வாட்ஸ்அப் திறந்தால் கீழே தெரியும் நீல வட்டம்! இது என்ன புதுசா- மெகா பிளானை இறக்கும் மார்க்! அடடே செம
வாஷிங்டன்: இப்போது அனைத்து இடங்களும் ஏஐ வசமாகி வருகிறது. குறிப்பாக சாட் ஜிபிடியை பயன்படுத்துவோர் எண்ணிக்கை மளமளவென அதிகரித்து வருகிறது. இதற்கிடையே சாட் ஜிபிடிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மெட்டா நிறுவனம் இப்போது களமிறங்கியுள்ளது. வாட்ஸ்அப் செயலியில் இப்போது இந்த மெட்டா ஏஐ வசதி வழங்கப்படுகிறது. இது ஏஐ போரை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என்பதைச் சந்தேகமே இல்லாமல் சொல்லலாம்.
ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு தொழில்நுட்பம் அசுர வளர்ச்சியை அடையும். அதன்படி இப்போது ஏஐ தொழில்நுட்பம் வேற லெவல் வளர்ச்சியை அடைந்து வருகிறது. குறிப்பாக சாட் ஜிபிடி வெற்றி ஏஐ துறையில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

ஏஐ: இதையடுத்து பல்வேறு நிறுவனங்களும் இந்த ஏஐ துறையில் குதித்துள்ளன. அவர்கள் சாட் ஜிபிடி யூசர்களை பிடிக்கக் கடுமையாக முயன்று வருகிறார்கள். இந்த லிஸ்டில் இப்போது மார்க் ஜூக்கர்பெர்க்கும் இணைந்துள்ளார். அவர் வாட்ஸ்அப் செயலியில் இப்போது தனது மெட்டா ஏஐ வசதியை இறக்கியுள்ளார். இது ஏஐ உலகில் கேம் சேஞ்சராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாட்ஸ்அப்: சரி மெட்டா வசதியை வாட்ஸ்அப் செயலியில் எப்படி யூஸ் செய்ய வேண்டும் என்பது குறித்துப் பார்க்கலாம். முதலில் உங்கள் வாட்ஸ்அப் செயலியை ஓபன் செய்தாலே.. அதில் கீழே வலது புறம் நீலம் மற்றும் ஊதா நிறத்தில் வட்டமாக ஒன்று இருக்கும். அதை நீங்கள் கிளிக் செய்தால் மெட்டா ஏஐ உடனான சாட் ஓபன் ஆகும். அதில் இருக்கும் பாலிசிக்களை படித்து.. உங்களுக்குச் சம்மதம் என்றால் ஓகே தரவும்.. அவ்வளவு தான் இனிமேல் நீங்கள் மெட்டா ஏஐ மாடலை யூஸ் செய்யலாம். கணினியில் வாட்ஸ்அப் செயலியில் சாட் பெயர்கள் இருக்கும் இடத்திற்கு மேற்புறம் நீல நீற வட்டம் தெரிகிறது. அதை கிளிக் செய்தால் போதும்
இது சாதாரணமாக நீங்கள் மெசேஜ் செய்வது போல டைப் செய்து அனுப்பினாலே போதும்.. அதற்கான பதிலை மெட்டா ஏஐ அனுப்பும். அந்தளவுக்கு ஈஸியாக இதை வடிவமைத்துள்ளார். நமக்கு வரும் பதிலும் வாட்ஸ்அப் மெசேஜ் போல தான் இருக்கிறது. இதனால் நமக்குப் படித்துப் புரிந்து கொள்ளவும் ஈஸியாக இருக்கிறது.
தமிழில் வேலை செய்யுமா: அதேநேரம் இந்த மெட்டா ஏஐ இப்போது ஆங்கிலத்தில் மட்டுமே வேலை செய்கிறது. தமிழில் இதற்கான சப்போர்ட் இல்லை. நாம் தமிழில் எதாவது கேள்வி கேட்டால்.. தற்போது தமிழில் தெரியாது. ஆனால் தமிழைப் புரிந்து கொள்ளும் போது மெசேஜ் அனுப்புகிறேன் என்ற பதில் வருகிறது. தற்போதைய சூழலில் ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், இந்தி, கொரிய மொழி என 13 மொழிகளில் மட்டுமே மெட்டா ஏஐ வேலை செய்கிறது.
வாட்ஸ்அப் மட்டுமின்றி இன்ஸ்டாகிராம், பேஸ்புக் தளங்களிலும் மெட்டா வந்துவிட்டது. அதை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பது குறித்துப் பார்க்கலாம். முதலில் இன்ஸ்டாகிராம்.. நீங்கள் இன்ஸ்டா செயலியை ஓபன் செய்த உடன் மேல் வலதுபுறத்தில் இருக்கும் மெசஞ்சர் ஐகான் அல்லது விமானம் போல இருக்கும் ஐகானை க்ளிக் செய்யவும். அடுத்து மேல் வலதுபுறத்தில் உள்ள பென்சில் ஐகானை அழுத்தவும்.
இன்ஸ்டாகிராம்: அங்கு 'Create an AI chat' என்பதை கிளிக் செய்யவும். அதில் 'Meta AI' என்று இருக்கும்.. அதை கிளிக் செய்தால் போதும் மெட்டா ஏஐ ரெடியாகிவிடும். பாலிசியை படித்து ஓகே அனுப்பினால்.. மிக எளிதாக மெட்டா ஏஐ மாடலை உங்களால் பயன்படுத்த முடியும்.
பேஸ்புக்கை பொறுத்தவரை மெசஞ்சர்/ பேஸ்புக்கை ஓன் செய்யுங்கள். அதில் சாட் ஆப்ஷனில் இருக்கும் 'பென்சில்' ஐகானை கிளிக் செய்யவும். அதில் "மெட்டா AI'இல் உள்ள ஏஐ சாட் என்பதை கிளிக் செய்யவும். பாலிசியை படித்து ஓகே சொன்னால் போதும். நீங்கள் மெட்டா ஏஐ சாட்டை வழக்கம் போல யூஸ் செய்யலாம்.












Click it and Unblock the Notifications