Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இதென்ன தியேட்டர் ஸ்கிரீனா.. இவ்ளோ பெருசா இருக்கு! ஆப்பிள் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் ஃபுல் டீடெயில் இதோ!

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: இறுதியாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆப்பிள் ஐபோன் 16 மாடல்கள் வெளியாகியுள்ளன. இதில் ப்ரோ மேக்ஸ் மாடல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.

உலக சந்தையில் எவ்வளோ ஸ்மார்ட் போன்கள் இருந்தாலும், அதில் ஆப்பிள் போன்களுக்கு என்று தனி கிராக்கி இருக்கிறது. இந்தியாவை பொறுத்தவரை ஐபோன்களை பயன்படுத்துபவர்கள் சமூகத்தில் பெரிய இடமாக பார்க்கப்பட்டு வருகிறது. இப்படி என்னதான் பணக்காரர்களுக்கு போனாக ஆப்பிள் பார்க்கப்பட்டாலும், சாமானியர்களால் ஒருபோதும் ஒதுக்கி தள்ளப்பட்டது கிடையாது. ஏனெனில், விலைக்கு ஏற்ற தரம்! இதுதான் ஐபோன் மீதான ஈர்ப்பை தொடர்ந்து அதிகரிக்க வைத்திருக்கிறது.

apple iphone16 series 16


ஒவ்வொரு ஆண்டும் ஆப்பிள் ஐபோன்களின் புதிய மாடல்கள் வெளியிடப்பட்டு வந்திருக்கின்றன. நேற்று வரை ஐபோன் 15 மாடல்கள் விடப்பட்டிருந்தன. இன்று கலிபோர்னியா, குப்பர்டினோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஐபோன் 16 மாடல்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன. இதில் ஐபோன் ப்ரோ மேக்ஸ் பெரும் கவனம் ஈர்த்திருக்கிறது.

இந்த மாடலில் 6.9 இன்ச் டிஸ்பிளே கொடுக்கப்பட்டிருக்கிறது. இதற்கு முன்னர் வேறு எந்த ஆப்பிள் போன்களும் இவ்வளவு பெரிய டிஸ்பிளே கொடுக்கப்படவில்லை. இது தவிர XDR டிஸ்பிளே, டைடானியம் கோட், செராமிக் ஷீல்ட், யுஎஸ்பி சி டைப் சார்ஜிங் ஆகியவற்றை இந்த ஐபோன் கொண்டிருக்கிறது.

டெசர்ட் டைடானியம், நேட்சுரல் டைடானியம், வெள்ளை டைடானியம், கருப்பு டைடானியம் ஆகிய நிறங்களில் ஐபோன்கள் விற்பனைக்கு வருகின்றன. இது ஆப்பிள் இன்டலிஜன்ஸ் டெக்னாலஜி (செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்) மூலம் உருவாக்கப்பட்டிருக்கிறது. கேமராவை எளிதாக பயன்படுத்தும் வசதி வழங்கப்பட்டிருக்கிறது. இதில் A18 Pro chip பொருத்தப்பட்டிருக்கிறது. இது ஐபோனின் பயன்பாட்டு வேகத்தை அதிகரிக்கிறது. அதேபோல பேட்டரி நீண்ட நேரத்திற்கு வருவதற்கும் இது பயன்படுகிறது.

apple iphone16 series 16


ஐபோன்களில் கேமராக்கள்தான் ஹைலைட். இதில் 4K 120 fps Dolby Vision அம்சம் வழங்கப்பட்டிருக்கிறது. இதை வைத்து சினிமாவையே எடுக்க முடியும்.

இந்தியாவை பொறுத்தவரை இதன் விற்பனை விலை ரூ.99,106 லிருந்து தொடங்குகிறது. அதாவது 256 ஜிபி மெமரி திறன் கொண்ட ஐபோன் ரூ.99,106க்கும், 512 ஜபி மெமரி திறன் கொண்ட ஐபோன் ப்ரோ மேக்ஸ் ரூ. 115,661க்கும், 1000 ஜிபி, அதாவது 1TB மெமரி திறன் கொண்ட ஐபோன் ப்ரோ மேக்ஸ் ரூ. 132,216 க்கும் விற்பனையாகிறது. இந்த ஐபோன்களுக்கான முன்பதிவு இன்று தொடங்கும் என்றும், விற்பனை செப்.20 முதல் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+