தீபாவளி கங்கா ஸ்நான யாத்திரை.. தென்காசி டூ வாரணாசி.. ராமேஸ்வரம் வரை ரயில் பயணம்.. முழு விபரம்
சென்னை: காசி யாத்திரை செல்ல வேண்டும் என்பது பலருக்கும் விருப்பம் இருக்கும் வாழ்நாளில் ஒருமுறையாவது காசி விஸ்வநாதரை தரிசிக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருப்பவர்களாகவே பாரத் கவுரவ் யாத்திரை சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. தென்காசியில் இருந்து வாரணாசிக்கு, 'தீபாவளி கங்கா ஸ்நான யாத்திரை' என்ற பெயரில் பாரத் கவுரவ் யாத்திரை ரயில் நவம்பர் 9ஆம் தேதி இயக்கப்படுகிறது.
தீபாவளி நாளில் லட்சுமி குபேர பூஜை செய்வது போல அன்னபூரணியை விரதமிருந்து வணங்க வற்றாத செல்வங்களும், உணவும் கிடைக்கும் என்பது ஐதீகம். தனதிரயோதசி தொடங்கி தீபாவளி, அமாவாசை நாட்களில் காசியில் தங்கமயமாய் காட்சி தரும் அன்னபூரணியை தரிசிக்க வாழ்நாள் முழுவதும் அள்ள அள்ள குறையாத அன்னமும் செல்வமும் கிடைக்கும்.

தீபாவளியன்று காசியில் அன்ன கூடம் என்ற நிகழ்வில் பலவித உணவுகள், பலகாரங்கள் வைத்து பூஜை செய்து அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப்படும். மறுநாள் லட்டு தேரில் அன்னபூரணி ஊர்வலம் வருவதைக்காண கண் கோடி வேண்டும். எண்ணற்ற லட்டுகளால் உருவான தேரில் உள்ள லட்டுக்களை பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுப்பார்கள்.
தீபாவளி நாளில் காசியில் கங்கா ஸ்நானம் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு ஐஆர்சிடிசியின் 'தீபாவளி கங்கா ஸ்நான யாத்திரை' ரயில் நவம்பர் 9ஆம் தேதி இயக்கப்பட உள்ளது. வரும் நவம்பர் 9ம் தேதி அதிகாலை 3.50 மணிக்கு புறப்படும் இந்த ரயில், தஞ்சாவூர், சிதம்பரம், செங்கல்பட்டு, சென்னை எழும்பூர், விஜயவாடா, பிரயாக்ராஜ் வழியாக, நவம்பர் 11ம் தேதி இரவு 10.30 மணிக்கு வாரணாசியை அடையும். பின்னர் நவம்பர் 13ஆம் தேதி இரவு 11.00 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு, கயா, சம்பல்பூர், விஜயவாடா, சென்னை எழும்பூர், செங்கல்பட்டு, தஞ்சாவூர், ராமேஸ்வரம் வழியாக, 17ம் தேதி இரவு தென்காசி திரும்பலாம்.
இந்த ரயிலில் எகானமி வகுப்பிற்கு ஒரு நபருக்கு ரூ. 16,850 செலவாகும், அதே சமயம் கம்ஃபர்ட் வகுப்பைத் தேர்ந்தெடுக்கும் நபர்கள் ரூ. 30,500 செலுத்த வேண்டும். இந்த ரயில் பயணம் பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கம், வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயில், கயாவில் உள்ள விஷ்ணு பாதை கோயில் மற்றும் ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோயில் போன்ற புனித இடங்களை உள்ளடக்கும்.
4 ஏசி மற்றும் 7 ஸ்லீப்பர் கிளாஸ் பெட்டிகள் கொண்ட பாரத் கவுரவ் சிறப்பு சுற்றுலா ரயிலில் ஸ்லீப்பர் வகுப்பில் பயணம் செய்வதற்கான கட்டணம் ரூ.16,850 ஆகவும், ஏசி பெட்டிகளுக்கு ஒரு நபருக்கு ரூ.30,500 ஆகவும் இருக்கும். 5 முதல் 11 வயது வரையிலான குழந்தை பயணம் செய்தால் டிக்கெட் விலை ரூ.15,850 மற்றும் ரூ.29,100 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து சுற்றுலாப் பயணிகளும் வாக்காளர் அடையாள அட்டை/ஆதார் அட்டை மற்றும் கோவிட்-19 இறுதி டோஸ் சான்றிதழை எடுத்துச் செல்ல வேண்டும்.
ஐஆர்சிடிசி சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளும் மக்களுக்கு காலை தேநீர், காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவு வழங்கப்படும். சைவ உணவுகள் மட்டுமே வழங்கப்படும். ஐஆர்சிடிசி பயணிகளுக்கு பயணக் காப்பீடு வழங்குவதாகவும், நட்புரீதியான சுற்றுலாப் பயணிகளை வழங்குவதாகவும் உறுதியளிக்கிறது. ஐஆர்சிடிசி சுற்றுலா ஏற்பாட்டு மேலாளர்கள் சுற்றுப்பயணம் முழுவதும் பயணிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி












Click it and Unblock the Notifications