமான துலாம் ராசியைச் சேர்ந்தவர்கள் துணையாக அமைவது, மிகமிக நல்லது.. அப்படி அமைந்தாலே, இந்த ஜோடி கொடுத்து வைத்தவர்களாம்.
-
ஜூன் மாத பலன்: ரிஷப ராசி வாழ்க்கையில் ஏற்பட போகும் திருப்பம்.. தூக்கிவிடும் சுக்கிரன் -
ஜூன் மாத பலன்: மேஷ ராசிக்கு ஜூனில் வரப்போகும் சூப்பர் மாற்றம்.. நினைத்தது நிறைவேறும் யோகம் -
Meenam: மீன ராசிக்கு குரு அருள் மழை!.. ஜூன் 1-7 வரை பணவரவு, முன்னேற்றம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications