மணி பிளாண்ட்டை வைத்தும் பணம் வரலயா? மணி பிளான்ட்டுடன் இந்த இலையை சேர்த்து வெச்சு பாருங்க! செம வாஸ்து

Subscribe to Oneindia Tamil

சென்னை: வீட்டில் வறுமை நீங்கி செல்வம்பெருக, வாஸ்து செடிகளை வளர்க்கலாம்.. அந்தவகையில், மணிபிளான்ட்கள் மிகவும் பிரபலமானது.. மணி பிளாண்ட்களை வீட்டில் வளர்க்க காரணம் என்ன? மணி பிளான்ட்களை மொட்டை மாடியில் வைக்கலாமா? மணி பிளான்ட்களை வீட்டில் வைத்து வளர்த்தும்கூட பணக்கஷ்டமா? இதுபோன்ற பிரச்சனைகள் இருந்தால் என்ன செய்யலாம் என்பதை பற்றி சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.

மணிபிளான்ட்களை பெரும் வீட்டின் ஹாலில் வைத்திருப்பார்கள்.. இதற்கு காரணம், காற்றிலுள்ள கார்பன் மோனாக்சைடு, ஃபார்மாடிகைடு, பென்சைன் போன்ற விஷத்தன்மையை கிரகித்து கொண்டு, சுத்தமான ஆக்சிஜனை வெளியிடுகிறது.. இதனால், ஹாலில் வைக்கப்பட்டுள்ள டிவி, செல்போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக் கருவிகளின் கதிர்வீச்சுக்களை தனக்குள் இந்த செடிகள் உள்ளிழுத்து கொள்ளும்,.

மணி பிளாண்ட் வைத்தும் பணம் வரலயா

அதுமட்டுமல்ல, மணி பிளான்ட்களை வளர்ப்பது வீட்டிற்குள் பாசிட்டிவ் எனர்ஜியை கொண்டுவந்துவிடும்.. அந்தவகையில், ஹாலில் மட்டுமல்லாமல், வீட்டிற்கு வெளியிலும் மணிபிளான்ட் வைக்கலாம். சமையலறையில் வைக்கலாம்.. பூஜையறையில் வைக்கலாம்.. வீட்டிற்கு வெளியேவும் வைக்கலாம்.. அலுவலகத்தில் வைக்கலாம், அலுவலக மேஜைகளிலும் வைத்து கொள்ளலாம்..

எனினும் வீட்டில் மணி பிளான்ட்களை வளர்க்கும்போது சில விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக, வடக்கு, வடகிழக்கு திசையில் வைக்காமல், மணி பிளாண்ட் தென்கிழக்கு திசையில் வைக்கலாம். மணிபிளான்ட்களை வைத்தும்கூட கஷ்டமும், வறுமையில் பீடித்திருந்தால், அதற்கு பல காரணங்கள் இருக்கலாம்..

பொருளாதார நிலைமை

முக்கியமாக, இந்த செடியை சுத்தமாக பராமரித்தால் மட்டுமே வீட்டில் வளர்க்க வேண்டும்.. செடியின் சுத்தம்தான், வீட்டிற்குள் பொருளாதார நிலைமையை சீர்தூக்குகிறது... செடிகள் தூய்மையற்றும், அதிலுள்ள இலைகள் பழுத்தும், உதிர்ந்தும், வாடியும் காணப்பட்டால், வீட்டின் நிதிநிலைமை இன்னும் மோசமாகிவிடும்.

பழுத்த இலைகள் காணப்பட்டால் அது குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கிய குறைபாட்டை குறிப்பதாகும்.. எனவே பழுத்த இலைகளை வெட்டிவிட வேண்டும்.. இலைகள் காய்வதும், பொருளாதார மந்தத்தை தந்துவிடும்.. எனவே இலைகள் காய்வதற்கு முன்பேயே வெட்டிவிட வேண்டும்.. ஆனால், வெள்ளிக்கிழமைகளில் இந்த செடியை வெட்டக்கூடாது, தானமாக இந்த செடியை மட்டும் தரக்கூடாது... சூரிய ஒளி நேரடியாக படாமல் வைக்க வேண்டும்..

இப்படி வளரக்கூடாது

தரையில் மண் தொட்டியில் இந்தசெடியை வளர்ப்பதாக இருந்தாலும், செடி முழுவதுமாக தரையில் படரவிடக்கூடாது.. எப்போதுமே ஒரு கயிற்றில் கட்டி, செடியை படர விடவேண்டும்.. அல்லது நூலிலோ, அல்லது குச்சியிலோ கட்டி படரவிட வேண்டும். அப்போதுகூட மேல்நோக்கியே ஏற்றி வைக்க வேண்டும்.. அப்போதுதான் இலைகள் அடர்த்தியாக வளரும்.. இந்த அடர்த்தியே குடும்பத்தில் நிதியின் அடர்த்தியாக பார்க்கப்படுகிறது.

எளிய பரிகாரங்கள்

மணி பிளான் வைத்தும் பணப்பிரச்சனை இருந்தால், மணி பிளாண்ட் வைத்திருக்கும் மண் தொட்டிக்குள், 1 ரூபாய் நாணயத்தை புதைத்து வைக்கலாம்.. செடிக்கு தண்ணீர் ஊற்றும்போதும், நிதிநிலைமை சீராக வேண்டும் என்று வேண்டிக் கொள்ள வேண்டும்..

அதேபோல, சிறிது காய்ச்சாத பாலை நீரில் கலந்து வெள்ளிக்கிழமைகளில் காலை 6 முதல் 7 மணிக்குள் ஊற்றிவரலாம். இதுவும் பணப்பற்றாக்குறையை தீர்க்கும்.. லட்சுமி பூஜை செய்த பிறகு, லட்சுமி தேவிக்கு பிடித்த பாலை இந்த செடிக்கு ஊற்றலாம்.

அதேபோல மணி பிளான்ட் செடியுடன், வெற்றிலை செடியையும் சேர்த்து வளர்த்தால் வீட்டில் நிதி, ஆரோக்கியம் பெருகும் என்பார்கள்..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+