அம்பானிக்கு செக் வைத்த ஏர்டெல்! இனி ஸ்டோரேஜ் பிரச்னையே இருக்காது! அன்லிமிடெட் கிளவுட் ஸ்டோரேஜ் இலவசம்
மும்பை: நமது நாட்டின் டாப் டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றான ஏர்டெல் நிறுவனம் இப்போது யூசர்களை கவர முக்கியமான இரு திட்டங்களை அறிவித்துள்ளன. வழக்கமாக ஓடிடி சப்ஸ்கிரிப்ஷன்கள் மட்டுமே இலவசமாக அறிவிக்கப்படும் நிலையில், இப்போது ஏர்டெல் அதை அடுத்த லெவலுக்கு எடுத்துச் சென்றுள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
இந்தியாவில் இப்போது உள்ள டாப் டெலிகாம் நிறுவனங்கள் என்றால் அது ஏர்டெல் மற்றும் ஜியோ தான். இரு நிறுவனங்களும் நாட்டில் தனது மார்க்கெட்டை விரிவுபடுத்தவும் யூசர்களை பிடிக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

ஏர்டெல் vs ஜியோ
டெலிகாம் நிறுவனங்கள் யூசர்களை ஈர்க்க பல்வேறு சலுகைகளை உடன் இணைத்து வழங்கி வருகிறது. அதாவது டெலிகாம் சேவைகளுடன் சேர்த்து ஓடிடி உள்ளிட்ட சலுகைகளை வாரி வழங்கி வருகிறது. ஜியோ வசம் ஜியோ ஹாட்ஸ்டார் இருப்பதால் அது அவர்களுக்குப் பெரிய வாய்ப்பை ஏற்படுத்தித் தந்துள்ளது.
ஏர்டெல்
இப்போது ஏர்டெல் நிறுவனம் ஜியோவுக்கு செக் வைக்கும் வகையில் இரண்டு முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. முதலில் ஏர்டெல் நிறுவனம் வெறும் ரூ.100க்கு ஓடிடி சலுகையை அறிவித்துள்ளது. அதாவது நீங்கள் ரூ.100க்கு ரீசார்ஜ் செய்தாலே உங்களால் ஓடிடி சலுகையைப் பெற முடியும். அதாவது உங்களுக்கு நீங்கள் ரூ.100க்கு ரீசார்ஜ் செய்தாலே போதும். உங்களுக்கு 5 ஜிபி டேட்டா ஒரு மாத வெலிடிட்டி உடன் கிடைக்கும்.
அத்துடன் 30 நாட்களுக்கு ஜியோ ஹாட்ஸ்டார் மொபைல் சப்ஸ்கிரிப்ஷன் என்பதே இதன் சிறப்பம்சம். இப்போது ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அதை பார்த்து ரசிக்க இந்த பிளான் நிச்சயம் கை கொடுக்கும்.
ஸ்டோரேஜ் பிரச்சினை
இதை விட முக்கியமாக இன்னொரு அறிவிப்பை ஏர்டெல் வெளியிட்டுள்ளது. இப்போது நம்மில் பெரும்பாலானோருக்கு டேட்டாவை விட ஸ்டோரேஜ் தீர்வது தான் பெரிய பிரச்சினை. மொபைலில் என்ன தான் 128 ஜிபி, 256 ஜிபி ஸ்டோரேஜ் இருந்தாலும் கூட அவை ஈஸியாக காலியாகிவிடுகிறது. போகும் இடமெல்லாம் நாம் இஷ்டத்திற்குப் போட்டோ, வீடியோக்களை எடுப்பதே இதற்குப் பிரதான காரணம்! ஸ்டோரேஜ் பிரச்சினையை நிச்சயம் நம்மில் பலரும் எதிர்கொண்டு இருப்போம்.
கிளவுட் ஸ்டோரேஜ்
இந்த சிக்கலுக்குத் தீர்வு காணும் வகையில் ஏர்டெல் நிறுவனம் கூகுள் நிறுவனத்துடன் கை கோர்த்து இருக்கிறது. இதன் மூலம் ஏர்டெல் யூசர்கள் கூகுள் கிளவுட் சேவையை இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். 6 மாதங்களுக்கு 100 ஜிபி வரை கிளவுட் ஸ்டோரேஜ் பயன்படுத்தலாம். ஸ்டோரேஜ் இல்லாமல் பலரும் சிரமப்படும் நிலையில், அவர்களுக்கு இது பேருதவியாக இருக்கும்.
அது ஓகே, என்ன ரீசார்ஜ் செய்தால் இந்த ஸ்டோரேஜ் சலுகையைப் பெறலாம் என நீங்கள் கேட்கலாம். போஸ்ட் பெய்ட் மற்றும் ஏர்டெல் வை-பை சேவையைப் பயன்படுத்துவோருக்கு இந்த கூகுள் கிளவுட் சேவை இலவசமாகக் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதை அதிகபட்சம் 5 பேர் வரை ஷேர் செய்தும் பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு இந்த சலுகை எப்போது கிடைக்கும் என்பது குறித்து எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை. ஏர்டெல் இப்போது கூகுள் ஸ்டோரேஜ்ஜை இலவசமாக வழங்கும் நிலையில், ஜியோவும் விரைவில் இதுபோல கூகுள் கிளவுட் ஸ்டோரேஜ்ஜை இலவசமாக வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications