மாசி மாதம் மகத்துவம்.. தாலி பிரித்து கோர்க்கலாம்.. ஆமா, மாசியில் கிரகப்பிரவேசம் செய்யலாமா? அற்புதம்
சென்னை: மாசி மாதத்தின் சிறப்புகள் என்னென்ன தெரியுமா? மாசியில் செய்ய வேண்டியவைகள் என்னென்ன தெரியுமா? மாசி பிறந்தாலே மகத்தான வாழ்வு அமையும் என்பார்கள்.. இதற்கெல்லாம் காரணம் என்ன தெரியுமா? சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
எல்லா தெய்வங்களுக்கும் சிறப்பு மிக்க மாதமாக மாசி மாதம் கருதப்படுகிறது. மாசி மாதத்தில் வருகிற சங்கடஹர சதுர்த்தி விசேஷமானது.. மாசி மாதத்தில் வருகின்ற சங்கடகர சதுர்த்தி அபூர்வ சக்தி வாய்ந்ததாகும். இந்த நாளில் அருகம்புல் மாலை அணிவித்து விநாயகரை மனதார துதித்தால் சகல தோஷங்களும் நீங்கும்.

அத்துடன், திருமால், மகாவிஷ்ணுவாக அவதாரம் எடுத்தது இந்த மாசி மக நட்சத்திரத் திருநாளில்தான். தானத்தில் சிறந்தது அன்னதானம் என்பார்கள்..
அந்த அன்னதானத்தின் பெருமைகளை உணர்த்துவது இந்த மாசி மகத்தில்தான்.. எனவே, இந்த மாசி மாதம், பிறருக்கு இயன்ற அளவுக்கு அன்னதானம் செய்வது நல்லது.. மாசி மாதத்தில் ஏழை எளியவர்களுக்கு வயிறார உணவு படைத்தால் மூன்று மடங்கு புண்ணிய பலன்களை பெறலாம்.
தாலி பிரித்து கோர்க்கலாம்
முருகனுக்குரிய வழிபாட்டு தினங்களில் மாசி மகம் மிகவும் விசேஷமானது.. இந்த தினத்தில் கண்டிப்பாக சிவன் கோயிலுக்கு சென்று வழிபடவேண்டும். இதனால், எப்பேர்ப்பட்ட இன்னலையும் மீண்டு வந்துவிட முடியும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
மாசி மாதத்தில், சக்தி சிவத்தோடு ஐக்கியமாவதால் இந்த மாதத்தில் மங்களகரமான விஷயத்தை செய்யலாம்.. சிவனும், சக்தியும் இணைந்து முழுமை பெறுவதால், தன்னுடைய கணவனின் நலனுக்காக பெண்கள் இந்த மாசி மாதத்தில் தாலிக் கயிற்றினை புதிதாக மாற்றிக் கொள்வது நடைமுறையாக உள்ளது. அதனால்தான், இதனை மாங்கல்ய மாதம் என்றும் சொல்வார்கள்..
புதுமனைப் புகுவிழா செய்யலாமா
மாசிக் கயிறு பாசி படியும் என்று பழமொழியே உண்டு. மன வலிமை தரக்கூடிய மாதம்மாகவே மாசி கருதப்படுவதால்,திருமணம் முடித்த பெண்கள், இந்த மாதத்தில் தாலிக் கயிற்றினை மாற்றிக்கொள்வார்கள்..
அதேபோல, மாசி மாதத்தில் புதுமனைப் புகுவிழாவும் செய்யலாம்.. இந்த மாதத்தில் வீடு திறப்பு நிகழ்ச்சியை செய்தால், அந்த வீட்டில், எல்லாவிதமான செல்வமும் நிறையும் என்பது நம்பிக்கை.
ஏகாதசி விசேஷம்
மாதந்தோறும் வருகிற ஏகாதசி சிறப்பு வாய்ந்தது என்றாலும், மாசி மாதத்தில் வருகிற ஏகாதசி கூடுதல் விசேஷமானது.. இந்த நாளில் விரதம் இருப்பது புண்ணியத்தை பெருக்கித்தரும்.. இந்த ஏகாதசி விரதத்தை மனதார மேற்கொண்டால் கோடி புண்ணியம் கிடைக்குமாம்.. எனவே, உயர்ந்த படிப்பு மேற்கொள்ள விரும்புகின்றவர்கள் ஆராய்ச்சி கல்வியை தொடங்க ஆசைப்படுபவர்கள், மாசி மகத்தன்று அந்த காரியத்தில் இறங்கினால் மிகச் சிறப்பான வெற்றியை அடையலாம்..
இந்த மாதத்தில் வரும் சிவராத்திரியை மகாசிவராத்திரி என்கிறோம். இந்நாளில், சிவ ஆலயங்களில் விடிய விடிய அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். அபிஷேகத்திற்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொடுத்து வணங்க நினைத்த காரியம் கைகூடும். இந்த மாதத்தில் மகாவிஷ்ணுவை துளசி இலையால் அர்ச்சனை செய்து இதயபூர்வமாக பூசித்தால் அனைத்து துன்பங்களும் நம்மை விட்டு விலகி ஓடும்.












Click it and Unblock the Notifications