பந்தளத்தில் இருந்து சபரிமலை நோக்கி புறப்படும் திருவாபரணம்..கூடவே வரும் கருடன்..மெய்சிலிர்க்கும்
கேரளா: மகர விளக்கு பூஜை நாளில் சபரிமலை ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணங்கள் இன்று பந்தளம் அரண்மனையில் இருந்து ஊர்வலமாக புறப்படுகிறது. திருவாபரணம் ஊர்வலத்தின் போது வானத்தில் கருடன் வட்டமிடும் காட்சியை காண பக்தர்களின் மெய்சிலிர்க்கும். ஜனவரி 14ஆம் தேதி மாலையில் மகரவிளக்கு பூஜை நடைபெற உள்ள நிலையில் பிற்பகல் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் பம்பையில் இருந்து சபரிமலை சன்னிதானம் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் முதல் தேதி, சபரிமலையில் வீற்றிருக்கும் ஐயப்பன் ஆலயத்தில் மகர விளக்கு பூஜையும், அன்று மாலை மகரஜோதி தரிசனமும் நடைபெறும். இது மிகவும் பிரசித்தி பெற்ற வழிபாடுகளின் ஒன்றாகும்.

மகர விளக்குப் பூஜையை முன்னிட்டு, அவர் வளர்ந்த பந்தளராஜா அரண்மனையில் இருந்து திரு ஆபரணம் கொண்டு வரப்படும். பந்தளராஜா அரண்மனையானது, பந்தளத்தில் அச்சன்கோவில் ஆற்றை ஒட்டியுள்ள ஐயப்பனின் வலிய கோயிக்கால் என்றழைக்கப்படும் கோவிலுக்கு அருகில் இருக்கிறது.
சபரிமலைக்கு வரும் பக்தர்கள் அனைவரும், பந்தளத்திற்கு வந்து அங்குள்ள ஆலயத்தில் பிரார்த்தனை செய்து விட்டு, பின்னர் அரண்மனையில் உள்ள திரு ஆபரணத்தை பக்தியுடன் தரிசித்துச் செல்வார்கள். கார்த்திகை மற்றும் மார்கழி ஆகிய இரண்டு மாதங்கள் மட்டுமே இந்த திருஆபரணம் பக்தர்களின் தரிசனத்திற்காக வைக்கப்படும்.
மகர விளக்குப் பூஜைக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர், வலிய கோயிக்கால் சாஸ்தா ஆலயத்தில் இருந்து திரு ஆபரணத்தை ஊர்வலமாக தூக்கிக்கொண்டு சபரிமலையை நோக்கி புறப்படுவார்கள். ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் அந்த ஆபரணங்களை, பந்தளராஜா வம்சத்தைச் சேர்ந்த மூத்த குடும்ப உறுப்பினர் தலையில் சுமந்தபடி கொண்டு செல்வார்.
ஐயப்பனின் புனித தங்க நகைகளானது திருவாபரணம் என்று அழைக்கப்படுகிறது. திருவாபரணப் பெட்டி மொத்தம் மூன்று பெட்டிகளைக் கொண்டது அது. திருவாபரணப் பெட்டி,வெள்ளிப் பெட்டி,கொடிப் பெட்டி
திருவாபரணப்பெட்டி மட்டுமே ஐயப்பன் சன்னிதியை அடைகிறது. மாளிகைப்புறத்தம்மன் சன்னிதிக்கு கொடிப்பெட்டி கொண்டு செல்லப்படும்.
பந்தளம் அரண்மனையின் பொறுப்பில் பாதுகாப்பாக பூட்டி வைக்கப்பட்டிருக்கும் திருவாபரணம் வருடத்தில் சில நாட்கள் மட்டுமே வெளியே கொண்டு வரப்படுகிறது. சுத்தமான பசுந்தங்கத்தால் ஆன அந்த ஆபரணங்கள், பன்னெடுங்காலத்துக்கு முன்பு, பந்தள மன்னனால் சபரிமலை சாஸ்தாவுக்காக செய்யப்பட்டது. பலரும் நினைப்பது போல இது ஐயப்பன் அணிந்து கொண்டிருந்த ஆபரணங்கள் இல்லை. சபரிமலையில் கோவில் கொண்ட தர்ம சாஸ்தா ஐயப்பனுக்கு பந்தள மன்னரால் உருவாக்கப்பட்ட ஆபரணங்கள்.
பந்தளம் அரண்மனையில், பூஜைகளை முடித்து சபரிமலை புறப்படுவதற்காக பந்தளமன்னர் குடும்ப பிரதிநிதி உட்பட அனைவரும் காத்திருப்பார்கள். வானில் கருடன் வந்து திருவாபரணத்தை வட்டமிட்ட பிறகுதான் திருவாபரண யாத்திரை புறப்படும். இந்த ஆபரணப் பெட்டியை சுமப்பதற்காகவே பாரம்பரியமாகவே சில குடும்பங்கள் இருக்கிறார்கள். அவர்களே இந்த பெட்டிகளை சுமப்பதற்காக விரதம் இருந்து வருகிறார்கள்.
இன்றைய தினம் திருவாபரண ஊர்வலம் பந்தளம் அரண்மனையில் இருந்து புறப்படுகிறது. இந்த திரு ஆபரணம் ஊர்வலமாக புறப்படும் நேரத்தில் இருந்து, சபரிமலை ஐயப்பன் ஆலயத்தைச் சென்றடையும் வரை மட்டும் வானத்தில் கருடன் தோன்றி, திருவாபரணம் செல்லும் பாதையில் கூடவே காவலுக்கு பறந்து வரும். இது இன்று வரை ஆண்டுதோறும் நடந்து வரும் ஒரு அதிசய நிகழ்வாகும். இதனை காணும் பக்தர்கள் மெய் சிலிர்க்கும். அப்போது பக்தர்கள் எழுப்பும் சாமியே சரணம் ஐயப்பா என்ற முழக்கம் சபரிமலை எங்கும் எதிரொலிக்கும்.
மூன்று நாட்கள் நடைபெறும் இந்த ஊர்வலத்தில் அரச குடும்பத்தினரால் நியமிக்கப்பட்ட பிரதிநிதிகள் இந்த ஆபரண பெட்டிகளை காடுகள் மற்றும் ஆறுகள் வழியாக கடந்து கொண்டு செல்கின்றனர். மகர விளக்கு பூஜை சன்னிதானத்தில் நடைபெறும் சமயத்தில் பொன்னம்பல மேட்டில் ஒளிரும் ஜோதி தரிசனத்தைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்திருக்க தங்க ஆபரணங்கள் அணிந்து காட்சி தரும் ஐயப்பனை தரிசனம் செய்ய காண கண் கோடி வேண்டும். பொன்ஆபரணங்களை அணிந்து அரசனாக காட்சி அளிக்கும் ஐயப்பனை ஒரு முறை மட்டுமே தரிசிக்க முடியும் என்பதால் ஏராளமான பக்தர்கள் மகர விளக்கு பூஜையைக்காண வருவார்கள்.
இந்த ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி மகரவிளக்கு பூஜை நடைபெறும் நாளில் பிற்பகல் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என தேவசம்போர்டு நிர்வாகம் தெரிவித்துள்ளது. திருவாபரணம் சபரிமலை கோவிலுக்குள் செல்லும்போது, ஊர்வலத்தின் மூன்றாம் நாளாகிய மகர ஜோதி தரிசனம் நடைபெறும். பொன்ஆபரணங்களை அணிந்த ஐயப்பனை ஒரு முறை மட்டுமே தரிசிக்க முடியும்.
தங்க ஆபரணங்களில் அரசனாக ஜொலிக்கும் ஐயப்பனை தரிசிக்கு பக்தர்களுக்கு பேரானந்தம் ஏற்படும். அப்போது பக்தர்கள் சாமியே சரணம் ஐயப்பா என எழுப்பும் சரண கோஷம் சபரிமலை எங்கும் எதிரொலிக்கும். அந்தக் கணமே பொன்னம்பல மேட்டில் ஜோதி தரிசனம் பார்ப்பது தனி பரவசம். மெய்சிலிக்கும் அந்த அனுபவத்தை வர்ணிக்க வார்தைகள் கிடையாது.
மகர விளக்கு பூஜைக்காக இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ளதால் தினசரியும் 90 ஆயிரம் பக்தர்கள் முன்பதிவு செய்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். ஜனவரி 20ஆம் தேதி பந்தள அரண்மனை குடும்பத்தாரின் ஆச்சார வழிபாடுகள் மற்றும் சடங்குகளை தொடர்ந்து அன்று இரவு சபரிமலை நடை அடைக்கப்படும். இத்துடன் இந்த ஆண்டுக்காக மண்டல மகரவிளக்கு பூஜை காலங்கள் நிறைவடைகிறது. அடுத்தது மாசி மாத பிறப்பு நாளில் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படும்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications