மிதுனம் ராசிக்காரர்களே.. உங்க ஸ்பெஷாலிட்டியே இதுதான்.. குடும்ப வாழ்வில் கொடுத்து வைத்த மிதுனம் ராசி
சென்னை: ராசிகளை வைத்து அவர்களின் இயல்புகள் குறிக்கப்படுகின்றன.. அந்தவகையில், மிதுன ராசிக்காரர்கள் எப்படிப்பட்டவர்கள் தெரியுமா? அவர்களின் குணநலன்கள் என்னென்ன? என்பதை பற்றின பொதுப்பலன்களை இங்கே சுருக்கமாக பார்க்கலாம்.
மிதுன ராசிக்காரர்களுக்கு சின்னமே வான இரட்டையர்கள் தான்... இந்த ராசியினர் எப்போதுமே இரட்டை குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.. எப்போதும் இரட்டை சிந்தனையுள்ளவர்களாக இருப்பார்கள். எந்தவிதமான எந்த மறைமுக நோக்கங்களும் இவர்களிடம் இருக்காது..

பேச்சுத்திறன்: சமுதாயத்தில் அனைவருடனும் நன்றாக பழக விரும்புவார்கள்... இயல்பாகவே அனைவரிடமும் எளிதாக பேசும் திறன் கொண்டவர்கள்.. எந்த செயலை செய்தாலும், அதை அவசர அவசரமாக செய்ய மாட்டார்கள்.. அந்த காரியத்தின் நல்லது - கெட்டது என இரண்டையுமே நன்றாக ஆராய்ந்த பிறகே செயல்படுவார்கள். மிகவும் சாமர்த்தியமாகவும், நிதானமாகவும் எதையும் கையாண்டு, வெற்றி பெறக்கூடியவர்கள்.. ஆனால், போலியான ஆடம்பரத்துக்கு எப்போதுமே விழ மாட்டார்கள்..
இந்த மிதுன ராசிக்காரர்கள் எப்போதும் தைரியமாக சிந்திக்க முயல்பவர்கள்.. அதனால்தான், பிறருக்கு சிறந்த வழிகாட்டிகளாகவும் விளங்குவார்கள்.. மிதுனமும் கன்னியும் புதனால் ஆளப்படும் ராசிகளாகும்.. புதன் ஒரு தகவல் தொடர்புக்கான தூது கிரகமாக கருதப்படுகிறது. அதனால் மிதுன ராசிக்காரர்கள் தங்கள் உணர்ச்சிகளை எப்போதும் வெளிப்படுத்தி கொண்டே இருப்பார்கள். ஆனால் புதனால் ஆளப்படும் கன்னியோ அப்படி வெளிப்படுத்தும் குணத்தை கொண்டிருக்க மாட்டார்கள்.
நட்பு வட்டாரம்: கலகல பேச்சுக்கு சொந்தக்காரர்கள் மிதுனராசிக்காரர்கள்.. கள்ளங்கபடமற்ற பேச்சுக்கு, நட்பு வட்டாரம் இவர்களுக்கு விரிந்து கிடக்கும்.. இவர்களை நெருங்கி பழகுபவர்களால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். ஏழை பணக்காரன் என்ற பேதம் இவர்களுக்கு கிடையாது. மூடநம்பிக்கையில் விழ மாட்டார்கள்.
புதன் ராசிக்காரர் என்பதால், சென்டிமென்ட்டுக்கு எளிதில் விழ மாட்டார்கள். வசதியாக வாழ வேண்டும் என்ற ஆசை இருக்கும்.. அதேசமயம், தாங்கள் சொல்வதே சரியென்று சாதிக்கும் மனப்பான்மை கொண்டவர்கள். யாரிடமும் அடிபணிய மாட்டார்கள். தங்களது கருத்தை வெளிப்படுத்த மாட்டார்கள். பிறர் சொல்லும் கருத்தையும் ஏற்க மாட்டார்கள். தங்களுக்கு ஆதரவாக இருப்பவர்களுடன் மட்டுமே நட்பு வைத்துக் கொள்வார்கள்.
புதுமை, பழமை: இவர்களிடம் உள்ள மிகச்சிறந்த குணம் என்னவென்றால், எந்த ஒரு சூழ்நிலையையும் எளிதில் சமாளிக்கும் திறன் கொண்டவர்களாக இருப்பார்கள். தாராள குணமும் இவர்களிடம் உண்டு.. முற்போக்கு சிந்தனை இருந்தபோதிலும், பழமையை விட்டுவிட மாட்டார்கள். எவ்வளவுதான் மனப்போராட்டம் இருந்தாலும், அதை வெளியில் காட்டிக்கொள்ள மாட்டர்கள்.
எதையும் உடனே கற்றுக் கொள்ளும் சாமர்த்தியமும் கொண்டவர்கள்.. சுய முன்னேற்றம் உடையவர். கேலி கிண்டலாக நகைச்சுவையாக பேசுவதில் இந்த ராசிக்காரர்கள் கெட்டிக்காரர். நண்பர்களோடு விவாதம் செய்வது, கலந்துரையாடுவது, பேசி மகிழ்ச்சியாக பொழுதை போக்க விரும்புவார்கள்.
பெண்மைத்தன்மை: சிவந்த நிறத்தில், அளவான உயரத்தில், சிரித்த முகம் இனிமையான பேச்சு கொண்டவர்களாக இருப்பார்கள்.. ஆண்கள் கொஞ்சம் பெண்மைத்தன்மையுடனும், பெண்கள் சற்று ஆண் தன்மையுடன் இருப்பார்கள்.. இவர்கள் எப்போதுமே சோம்பலுக்கு இடம் கொடுப்பதில்லை. ஒரு ஆளைப் பார்த்த உடனேயே சரியாக கணிக்கும் திறன் மிதுனராசிக்காரர்களுக்கு உண்டு..
மிதுன ராசிக்காரர் எவ்வித கட்டுப்பாட்டுக்கும் உள்ளாக விரும்புவதில்லை. எத்தனை பிரியமாக வாழ்க்கைத் துணை இருந்தாலும் அவரின் கட்டுப்பாட்டில் இருப்பதை விரும்ப மாட்டார். வெளியில் சுற்றித் திரிவதை இவர்கள் அதிகம் விரும்புவர்.
கண்ணியம்: புதன் அமைந்துள்ளதால், சிறந்த கல்விமான்களாக அல்லது பத்திரிகை ஆசிரியராக இருப்பார்கள்.. ஒருவேளை, சுக்கிரனும், புதனும் சேர்ந்திருந்தால், சினிமா போன்ற கலைத்துறையிலும் சிறந்து விளங்குவார்கள். புத்தகங்களை வேகமாக படித்துவிடுவாரகள். இவர்களது பேச்சில் எப்போதுமே கண்ணியம் இருக்கும்.
சினிமா, இசை, நடனம், பாடல் என கலை ரசனை கொண்டவர்கள். அத்துடன் அந்தந்த கலைகளை பற்றியும் நுட்பமாக தெரிந்து வைத்திருப்பர். ஆனால், பெரும்பாலும் இவர்களது ரசனைக்கு பொருத்தமில்லாத துணை அமைந்துவிடுமாம். யாராவது ஒருவர் மீது அளவுக்கதிகமான அன்பை பொழிவார்கள்.. சிலருக்கு காதல் தோல்வி எற்படலாம்.. மிதுன ராசிக்காரர் தன்னுடைய துணையை விட்டு பிறர் மீது அன்பு செலுத்தவும் வாய்ப்புகள் உண்டு...
வாழ்க்கைத்துணை: மிதுன ராசிக்காரர்களுக்கு 9ம் இடமான கும்பம், 10ம் இடமான மீனம் என இந்த 2 ராசிகளிலும் வாழ்க்கைத்துணை கிடைத்தால் வாழ்க்கை சிறப்பாக அமையும்.. முக்கியமாக, கும்ப ராசிக்காரர்கள் துணையாக அமைந்தால், மகிழ்ச்சியாக இருக்கும்.
ஆனால், மிதுன ராசிக்காரர்களுக்கு ரிஷபம், துலாம், மகரம் போன்றவை பொருந்தா ராசிகளாம்.. இவர்களுடன் திருமணம் நடந்தால், மகிழ்ச்சி குறைவுதான்.. அதுக்காக எக்காரணம் கொண்டும் துணையை விட்டு பிரிய மாட்டார்கள்.. விவாகரத்தும் செய்ய மாட்டார்கள்.. அனுசரித்து போகவே விரும்புவார்கள். சிறுநீரக தொடர்பான நோய், நரம்புத்தளர்ச்சி, சுவாச கோளாறு தொந்தரவு மிதுன ராசிக்காரர்களுக்கு ஏற்படலாம்.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் சி. ஜோசப் விஜய்.. 2 தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர்!












Click it and Unblock the Notifications