ஏப்ரல் விடுமுறையில் ஏழுமலையானை தரிசிக்க ஆசையா? ரூ.300 தரிசன டிக்கெட் நாளை ரிலீஸ்

Subscribe to Oneindia Tamil

திருப்பதி: ஏழுமலையான் கோயிலில் ஏப்ரல் மாதத்திற்கான 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் புதன்கிழமை 24ஆம் தேதி ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. காலை 10 மணி முதல் https://tirupatibalaji.ap.gov.in என்கிற தேவஸ்தான இணையத்தின் மூலம் முன்பதிவு செய்யலாம்.

திருப்பதி திருமலையில் அருள்பாலிக்கும் சீனிவாச பெருமாளை தரிசனம் செய்ய தினசரியும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மணிக்கணக்கில் காத்திருக்கின்றனர். விரைவு தரிசனத்திற்காக ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும். 4 மாதத்திற்கு முன்பே ஆர்ஜித சேவை தரிசனத்திற்கும் 300 ரூபாய் தரிசனத்திற்கும் டிக்கெட்டுகள் வெளியிடப்படுவது வழக்கம்.

Tirumala Balaji Dharsan: TTD to release 300 dharsan tickets on 24th January for the month of April

ஏழுமலையானை வரும் ஏப்ரல் மாதத்தில் பக்தர்கள் தரிசிக்க ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து கொள்வது குறித்து திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கான முன்னுரிமை அடிப்படையிலான தரிசன டோக்கன்கள் இன்று மதியம் 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது.

ஏப்ரல் மாதத்திற்கான 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் புதன்கிழமை 24ஆம் தேதி ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. காலை 10 மணி முதல் https://tirupatibalaji.ap.gov.in என்கிற தேவஸ்தான இணையத்தின் மூலம் முன்பதிவு செய்யலாம் என திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. இதையடுத்து திருமலையில் தங்கும் அறைகளுக்கான முன்பதிவு டிக்கெட்கள் நாளை மறுநாள் ஜனவரி 25ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.

ஏப்ரல் மாதம் விடுமுறை காலம் என்பதால் கூட்டம் அதிகம் இருக்கும் என்பதால் ஏழுமலையானை தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்கள் அதற்கேற்ப திட்டமிட்டுக்கொள்வது நல்லது. ஏப்ரல் மாதம் திருமலையில் தேவஸ்தானத்தின் ஸ்ரீவாரி சேவை மூலம் சேவை செய்ய விரும்பும் பக்தர்கள் இம்மாதம் 27ஆம் தேதி காலை 11 மணிக்கு தங்களுடைய பெயர்களை தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முன் பதிவு செய்து கொள்ளலாம்.

அன்று மதியம் 12 மணி முதல் திருப்பதி மலையில் நடைபெறும் நவநீத சேவையில் பங்கு பெற விரும்பும் பக்தர்களும், பகல் 1 மணி முதல் உண்டியல் காணிக்கை பணம் கணக்கிடும் பரக்காமணி சேவையில் பங்கு பெற விரும்பும் பக்தர்களும் தங்கள் பெயர்களை தேவஸ்தானத்தின் https://tirupatibalaji.Ap.Gov.in இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+