ரொம்ப நாள் வேலிடிட்டி வேணுமா? ஏர்டெல் வழங்கும் சூப்பரான பிளான்ஸ் இதோ! ஒரு நாளுக்கு வெறும் 6 ரூபாய்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய டெலிகாம் நிறுவனமான ஏர்டெல், தமது வாடிக்கையாளர்களை தக்க வைப்பதற்காக புதுப் புது பிளான்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்தவகையில், வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ள ரூ.489 பேக், ரூ.548 பேக் மற்றும் ரூபாய் 589 பேக்குகளின் நன்மைகளைப் பார்க்கலாம்.

Airtel Jio recharge mobile

ரூ.489 பிளான்

ஏர்டெல் வழங்கும் இந்த ரூ. 489 பிளான் மூலம் 6 ஜிபி அதிவேக டேட்டா வசதியைப் பெறலாம். கூடுதலாக, இந்த திட்டத்தில் பேசுவதற்கு அனைத்து நெட்வொர்க்குகளிலும் வரம்பற்ற அழைப்பு வசதி கிடைக்கிறது. இது தவிர, இத்திட்டத்தில் மொத்தம் 600 எஸ்எம்எஸ்களும் இலவசமாக வழங்கப்படுகின்றன. இதனுடன், நீங்கள் அப்பல்லோ 24/7 மெம்பர்ஷிப் மற்றும் மூன்று மாதங்களுக்கு இலவச ஹலோ டியூன் பலனையும் பெறலாம். இந்த ஏர்டெல் பிளான் 77 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது.

ரூ. 489 திட்டத்தின் தினசரி செலவு சுமார் ரூ.6.35. ஒரு நாளைக்கு வெறும் 6 ரூபாயில் நீங்கள் அன்லிமிட்டெட் கால்ஸ், 600 எஸ்.எம்.எஸ் மற்றும் மொத்தமாக 6 ஜிபி அதிவேக டேட்டாவை பெறலாம். அதிக இணைய டேட்டா தேவையில்லாதவர்களுக்கும், குறைந்த விலையில் தங்கள் எண்ணை செயலில் வைத்திருக்க விரும்புவோருக்கும் இந்த ரீசார்ஜ் பிளான் மிகச்சிறந்த சாய்ஸாக இருக்கும்.

ரூபாய் 548 பிளான்

ஏர்டெல்லின் ரூ.548 திட்டமானது அன்லிமிடெட் வாய்ஸ் காலிங், 900 இலவச எஸ்.எம்.எஸ் மற்றும் 7 ஜி.பி அதிவேக டேட்டாவை வழங்குகிறது. இந்த பிளானின் வேலிடிட்டி 84 நாட்கள். கூடுதல் பலன்களை பொறுத்தவரை இலவச Hello tunes மற்றும் Apollo 24|7 Circle subscription மூன்று மாதங்களுக்கு இலவசம்.

ரூ. 548 திட்டத்தின் தினசரி செலவு சுமார் ரூ.6.52. ஒரு நாளைக்கு வெறும் 6.50 ரூபாயில் நீங்கள் அன்லிமிட்டெட் கால்ஸ், 900 எஸ்.எம்.எஸ் மற்றும் மொத்தமாக 7 ஜிபி அதிவேக டேட்டாவை 84 நாட்களுக்குப் பெறலாம். அதிக இணைய டேட்டா தேவையில்லாதவர்களுக்கு இந்த பிளான் ஒரு சிறந்த ஆப்ஷன்.

ரூ.589 பிளான்

ஏர்டெல் வழங்கும் 589 ரூபாய் பிளான் 30 நாட்கள் வேலிடிட்டி காலத்துடன் வருகிறது. இந்த திட்டத்தை ஒரு மாதம் முழுவதும் பயன்படுத்தலாம். இது தவிர, இந்த ரீசார்ஜ் திட்டத்தில் மொத்தம் 50 ஜிபி வரை டேட்டா வழங்கப்படுகிறது.

இதனுடன், உரையாடலுக்கான அன்லிமிட்டட் கால்ஸ் வசதி வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் மொத்தம் 300 எஸ்எம்எஸ் இலவசமாக கிடைக்கும். இந்தத் திட்டம் இலவச ஹலோ டியூன்ஸ், விங்க் மியூசிக் மற்றும் அப்பல்லோ 24|7 சர்க்கிள் சப்ஸ்கிரிப்ஷனையும் வழங்குகிறது. ஃப்ரீ டிவி கனெக்ட் பலனும் இதோடு சேர்ந்து கிடைக்கும். அதிக டேட்டா பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு இந்தத் திட்டம் ஏற்றது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+