Box office: மூன்று நாட்களில் 3BHk செய்த வசூல் எவ்வளவு தெரியுமா? அடேங்கப்பா இத்தனை கோடியா?
சென்னை: நடிகர் சரத்குமார், தேவயானி, சித்தார்த் மற்றும் மீரா ரகுநாத் நடிப்பில் உருவாகி இருக்கும் 3BHk திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது. இந்த திரைப்படத்தை எட்டு தோட்டாக்கள் படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த இயக்குனர் ஸ்ரீ கணேசன் தான் இயக்கி இருந்தார். இந்த திரைப்படம் மூன்று நாட்களில் எவ்வளவு வசூல் பெற்றிருக்கிறது என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
3 பிஹெச்கே திரைப்படத்தில் சரத்குமார், தேவயானி, சித்தார்த், மீதா ரகுநாத் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்திற்கு அம்பரீத் இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தின் ஒளிப்பதிவு பணிகளை தினேஷ், பி கிருஷ்ணன் மற்றும் ஜிதின் ஆகியோர் கவனித்திருக்கின்றனர். படத் தொகுப்பாளராக வேலைகளை கணேஷ் சிவா பணியாற்றி இருக்கிறார். அதுபோல இந்த படத்தை பல ஹிட் திரைப்படங்களை தயாரித்த சாந்தி டாக்கீஸ் நிறுவனம் சார்பாக அருண் விஸ்வா தயாரித்துள்ளார்.

3BHK ரிவ்யூ
இன்றைய காலகட்டத்தில் சொந்த வீடு என்பது பலருடைய கனவாக இருக்கிறது. அப்படி சொந்த வீடு கட்ட வேண்டும் என்று போராடும் சென்னையில் ஒரு மிடில் கிளாஸ் ஃபேமிலியின் கதை தான் இந்த 3 பிஹெச்கே இந்த படத்தில் சரத்குமார் மனைவியாக தேவயானியும், மகனாக சித்தார்த்தும், மகளாக மீதா ரகுநாதன் நடித்திருக்கிறார்கள். அவர்களுடைய சொந்த வீடு கனவு நனவானதா? இல்லையா? என்பது தான் படத்தின் கதை.
3BHk பட கதை
வாசுதேவனாக சரத்குமார் குடும்ப பாரத்தை தாங்கி நிற்கும் குடும்பஸ்தன் கேரக்டரில் அப்படியே பொருந்தி இருக்கிறார். சரத்குமார் மீண்டும் இந்த படத்தின் மூலம் மிடில் கிளாஸ் மக்களை கவர்ந்திருக்கிறார். இந்த படத்திலும் அவருடைய நடிப்பு பலருடைய பாராட்டுகளை பெரும் வகையில் இருக்கிறது. சரத்குமார் உடைய மனைவியாக தேவயானி படத்திற்கு என்ன தேவையோ அதை கொடுத்து இருக்கிறார். நடுத்தர வர்க்கத்து அம்மாவாகவே இந்த படத்தில் தேவயானி வாழ்ந்து இருக்கிறார்.
சித்தார்த் நடிப்பு
அதுபோல படிப்பு வராத கடைசி பெஞ்ச் மாணவனாக யங்க் பாய் லுக்கிலும், எப்படியாவது கஷ்டப்பட்டு அப்பாவின் கனவை நிறைவேற்ற வேண்டும் என்ற கனவோடும் உழைக்கும் பிரபுவாக சித்தார்த் கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். சித்தா படத்தில் சித்தார்த்தின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டு வரும் நிலையில் அதைத்தொடர்ந்து 3பிஎச்கே படமும் சித்தார்த்துக்கு இன்னொரு மணிமகுடமாக இருக்கும். சொந்த வீடு வாங்க வேண்டும் என்று பல வருடங்களாக சரத்குமார் கஷ்டப்படுகிறார்.
பிறகு அவரை தொடர்ந்து அவருடைய மகனும் கஷ்டப்படுகிறார். கடைசியில் ஒரு வழியாக வீடு வாங்கலாம் என்று இருக்கும் நிலையத்தில் அப்பா சரத்குமாருக்கு உடல்நிலை சரியில்லாமல் போக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய சூழ்நிலை வருகிறது. அதனால் காசெல்லாம் செலவாகும் இடத்தில் படத்தை பார்க்கும் அனைவரையுமே கண்கலங்க வைத்து விடுகிறது. கடைசியாக குடும்பத்தினர் ஆசைப்பட்ட மாதிரி வீடு வாங்கினார்களா? இல்லையா? என்பதுதான் கிளைமாக்ஸ். பாசிட்டிவான கதையோடு இந்த திரைப்படம் பலருடைய வாழ்க்கையே பிரதிபலிக்கிறது. "சொந்த வீடு சொர்க்கம்" என்று இந்த படம் அனைவரையும் பீல் பண்ண வைத்திருக்கிறது.
3BHk வசூல் நிலவரம்
இந்த நிலையில் இந்த திரைப்படம் முதல் நாளே இந்திய அளவில் ஒரு கோடி வசூல் செய்து இருந்த நிலையில் மூன்று நாட்களில் 4.7 கோடி வசூல் செய்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. கடந்த வெள்ளிக்கிழமை 3BHk திரைப்படத்துடன் வெளியான பறந்து போ திரைப்படம் இதுவரைக்கும் மூன்று புள்ளி ஐந்து கோடி வசூல் செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் 3BHK தான் அதிகமான வசூல் பெற்றதாக இருக்கிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications