ஸ்ரீராமநவமி 2025 எப்போது? வழிபட வேண்டிய நல்ல நேரம் என்ன? ராமருக்கு பிடித்த நெய்வேத்தியம் எது?
சென்னை: ராமரை போற்றும் ராமநவமி திருநாள் எப்போது வருகிறது. இந்த நாளன்று என்ன உணவுகளை செய்து வழிபட வேண்டும் என்பது குறித்து தெரிந்து கொள்வோம். அத்துடன் ராமநவமி அன்று உச்சரிக்க வேண்டிய மந்திரம் என்ன என்பதையும் பார்க்கலாம்.
இதுகுறித்து ஆத்ம ஞான மையம் யூடியூப் சேனலில் ஆன்மீக சொற்பொழிவாளர் தேச மங்கையர்க்கரசி கூறியிருப்பதாவது: 2025 ம் ஆண்டு ஸ்ரீராமநவமி என்றைக்கு வருகிறது, ராமரை எப்படியெல்லாம் வழிபாடு செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம். பல்வேறு அற்புதங்களை நிகழ்த்திக் கொண்டிருப்பதுதான் ராம வரலாறு.

தசாவதாரங்களில் ராமரை ஏன் எல்லோரும் கொண்டாடுகிறார்கள் என்பதற்கு ஒரு முக்கிய காரணம் உண்டு. நம்மை போல் மானுடனாக அவதாரம் எடுத்து, ஒரு மானுடன் எவ்வளவு துன்பங்களை அனுபவிப்பாரோ அவரும் அனுபவித்து, அந்த துன்பங்களில் இருந்து எப்படி நிவர்த்தி பெறலாம் என்பதை தனது வாழ்க்கையில் ஒரு தத்துவமாக நமக்கு விளக்கிக் காட்டியதுதான், ராமர் மீது நமக்கு மிகப் பெரிய ஈர்ப்பு இருக்கிறது என சொல்லலாம்.
ராமாயணம்
ஒரு முழு ராமாயணத்தை சுருக்கி அப்படியே ஒரு பாட்டில் சொல்ல முடியுமா என கேட்டால் நிச்சயம் அவரால் முடியும். ராமர் இந்த உலக மக்களுக்காக எப்படி வாழ்ந்து காட்டினார் என்ற வாழ்க்கை வரலாற்றை மிக அழகாக தெரிந்து கொள்ள கூடிய ஒரு சரித்திரம்.
ராமநவமி 2025
இப்படிப்பட்ட ராமரை ஆண்டுதோறும் நாம் கொண்டாடி மகிழ்கிறோம் என்றால் அதற்கான அழகான திருவிழா, ஸ்ரீராமநவமி திருவிழா! இந்த திருவிழா குழந்தை பேறுக்காக காத்திருக்கக் கூடியவர்களுக்கு ஒரு பொக்கிஷமான நாளாகும். எப்படி தசரத சக்கரவர்த்தி தவமிருந்து அழகான குழந்தையாக ராமர் கிடைத்தாரோ, அது போல் பல ஆண்டுகளாக குழந்தைக்காக தவமிருப்பவர்களுக்கு இந்த நாள் ஒரு வரமாகும்.
குழந்தை பேறு
ராமநவமி அன்று விரதமிருந்து ராமருடைய கருணையால் குழந்தை பேறு பெற்றவர்களும் பல்லாயிரக்கணக்கான மக்கள் இருக்கிறார்கள். அந்த வகையில் ராமநவமி, வரும் 6ஆம் தேதி வருகிறது. அன்றைய தினம் நவமி திதியானது அதிகாலை 1.08 மணி முதல் அடுத்த நாள் 7ஆம் தேதி அதிகாலை 12.25 மணி வரை இருக்கிறது.
ராமரின் நட்சத்திரம் புனர்பூசம்
புனர்பூச நட்சத்திரமானது 5ஆம் தேதி காலை 10.48 மணி முதல் 6ஆம் தேதி காலை 10.31 மணி வரை இருக்கிறது. ராமர் பிறந்தது புனர்பூச நட்சத்திரம், நவமி திதி! இந்த நட்சத்திரமும் திதியும் சேர்ந்து வரும் நேரம் என பார்த்தால் 6ஆம் தேதி காலை 10.30 மணி வரை உள்ளது.
எப்போது பூஜை செய்யலாம்
எனவே காலை 6 மணி முதல் 10.20 வரை நவமி திதியும் புனர்பூசம் நட்சத்திரமும் உள்ளது. அப்போதும் பூஜை செய்யலாம். இல்லாவிட்டால் மாலையில்தான் பூஜை செய்யும் பழக்கம் என்றால் மாலை நேரத்திலும் 6 மணிக்கு மேல் பூஜை செய்யலாம்.
மாதவிடாய் காலத்தில்
குழந்தை பேறுக்காக காத்திருப்பவர்கள், காலை முதல் உங்களால் முடிந்தால் விரதம் இருக்கலாம். முடியவில்லை என்றால் எளிமையான உணவுகளை சாப்பிடலாம். கணவன், மனைவி இருவருமே விரதம் இருக்கலாம். மாதவிடாய் ஆகிவிட்டால் விரதம் இருக்கலாம். ஆனால் வழிபாடு, பூஜை செய்யாமல் இருந்து கொள்ளலாம்.
உச்சரிக்க வேண்டிய மந்திரம்
மற்றவர்கள் விரதமிருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. வழக்கமாக விரதம் இருப்பவர்கள் விரதமிருந்து ராமரின் படத்திற்கு துளசி மாலை அணிவித்து ஸ்ரீராமஜெயம் என எழுதி அதை மாலையாக போட வேண்டும். துளசி தீர்த்தம், பானகம் உள்ளிட்டவைகளை வைத்தும் வணங்கலாம்.
பிடித்த உணவு
ராமருக்கு மிகவும் பிடித்தமான நெய்வேத்தியம், பால் பாயாசம்! இதை செய்ய முடியாதவர்கள் பழங்களை வைத்துக் கொள்ளலாம். ஸ்ரீராமஜெயம் என்ற மந்திரத்தை 108 முறை ஜபம் செய்யுங்கள். 3 முறை ராமநாமம் சொன்னாலே 1000 முறை நாராயணனை அர்ச்சனை செய்த பலன் கிடைக்கும்.
1000 முறை சொன்னதன் பலன்
ரா என்ற எழுத்துக்கு 2 மா என்ற எழுத்துக்கு 5 என்ற எண்ணிக்கையும், 2ஐயும் 5 ஐயும் பெருக்கினால் 10 வருகிறது. ஒரு முறை ராமா என சொன்னால் 10 என்ற எண்ணிக்கையை குறிக்கும். ராமா ராமா ராமா என 3 முறை சொன்னால் 10*10*10= 1000 வரும். இதைத்தான் 1000 முறை சொன்னதன் பலன் கிடைக்கும் என்கிறார்கள். இவ்வாறு தேச மங்கையர்க்கரசி தெரிவித்துள்ளார்.
-
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி












Click it and Unblock the Notifications