Box office: பறந்து போ Vs 3BHK முதல் நாள் வசூல் நிலவரம்.. எந்த படம் டாப்பு? வெளியான தகவல்
சென்னை: நடிகர் சரத்குமார், தேவயானி, சித்தார்த் நடித்த "3bhk" மற்றும் இயக்குனர் ராம் இயக்கிய "பறந்து போ" திரைப்படம் நேற்று ஒரே நாளில் ரிலீஸ் ஆன நிலையில் இந்த இரண்டு திரைப்படங்களில் முதல் நாள் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் வெளியாகி இருக்கிறது.
தமிழ் சினிமாவில் சமீப காலமாக பிரம்மாண்டமான பட்ஜெட்டில் எடுக்கப்படும் திரைப்படங்கள் கடைசியில் ரசிகர்களின் ட்ரோலில் சிக்கி விடுகிறது. பெரிய அளவில் கதைகள் சுவாரஸ்யம் இல்லை என்பது பலருடைய கருத்தாக இருக்கிறது. ஆனால் மெய்யழகன் டூரிஸ்ட் பேமிலி போன்ற ஃபீல் குட் பாடல்கள் இப்போது மக்களை கவரும் வகையில் இருக்கிறது. அந்த வரிசையில் தான் நேற்று இரண்டு திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியானது.

பறந்து போ, 3BHK ரிவ்யூ
அதிலும் இரண்டு திரைப்பட நடிகர்கள் மற்றும் இயக்குனர்களும் ஒன்றாகவே பிரமோஷனில் ஈடுபட்டிருந்தனர். பொதுவாக ஒரு திரைப்படம் வெளியாகும் போது அந்த திரைப்பட நடிகர்கள் மற்றும் இயக்குனர்களை பதட்டமடைய செய்யும் ஆனால் இந்த இரண்டு திரைப்படத்தில் இயக்குனர்களும் ஒருவர் படத்தை இன்னொருவர் பாராட்டி வியந்து பேசி இருந்தனர்
பறந்து போ படம்
ராம் இயக்கிய "பறந்து போ" திரைப்படத்தில் கதாநாயகனாக நடிகர் மிர்ச்சி சிவா நடித்திருந்தார். மிர்ச்சி சிவா என்று அவர் அகில உலக சூப்பர் ஸ்டார் என்று தனக்கு தானே பட்டம் கொடுத்துக்கொண்டு காமெடியான கேரக்டரில் நடித்து வருவார். ஆனால் ராம் படம் என்றாலே ஒருவித வலி வேதனை எல்லாம் கலந்த கலவையாக இருக்கும். ஆனால் இவர்கள் இருவரும் சேர்கிறார்கள் என்றபோது அங்கு எப்படி இருக்கும் என்பது பலருடைய எதிர்பார்ப்பாகவும் இருந்தது. இந்த திரைப்படத்தில் நடிகை கிரேஸ் ஆண்டனி, அஞ்சலி உட்பட பலர் நடித்திருந்தனர். தந்தை மகனின் பாசத்தை மையமாகக் கொண்ட இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
3BHK படம்
அதேபோல ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் வெளியாகியுள்ள 3 பிஹெச்கே திரைப்படத்தில் சித்தார்த் கதாநாயகனாக நடித்திருந்தார். அவருக்கு அப்பா அம்மாவாக சரத்குமார் மற்றும் தேவயானி நடித்து இருக்கின்றனர். சூர்ய வம்சம் திரைப்படத்திற்கு பிறகு ஒரு சில திரைப்படங்களில் இவர்கள் இருவரும் ஜோடியாக நடித்திருந்தாலும் இந்த திரைப்படம் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டது. இந்த திரைப்படத்தில் சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற மிடில் கிளாஸ் ஃபேமிலியின் கனவு பற்றியதாகத்தான் இருந்தது. இந்த திரைப்படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைக்கிறது
3BHk, பறந்து போ முதல் நாள் வசூல் நிலவரம்
இந்த நிலையில் 3BHK மற்றும் பறந்து போ ஆகிய இரண்டு படங்களுக்குமே முதல் நாள் பாசிட்டிவ் விமர்சனம் கிடைத்திருக்கும் நிலையில் திரைப்படம் ரிலீஸ் ஆன முதல் நாளில் இந்தியாவில் மட்டும் 3BHk திரைப்படம் ஒரு கோடி வசூலித்து இருக்கிறதாம். நேற்று ரிலீசான தமிழ் படங்களில் அதிக வசூல் பெற்ற திரைப்படமும் இது தான். அதுபோல ராமின் பறந்து போ திரைப்படம் இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறது. இந்த திரைப்படம் இந்தியாவில் வெறும் 42 லட்சம் மட்டுமே வசூலித்திருக்கிறது. ஆனாலும் இன்றும் நாளையும் விடுமுறை தினம் என்பதை இந்த திரைப்படங்களின் பாக்ஸ் ஆபீஸில் மாற்றம் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
-
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
ஸ்டன் ஆன விஜய்.. "80 சீட்+ துணை முதல்வர்" எல்லாம் ஓகே.. ஆனா ஒரு விஷயத்தை யோசிக்கும் தவெக தலைமை -
Rasi Palan: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கான மார்ச் மாத பலன்.. முழு விவரம் இதோ -
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ -
விஜய்க்கு புது ஆஃபர் கொடுக்கும் பாஜக? 80 தொகுதி + துணை முதல்வர் பதவி! டெல்லியில் பரபர பாலிடிக்ஸ் -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம் -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது?












Click it and Unblock the Notifications