ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட ரோஷினி... இவருடைய வார்த்தையை கேட்டு பீல் பண்ணும் ரசிகர்கள்
சென்னை: பாரதிகண்ணம்மா சீரியலில் இருந்து விலகிய பிறகு முதல்முறையாக ரோஷினி வெளியிட்ட வீடியோஸ் வைரலாக பரவி வருகிறது.
சீரியலில் இருந்து தவிர்க்க முடியாத காரணங்களால் தான் விலகி உள்ளேன் என்று தன்னுடைய மனநிலையை ரசிகர்களுக்கு கூறியுள்ளார்.
இதுவரை தந்த ஆதரவுகளை மேலும் தர வேண்டும் என்று ரசிகர்களுக்கு அன்பு வேண்டுகோள் வைத்துள்ளார்.

டி ஆர் பி யில் முதலிடம்
விஜய் டிவியில் பெரும் பரபரப்பையும் விறுவிறுப்பையும் கொண்ட சீரியல்களில் ஒன்றாக பாரதிகண்ணம்மா சீரியல் இருந்து வருகிறது. இந்த சீரியல் தொடங்கப்பட்டு வருடங்களை கடந்து விட்டாலும், இந்த சீரியலை பார்ப்பதற்காக ரசிகர்கள் கூட்டம் அதிகரித்துக் கொண்டே வருகிறது ஆரம்பத்தில் இந்த அளவில் வெற்றியைப் பெறும் என்பதை சீரியல் அணியினர் கொஞ்சம் கூட எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால் இன்று டிஆர்பியில் முதல் இடத்தில் வந்து கொண்டிருக்கிறது.

ரசிகர்களை கவர்ந்த கண்ணம்மா
இந்த சீரியலில் கதாநாயகியாகப் கண்ணம்மா கேரக்டரில் இதுவரைக்கும் நடித்து வந்த ரோஷ்னி ஹரிப்ரியன் இந்த சீரியலை விட்டு விலகிவிட்டார். கண்ணம்மா என்று பெயரைச் சொன்னதுமே பலருடைய மனதில் தோன்றுவது இவருடைய முகம் தான். அந்த அளவிற்கு இவர் அந்தப் பெயரில் பிரபலம் அடைந்து விட்டார். மீம்ஸ் கிரியேட்டராலும் நெட்டிசன்களாலும் இவர் புகழின் உச்சியில் வலம் வந்து கொண்டிருந்தார்.

முதல் சீரியலில் கிடைத்த வெற்றி
ரோஷ்னி ஹரிப்ரியன் தன்னுடைய முதல் சீரியலில் இந்த அளவிற்கு வெற்றி கிடைக்கும் என்பதை இவர் கனவில் கூட நினைத்துப் பார்க்கவில்லையாம். ஆனாலும் தன்னுடைய நடிப்புத் திறமைக்கும், உழைப்புக்கும் அங்கிகாரம் கிடைக்கும் என்று இவர் நினைத்திருக்கிறார். அது தமிழ் ரசிகர்கள் இவருக்கு அதிகமாகவே கொடுத்திருக்கிறார்கள். ஒரு பெண்ணுடைய சுயகௌரவத்திற்க்காக போராடுவதால் பலரும் ஆதரிக்க தொடங்கியுளளனர். அதனால் தான் இவருக்கு நாளுக்குநாள் வரவேற்பு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
மன்னிப்பு கேட்ட ரோஷினி
பல சீரியல்களில் கதாநாயகிகளும், கதாநாயகர்களும் பாதியில் மாறுவது ஒன்றும் புதிதல்ல ஆனாலும் டி ஆர் பி யில் முதலிடத்தில் இருக்கும் இந்த சீரியலின் கதாநாயகி மாறுவது ரசிகர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதனால்தான் இன்று இன்ஸ்டாகிராமில் ரோஷ்னி ஹரிப்ரியன் தன்னுடைய ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டு ஒரு வீடியோ வெளியிட்டிருக்கிறார். அதற்கு பல ரசிகர்கள் தங்களுடைய அன்பை பீலிங்கா கொட்டி வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications