வீட்டில் நெகடிவ் சக்தி அதிகமாக இருக்கா?... பாசிட்டிவ் சக்தியை அதிகரிக்கும் பத்து செயல்கள்

உங்கள் வீட்டில் தேவையற்ற பொருட்களை சேர்த்து வைக்காதீர்கள். நேர்மறை ஆற்றலை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது என்று பார்க்கலாம்.

Subscribe to Oneindia Tamil

மதுரை: வீட்டில் தேவையற்ற பொருட்களை சேர விடாதீர்கள். அது எதிர்மறை ஆற்றலை ஈர்ப்பதோடு நேர்மறை ஆற்றலை விரட்டி விடும். சிலர் எப்போதும் வீட்டை இருட்டாகவே வைத்திருப்பார்கள். அது எதிர்மறை ஆற்றலை அதிகரிக்கும். வீட்டை நன்கு வெளிச்சமாக வைத்திருக்க வேண்டும். வெளிச்சம் எதிர்மறை சக்தியை நீக்கி நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும்.

வீட்டில் அனைத்து ஜன்னல்களையும் நன்கு திறந்து வையுங்கள். நல்ல காற்றோட்டமும் வெயிலும் உள்ளே வருவது எதிர்மறை ஆற்றல்கள் உள்ளே புகுவதை தடுக்கும், எடுக்கும்.

வீட்டில் தேவையற்ற பொருட்களை சேர விடாதீர்கள். அது எதிர்மறை ஆற்றலை ஈர்க்கும் காந்தமாகி அவற்றை ஈர்த்து சேர்க்கும். எனவே ரிப்பேரான மின்சாதனங்கள் தேவையற்ற பொருட்களை உடனே குப்பையில் வீசி விடுங்கள்.

குப்பைகள் அற்ற வீடு

குப்பைகள் அற்ற வீடு

தரையை பெருக்கித் தள்ளுவதும் எதிர்மறை ஆற்றல்களை அசைத்து குப்பையோடு குப்பையாக வெளியேற்றும்

கல் உப்புக்கும் இந்த சக்தி அபாரம். வீட்டை துடைக்கும் போதோ கழுவும் போதோ, ஒரு கை கல் உப்பை வாளியில் போட்டு அந்த நீரை உபயோகிப்பதும் அதிக பலனை தரும்.

கல் உப்பு கரைசல்

கல் உப்பு கரைசல்

கல் உப்பு நீரில் கரைத்து குளித்தாலோ, கை கால்களை அவ்வபோது சற்று நேரம் ஊற வைப்பதாலோ நம் உடலை பற்றி உள்ள எதிர்மறை ஆற்றல்களை சுத்தப்படுத்தலாம். வீட்டின் தரையை கல் உப்பு கலந்த கரைசலால் சுத்தம் செய்யவும். இதனால் எதிர் மறை சக்தியான தீய சக்தி நீங்கும்.

சாம்பிராணி புகை

சாம்பிராணி புகை

வெண்கடுகு, சாம்பிராணி, விஷ்னுகிரந்தி, கோரோஜனை,நொச்சி இலை போன்ற மூலிகைகளை சேர்த்து வீட்டில் மூலிகை சாம்பிராணி புகையை அனைத்து அறைகளிலும் படும்படி செய்ய வேண்டும். இதன் மூலம் வீட்டில் உள்ள தீயவைகள் விலகி நன்மைகள் உண்டாவது உறுதி. வீட்டின் ஒரு மூலையில் கண்ணாடி டம்ளரில் சுத்தமான நீருடன் கல் உப்பு கரைத்து வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் எதிர்மறை ஆற்றல் பதிப்புகள் குறையும்.

வெளிச்சமான வீடு

வெளிச்சமான வீடு

சூரிய உதயத்தின் வெளிச்சம் வீட்டினுள் படுவதால் எதிர்மறை சக்திகள் விலகி. சூரிய வெளிச்சம் வழியாக ஊடுருவி வருகின்ற சக்தி நன்மை உண்டாக்கும் நேர்மறை ஆற்றல் வீட்டில் பரவும். காலை நேரத்தில் ஜன்னல், கதவுகளை திறந்து வையுங்கள்.

எலுமிச்சம்பழம்

எலுமிச்சம்பழம்

ஒரு கண்ணாடி பாத்திரத்தில் ஒரு எலுமிச்சை பழத்தை வைத்து தண்ணீர் ஊற்றி வைக்க எதிர்மறை சக்தியை தடுக்கும். ஆகாச கருடன் கிழங்கு ஒன்றை வாங்கி வாசற்கதவிற்கு மேலாக கட்டி விட்டால் எதிர்மறை சக்திகள் எளிதில் வீட்டிற்குள் நுழையாது.

நேர்மறை சக்தி அதிகரிக்க

நேர்மறை சக்தி அதிகரிக்க

வீட்டிற்குள் வெறும் கால்களில் நடப்பது நல்லது. பூமியில் நம் பாதம் பதிவதால் நம்முள் இருக்கும் எதிர்மறை ஆற்றல்களை பூமி ஈர்த்துக் கொள்ளும். இதனால் நம் உடல் ஆற்றலை தக்க வைத்து சமன்படுத்தும். வெளியே வெட்டவெளியில், தோட்டத்தில் தினம் நடைபயிற்சி செய்வது, நேர்மறை ஆற்றல்களை மீண்டும் ஊக்கமளித்து நமக்கு புத்துணர்வை அளிக்கும்.

நேர்மறை எண்ணங்கள்

நேர்மறை எண்ணங்கள்

வருடம் தவறாமல் கணபதி ஹோமம் செய்து வந்தால் வீட்டில் உள்ள தீய சக்திகள், பில்லி, சூனியம், மாந்திரீக செயல்கள், எதிர்மறை சக்திகள் விலகி நேர்மறை சக்தி அதிகரிக்கும். தொடர் பிரார்த்தனைகள் வீட்டில் நேர்மறை ஆற்றலை நூறு சதவிகிதம் அதிகப்படுத்தும். நமது எண்ணம், செயல், பேச்சு அனைதையும், நாம் நேர்மறையாக வைத்திருக்க வேண்டும். இவை எதிர்மறையாக இருந்தால், எதிர்மறை ஆற்றல்களை அதிகமாக நம்முள் ஈர்த்துவிடும்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+