பிரியங்கா இங்கே ப்ரியங்காவாகவே இல்லை...கலாய்க்கும் அபிநவ்...இதுதான் ரசிகர்களின் கருத்தா??
சென்னை: நிஜ கேரக்டரில் பிக்பாஸ் போட்டியாளர்கள் இருக்கிறார்களா??இல்லையா??என்று ரசிகர்கள் மத்தியில் குழப்பம் எப்படி இருக்கிறது.
ஆரம்பத்தில் கலகலப்பாக இருந்த போட்டியாளர்கள் நாட்கள் செல்ல செல்ல தங்களுடைய நிஜ கேரக்டரை காட்டத் தொடங்கி இருக்கிறார்கள் என்று ஒருபக்கம் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
சண்டை சச்சரவுகள் எல்லாமே கண்டெண்ட் மட்டும்தானா அல்லது நிஜ கேரக்டரா?? என்று நெட்டிசன்கள் குதர்க்கமாக யோசித்து வருகின்றனர்.

ரசிகர்களின் கருத்து உண்மையா? ?
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசன்களும் பெரிய அளவில் வெற்றி பெற்று விடுகிறது. காரணம் ஆரம்பத்தில் இந்த நிகழ்ச்சியில் பிரபலமாகாத ஒரு சில போட்டியாளர்கள் கூட தினமும் ரசிகர்களின் மத்தியில் தோன்றுவதால் ரசிகர்களும் அவர்களை ரசிக்கத் தொடங்கி விடுகிறார்கள். ஒருசிலரை வெறுத்தாலும், தொடர்ந்து இந்த நிகழ்ச்சிக்கு ஆதரவு கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் இருக்கின்ற மாதிரி போட்டியாளர்கள் யாரும் இருக்கவில்லை என்று எல்லா சீசன்களிலும் ரசிகர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். ஆனால் அது உண்மையில் போட்டியாளர்களின் குணநலன்கள் தானா அல்லது கண்டன்ட்க்காக செய்கிறார்களா??என்று ஒருபக்கம் அனைவரையும் யோசிக்கின்ற மாதிரிதான் நடந்து கொண்டிருக்கின்றனர்.

ரசிகர்களின் கருத்து
விஜய் டிவியில் தொகுப்பாளராக அறிமுகமாகி ரசிகர்களின் மத்தியில் நல்ல மதிப்பை பெற்றிருக்கும் பிரியங்கா இந்த சீசனில் ஒரு போட்டியாளராக பங்கேற்று இருக்கிறார். அவருடைய ரசிகர்கள் ஆரம்பத்தில் இந்த நிகழ்ச்சி வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருந்தாலும் நாட்கள் செல்ல செல்ல அவருக்கு ஆதரவு கொடுக்க தொடங்கிவிட்டனர். காரணம் நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் முதல் நாளிலிருந்து இவர் செய்யும் செயல்கள் அனைத்துமே ரசிகர்கள் ரசிக்கும் வண்ணம் கலகலப்பாக தான் இருந்துகொண்டிருக்கிறது. இவருடைய கேரக்டர் எந்த சூழ்நிலையிலும் மாறாது என்று ரசிகர்கள் ஒரு பக்கம் கூறிக் கொண்டிருக்கின்றனர்.

இயல்பான குணம்
மன சோர்வாக இருப்பவர்களிடம் அருகில் சென்று தன்னுடைய குறும்புத்தனத்தாலும், சமயோசித புத்தியாலும் அவர்களை ஜாலியாக மாற்றிவிடுவது இவருக்கு கை வந்த கலை. இதை ரசிகர்கள் பலரும் ரசித்துக் கொண்டிருக்கின்றனர். அதனால்தான் முதல் வார எலிமினேஷனில் இவருடைய பெயர் இருந்தாலும் அதிகமாக ஓட்டு அளித்து ரசிகர்கள் இவரை காப்பாற்றி இருந்தனர். அதுமட்டுமல்லாமல் இவர் செய்யும் சேட்டைகளையும், குறும்புகளையும் ரசிக்கும் ரசிகர்கள் அதை தங்களுடைய பேன்ஸ் பேஜ்களில் அனுப்பி ட்ரென்ட் செய்துகொண்டிருக்கின்றனர்.

அபிநவ் கலாய்ப்பு
இரண்டு வாரம் இவருக்கு இருந்த நல்ல பெயர் தற்போது மூன்றாவது வாரத்தில் குறைய தொடங்கி இருக்கிறது என்று ரசிகர்கள் ஒரு பக்கம் வேதனை அடைந்திருக்கின்றனர். காரணம் இவர் அபிஷேக் உடன் சேர்ந்து செய்யும் செயல்கள் போன சீசனில் அர்ச்சனாவை நினைவுபடுத்துகிறது என்று நெட்டிசன்கள் ஒருபக்கமாக கலாய்த்து தள்ளிக் கொண்டிருக்கின்றனர். இந்த நேரத்தில் பிரியங்காவுடன் இருக்கும் சக போட்டியாளர்களும் தற்போது இதே வார்த்தையை கூறியிருக்கின்றனர். அதாவது நேற்றைய எபிசோட்டில் பிரியங்கா, அபிநவ் மற்றும் சிலர் பேசிக்கொண்டிருக்கும்போது அபிநவ் பிரியங்காவை பார்த்து ப்ரியங்கா இந்த வீட்டிற்குள் வருவதற்கு முன்பு இருந்த பிரியங்காவாகவே இல்லை இப்போ மாறிவிட்டார் என்று தன்னுடைய கருத்தை தெரிவித்திருக்கிறார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications