முகேஷ் அம்பானியின் இன்ப அதிர்ச்சி.. ஜியோ ஃபைபரை தூக்கி சாப்பிடும் ஜியோ ஏர்ஃபைபர்.. மொத்தமா மாறுதே
டெல்லி: ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், ஜியோ ஏர்ஃபைபர் என்ற புதிய வயர்லெஸ் இணையதள சேவையை வரும் செப்.19ம் தேதி அறிமுகம் செய்ய போகிறது. இது 1.5 ஜிபிபிஎஸ் வேகத்தை வழங்கும் என்று ஜியோ நிறுவனம் அறிவித்திருக்கிறது.
இந்த சூழலில் ஏற்கனவே உள்ள ஜியோஃபைபர் பிராட்பேண்ட் இணைப்பிற்கும், ஜியோவின் புதிய ஏர்ஃபைபருக்கும் என்ன வித்தியாசம் என்பதை இப்போது பார்ப்போம்.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வரும் செப்டம்பர் 19ம் தேதியான விநாயகர் சதுர்த்தி அன்று (வடமாநிலங்களில் அன்று தான் விநாயகர் சதுர்த்தி) ஜியோ ஏர்ஃபைபர் என்ற புதிய வயர்லெஸ் இணையச் சேவையைத் தொடங்குகிறது.
ஜியோ ஏர்ஃபைபர் சேவை பற்றி சொல்ல வேண்டும் என்றால், தொழில் நுட்பத்தின் மிகப்பெரிய புரட்சி என்று சொல்லலாம். இது வயர்லஸ் பிராட்பேண்ட் சேவையாகும். வீடுகள் மற்றும் அலுவலகங்களுக்காக வடிவமைக்கப்பட்ட கையடக்க வயர்லெஸ் இணைய சேவை என்று ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜியோ ஏர்ஃபைபரின் டேட்டாவின் வேகம் 1.5 ஜிபிபிஎஸ் வேகத்தில் இருக்குமாம். வீடியோக்கள் எளிதாக ஸ்ட்ரீம் ஆகும் என்றும், எந்த பின்னடைவும் இல்லாமல் வீடியோக்களை தரமான குவாலிட்டியுடன் பார்க்க முடியும் என்றும், ஆன்லைன் கேமிங்கில் ஈடுபட முடியும் என்றும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் நிறுவன தலைவரான முகேஷ் அம்பானி கூறினார். விநாயக சதுர்த்தி நாளில் ஜியோ ஏர்பைபர் அதிகாரப்பூர்வமாக மக்களுக்கு கிடைக்கும் என்றும் முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார்.
சரி விஷயத்திற்கு வருவோம். ஜியோஃபைபர் என்றால் என்ன, வழக்கமான ஜியோஃபைபர் இணைய இணைப்பில் இருந்து இது எப்படி வேறுபட்டது என்பதை பார்ப்போம்.
ஜியோ ஏர்ஃபைபர் என்றால் என்ன? : ஜியோ ஏர்ஃபைபர் என்பது ஜியோவின் புதிய வயர்லெஸ் இணைய சேவை ஆகும். 5ஜி தொழில் நுட்பத்தில் இயங்கும் அதிவேக இணைய இணைப்பு சேவையாகும். இது எப்படி என்றால், நம் வழக்கமாக வாங்கும் ஃபைபர்-ஆப்டிக் பிராட்பேண்ட் சேவைக்கு நிகரான வேகத்தில் இணைய சேவையை வழங்க கூடியது. 1 ஜிபிபிஎஸ் வரை வேகம் எளிதாக கிடைக்கும்.
ஜியோ ஏர்ஃபைபருக்கு வயர்கள் தேவை இல்லை என்பதால் எளிதாக எங்கும் எடுத்து சென்று செட் செய்ய முடியும். அதை ஜஸ்ட் உங்க வீட்டில் எங்காவது சொருகுங்க.. அப்படியே பயன்படுத்துங்க அவ்வளவு தான்.. உங்கள் வீட்டில் தனிப்பட்ட Wi-Fi ஹாட்ஸ்பாட் ரெடியாகிடும். இஸியாக பயன்படுத்த முடியும். 5ஜியில் என்பதால் இண்டர்நெட் ஸ்பீட் அசுர வேகத்தில் இருக்கும். அளவற்ற இணையசேவையும் எளிதாக கிடைக்கும் என்கிறது ஜியோ நிறுவனம்.
ஜியோ ஏர்ஃபைபர் vs ஜியோஃபைபர் வித்தியாசங்கள்: தொழில்நுட்பம்: ஜியோ ஃபைபரை பொறுத்தவரை ஃபைபர் ஆப்டிக் கேபிள்கள் பயன்படுத்தப்படுகிறது, அதே நேரத்தில் ஜியோ ஏர்ஃபைபர் பாயின்ட்-டு-பாயிண்ட் ரேடியோ சிக்னலை பயன்படுத்தி வயர்லெஸ் முறையில் இணையசேவையை வழங்குகிறது. அதாவது எந்த வயரும் இல்லாமல் ஜியோ ஏர்ஃபைபர் வீடுகள் மற்றும் அலுவலகங்களுக்கு எளிதாக கிடைத்துவிடும். வயர்கள் கட்டானால் பிராட்பேண்ட் பிரச்சனையாகும். ஆனால் ஜியோ ஏர்பைரில் அந்த பிரச்னை வராது. மேலும் நகரங்களில் கூட சில பகுதிகளில் வயர் கனெக்ஷன் கொடுப்பதில் சிக்கல் இருப்பதால் அந்த பகுதி மக்களுக்கு ஜியோ ஃபைபர் வசதி கிடைக்காமல் இருந்தது. இனி அந்த தடை விலகும்.
ஜியோ ஏர்ஃபைபர் வேகம்: ஜியோ ஏர்ஃபைபர் ஜியோ ஃபைபரின் 1 ஜிபிபிஎஸ் வேகத்தை விட அதிகமாக அதாவது 1.5 ஜிபிபிஎஸ் ஸ்பீட் வரை இணைய சேவை கிடைக்கும். அதேநேரம் ஜியோ ஏர்ஃபைபரின் உண்மையான வேகம் அருகிலுள்ள சிக்னல் டவரை பொறுத்து மாறுபடும்.
ஜியோ ஏர்ஃபைபர் எல்லா இடத்திலும் கிடைக்குமா : ஜியோ ஃபைபர், மிகப்பெரிய கவரேஜை தந்தாலும், நாடு முழுவதும் இன்னமும் கிடைக்கவில்லை. ஏன் சென்னையின் புறநகர்களிலேயே இன்னமும் சில இடங்களில் கிடைக்காத நிலை உள்ளது. அதேநேரம் ஜியோ ஏர்ஃபைபரின் வயர்லெஸ் தொழில்நுட்பம் காரணமாக எளிதாக எல்லா இடங்களிலும் கிடைக்கும்.

ஜியோ ஏர்ஃபைபரை எப்படி பொறுத்தலாம்: ஜியோ ஏர்ஃபைபரை எளிதாக எங்கும் பொறுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது, எளிதாக பயன்படுத்த முடியும் என்பதால் எந்த சிக்கலும் இல்லை. ஆனால், ஜியோ ஃபைபரை பொறுத்த மிகப்பெரிய அளவில் வேலை செய்ய வேண்டும்.வயர்களை எடுத்து கொண்டு வந்து இணைத்து சரியாக செட் செய்ய வேண்டும்.
ஜியோ ஏர்ஃபைபர் விலை: ஜியோ ஏர்ஃபைபர் இப்போது கொஞ்சம் அதிகமாக உள்ளது.பின்னாளில் குறைய வாய்ப்பு உள்ளது. இதன் விலை சுமார் ரூ.6,000 ஆகும். விலையில், JioAirFiber பிராட்பேண்ட் இணைப்பை விட சற்று விலை அதிகம். ஜியோ ஏர்ஃபைபர் அதிவேக இணையசேவையுடன், Wi-Fi 6க்கு சப்போர்ட் பண்ணுமாம், ஜியோ செட்-டாப் பாக்ஸ் உள்ளிட்டவையும் கிடைக்குமாம்.
இதனிடையே முகேஷ் அம்பானியின் இந்த அறிவிப்பு என்பது, ஏற்கனவே இலவசமாக சிம்களை கொடுத்து அளவற்ற இணைய சேவைகளை அறிவித்தது போல், மிகப்பெரிய புரட்சியாக பார்க்கப்படுகிறது. இப்போது உள்ள பிராட்பேண்ட் சேவையை பொறுத்தவரை, வயர்களில் பிரச்சனை ஏற்பட்டால் இணையசேவை கிடைக்காது. ஆனால் அறிமுகம் செய்யப்பட உள்ள ஜியோ ஏர்பைபர், வயர்லஸ் சேவை என்பதால் அதுபோல் பிரச்சனை இருக்காது. ஜியோ நிறுவனம் அறிவித்தபடி 1.5 ஜிபி ஸ்பீடில் இணைய சேவை கிடைத்தால் பலரும் அதை கையில் வைத்துக்கொண்டு சிம்முக்கு ரீசார்ஜ் செய்வதை அதிரடியாக குறைத்துவிடுவார்கள்.
-
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை!












Click it and Unblock the Notifications