Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டெய்லி லிமிட் இல்ல.. OTT ஃப்ரீ.. குடும்பத்துக்கே ஒரு பிளான்.. ஜியோவின் ‘மாஸ்’ போஸ்ட்பெய்ட் பிளான்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒரு நாளைக்கு இவ்வளவுதான் என்ற லிமிட் இன்றி அதிக டேட்டா பயன்படுத்தும் மொபைல் போன் யூசர்களுக்கு போஸ்ட்பெய்டு திட்டங்கள் சிறப்பானதாக இருக்கும். ஜியோ நிறுவனம் 5 அசத்தலான போஸ்ட்பெய்டு பிளான்களை வழங்குகிறது. இதில் நீங்கள் மட்டுமின்றி உங்கள் குடும்பமே பலன்களை பெறலாம். அந்த பிளான்கள் பற்றி பார்க்கலாம்.

பிரீபெய்டு பிளான்களில் குறைவான டேட்டா லிமிட் மட்டுமே வழங்கப்படுகிறது. உதாரணமாக, ஜியோ ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களைப் பொறுத்தவரை அதிகபட்சமாக தினசரி 2.5 ஜிபி டேட்டா மட்டுமே வழங்கப்படுகிறது. அதற்கு மேல் டேட்டாவை பயன்படுத்த வேண்டும் என்றால் கூடுதலாக Data Add on பேக்குகளை ரீசார்ஜ் செய்ய வேண்டும்.

Jio offers 5 Postpaid Plans: Your whole family can benefit: Full details here

ஜியோ போஸ்ட்பெய்டு: நீங்கள் போஸ்ட்பெய்டு யூசராக இருந்தால் இந்த தினசரி லிமிட் இன்றி டேட்டாவை பயன்படுத்த முடியும். நீங்கள் ஜியோ போஸ்ட்பெய்டு வாடிக்கையாளராக இருந்தால் அல்லது ப்ரீபெய்டில் இருந்து போஸ்ட்பெய்டுக்கு மாற விரும்பினால், ரிலையன்ஸ் ஜியோவின் இந்த மலிவான போஸ்ட்பெய்டு திட்டங்களைப் பற்றி தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.

ரிலையன்ஸ் ஜியோ தமது வாடிக்கையாளர்களுக்காக மொத்தம் 5 போஸ்ட்பெய்ட் திட்டங்களைக் கொண்டுள்ளது. இந்த திட்டங்களில் மாதாந்திர கட்டணம் ரூ.299 முதல் ரூ.1499 வரை உள்ளது. மாதம் 300 ஜிபி வரை டேட்டா கொடுக்கும் திட்டங்கள் இருக்கின்றன. மேலும், ஜியோவின் அன்லிமிடெட் 5G டேட்டாவையும் பெறுவீர்கள். இந்த 5 போஸ்ட்பெய்டு பிளான்களைப் பற்றி பார்க்கலாம்.

ஜியோ ரூ.299 போஸ்ட்பெய்ட் பிளான்: ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.299 போஸ்ட்பெய்ட் திட்டமானது 30 ஜிபி மாதாந்திர டேட்டாவுடன் வருகிறது. மாதம் முழுவதும் இந்த 30 ஜிபி டேட்டாவை பயன்படுத்திக் கொள்ளலாம். கூடுதலாக டேட்டா தேவை என்றாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். ஒரு ஜிபி ரூ.10 என்ற அளவில் கட்டணம் வசூலிக்கப்படும். இந்த திட்டம் அன்லிமிட்டெட் 5G டேட்டா ஆஃபருடன் வருகிறது.

அதாவது ஜியோவின் 5ஜி நெட்வொர்க் கிடைக்கும் இடத்தில் நீங்கள் இருந்தால் இந்த திட்டத்தை ரீச்சார்ஜ் செய்யும்போது இலவசமாக அன்லிமிட்டெட் 5ஜி டேட்டாவையும் பெறலாம். இந்த பிளான், அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் ஒரு நாளைக்கு 100 SMS ஆகியவற்றை வழங்குகிறது. இதனுடன், கூடுதல் நன்மைகளாக JioTV, JioCinema மற்றும் JioCloud ஆகியவற்றையும் பெறலாம்.

ஜியோ ரூ.399 போஸ்ட்பெய்ட் திட்டம்: ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.399 போஸ்ட்பெய்ட் திட்டமானது 75 ஜிபி டேட்டாவுடன் வருகிறது. 75 ஜிபி டேட்டாவை பயன்படுத்திய பிறகு, ஒரு ஜிபிக்கு ரூ. 10 கட்டணம் வசூலிக்கப்படும். இந்த திட்டத்தில் வரம்பற்ற வாய்ஸ் கால் மற்றும் ஒரு நாளுக்கு 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. இதனுடன், கூடுதல் நன்மைகளாக JioTV, JioCinema மற்றும் JioCloud ஆகியவற்றையும் பெறலாம்.

இந்தத் திட்டத்தில் யூசர்களுக்கு தேவைப்பட்டால் கூடுதலாக 3 சிம் கார்டுகள் வரை வழங்கப்படும். ஒவ்வொரு சிம்மிற்கும் ரூ.99 செலுத்த வேண்டும். இதன் மூலம் இந்த 3 சிம்களுக்கும் சேர்த்து 75 ஜிபி பயன்படுத்திக் கொள்ளலாம். ஒரே பிளானில் ஒரு குடும்பமே டேட்டா மற்றும் வாய்ஸ் கால் பலன்களை பெறலாம். மேலும், ஒவ்வொரு கூடுதல் சிம்மிலும் 5 ஜிபி டேட்டா கூடுதலாக வழங்கப்படும்.

ஜியோ ரூ.599 போஸ்ட்பெய்டு திட்டம்: ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.599 போஸ்ட்பெய்ட் திட்டமானது அன்லிமிட்டெட் டேட்டா வசதியுடன் வருகிறது. நீங்கள் மாதம் முழுவதும் எவ்வளவு டேட்டாவை வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த திட்டத்தில் வரம்பற்ற வாய்ஸ் கால் மற்றும் ஒரு நாளுக்கு 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. இதனுடன், கூடுதல் நன்மைகளாக JioTV, JioCinema மற்றும் JioCloud ஆகியவற்றையும் பெறலாம்.

ஜியோவின் ரூ.699 போஸ்ட்பெய்டு பிளான்: ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.699 போஸ்ட்பெய்ட் திட்டமானது 100 ஜிபி டேட்டாவுடன் வருகிறது. 100 ஜிபி பயன்பாட்டுக்குப் பிறகு 1 ஜி.பிக்கு 10 ரூபாய் கட்டணம். ஜியோவின் இந்த ரூ.699 போஸ்ட்பெய்ட் திட்டம் 3 கூடுதல் ஃபேமிலி சிம்களுடன் வருகிறது. ஃபேமிலி சிம்களுக்கு இந்தத் திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் தலா 5 ஜிபி கூடுதல் டேட்டாவும் வழங்கப்படும்.

5ஜி சிக்னல் கிடைக்கும் நகரங்களில் வசிக்கும் யூசர்கள், ஜியோவின் போஸ்ட்பெய்டு பிளான்களில் வரம்பற்ற 5G டேட்டாவைப் பெறுவார்கள். இந்த திட்டத்தில் Netflix Basic, Amazon Prime, Jio TV மற்றும் Jio Cinema ஆகியவற்றுக்கான இலவச சந்தாவும் உண்டு.

ஜியோ ரூ.1,499 போஸ்ட்பெய்டு திட்டம்: ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.1,499 போஸ்ட்பெய்ட் திட்டமானது 300 ஜிபி டேட்டாவுடன் வருகிறது. 300 ஜிபி பயன்பாட்டுக்குப் பிறகு 1 ஜி.பிக்கு 10 ரூபாய் கட்டணம். 300 ஜிபியை மாதத்தில் பயன்படுத்தவில்லை என்றால், மீதமிருக்கும் டேட்டா அடுத்த மாதத்துடன் சேர்ந்துவிடும். 500 ஜிபி வரை டேட்டா ரோல் ஓவர் பெறலாம்.

5ஜி சிக்னல் பெற தகுதியான யூசர்கள், இதில் வரம்பற்ற 5G டேட்டாவைப் பெறுவார்கள். இந்த திட்டத்தில் Netflix Basic, Amazon Prime, Jio TV மற்றும் Jio Cinema ஆகியவற்றுக்கான இலவச சந்தாவும் உண்டு. மேலும் இண்டர்நேஷனல் ரோமிங்கின்போதும் இலவச டேட்டாவும், ஐஎஸ்டி கால் செய்துகொள்ளும் சலுகையும் உண்டு.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+