ஒரே ஒரு ரீசார்ஜ்.. சாம்பியன்ஸ் டிராபி மட்டுமின்றி.. ஐபிஎல் கூட இலவசமாக பார்க்கலாம்! அசத்தும் ஜியோ
சென்னை: சாம்பியன்ஸ் டிராபி தொடர் இப்போது துபாயில் நடந்து வரும் சூழலில் பலரும் கிரிக்கெட் போட்டிகளைப் பார்க்க ஆர்வமாக இருக்கிறார்கள். அவர்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் விதமாக ஜியோ நிறுவனம் ஸ்பெஷலாக ஓடிடி திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த குறிப்பிட்ட பிளானில் ரீசார்ஜ் செய்வோர் ஜியோ ஹாட்ஸ்டாரில் இலவசமாக மேட்ச் பார்க்கலாம். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாகவே ஓடிடி பயன்பாடு அதிகரித்து வருகிறது. டிவி என்றால் அவர்கள் சொல்லும் நேரத்தில் தான் நிகழ்ச்சிகளைப் பார்க்க முடியும். கூடுதலாக விளம்பரங்கள் பிரச்சினையும் இருக்கும்.

ஓடிடி
ஆனால், ஓடிடிகளில் அந்த பிரச்சினை இல்லை. நாம் விரும்பிய நேரத்தில் விரும்பிய நிகழ்ச்சியைப் பார்க்கலாம் என்று இருக்கிறது. ஓடிடி பயன்பாடு கடந்த சில ஆண்டுகளாகவே நமது நாட்டில் அதிகரிக்க இதுவே காரணமும். குறிப்பாக கிரிக்கெட் போட்டிகளை மக்கள் தங்கள் செல்போனிலேயே ஓடிடி தளங்களில் பார்த்து வந்தனர்.
கடந்த சில காலமாக ஜியோ சினிமாஸில் லைவ் போட்டிகள் ஒளிபரப்பாகி வந்தது. அதுவும் இலவசம் என்பதால் மக்கள் ஆர்வமாக அதில் பார்த்தனர். இதற்கிடையே சமீபத்தில் தான் முக்கிய ஓடிடி தளங்களாக டிஸ்னி+ ஹாட்ஸ்டாரும், ஜியோ சினிமாஸ் ஒரே தளமாக இணைந்தது. அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் ஜியோ ஹாட்ஸ்டார் தளம் வெளியானது.
ஜியோ ரீசார்ஜ்
இது நல்ல விஷயம் தான் என்றாலும் இதில் ஒரு சிக்கலும் இருந்தது. அதாவது, இத்தனை காலம் கிரிக்கெட் போட்டிகளை ஜியோ சினிமாஸில் இலவசமாகப் பார்க்கலாம் என்ற சூழலே இருந்தது. ஆனால், இப்போது ஜியோ ஹாட்ஸ்டாரில் இலவசம் எல்லாம் இல்லை. ஏற்கனவே ஜியோ சினிமாஸ் அல்லது ஹாட்ஸ்டார் சந்தா வைத்துள்ளவர்களுக்கு மட்டுமே இலவசம். மற்றபடி தனியாக ரீசார்ஜ் செய்தால் மட்டுமே ஜியோ ஹாட்ஸ்டாரை பார்க்க முடியும் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது.
இங்கு நம்மில் பலரும் ஓடிடி தளங்களுக்குத் தனியாக சப்ஸ்கிரைப் செய்வதை விட செல்போன் ரீசார்ஜ் திட்டங்கள் உடனேயே ஓடிடி தளங்களுக்கான இலவச சேவையைப் பெறவே விரும்புவார்கள். அதைக் கருத்தில் கொண்டே இப்போது ஜியோ புதிய ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பிளானில் மக்கு ஜியோ ஹாட்ஸ்டார் இலவசமாகக் கிடைக்கும். இதன் மூலம் தற்போது நடக்கும் சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளை இலவசமாகக் காணலாம்.
புதிய பிளான்
இந்த பிளானிற்கு நாம் ரூ.949க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும். இதில் நமக்கு 84 நாட்களுக்குத் தினசரி 2 ஜிபி டேட்டா, அன்லிமிடட் வாய்ஸ் கால், தினசரி 100 எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிடட் 5ஜி சேவை கிடைக்கும். இது தவிர 3 மாதம் அதாவது 90 நாட்களுக்கு ஹாட்ஸ்டார் மொபைல் சப்ஸ்கிரிப்ஷன் இலவசமாகக் கிடைக்கும். தனியாக இதை சப்ஸ்கிரைப் செய்தால் ரூ.149 கொடுக்க வேண்டும். ஆனால், ஜியோ ரீசார்ஜ் உடன் இலவசமாகவே வருகிறது. 3 மாத வெலிடிட்டி இருப்பதால் ஐபிஎல் போட்டிகளைப் பார்க்கவும் கூட இது நமக்கு உதவும்.
தற்போது சாம்பியன்ஸ் டிராபி தொடரை நாம் ரீசார்ஜ் எதுவும் இல்லாமல் இலவசமாக பார்க்கலாம். ஆனால், ஐபிஎல் தொடருக்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்றே தெரிகிறது. ஜியோ இதுவரை அது தொடர்பாக எந்தவொரு விளக்கமும் தரவில்லை.. எனவே, இந்த பேக்கை ரீசார்ஜ் செய்தால் 3 மாத வேலிடிட்டி இருப்பதால் ஐபிஎல் போட்டிகளைப் பார்க்கவும் கூட இது நமக்கு உதவும்.
இன்றைய தினம் இந்திய அணி வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. வரும் பிப்ரவரி 23ம் தேதி பாகிஸ்தான் அணியையும், மார்ச் 2ம் தேதி நியூசிலாந்து அணியையும் இந்தியா எதிர்கொள்ள இருக்கிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications