இப்ப கதவு திறந்தாலும் சந்தோசமா வெளிய போவேன்... கொதிக்கும் அபிஷேக்
சென்னை: நேற்றைக்கு எலிமினேஷனில் தப்பியதும் பெருமூச்சு விட்ட அதே அபிஷேக் இன்று பேசியது தான் வைரலாக பரவி வருகிறது.
சண்டை என்று வந்துவிட்டால் என் பக்கத்தில் யாரும் நிற்க கூட முடியாது என்று துள்ளிக் குதித்துக் கொண்டிருக்கிறார் அபிஷேக்.
எனக்கு தில்லு அதிகமாகவே இருக்கு வெளியே போனாலும் என்னால சமாளிக்க முடியும் என்று சக போட்டியாளர்கள் இடம் சவால் விடும் அபிஷேக்குக்கு சமூக வலைத்தளத்தில் கண்டனங்கள் குவிந்து வருகிறது.

தொடங்கிய சண்டை சச்சரவுகள்
பிக்பாஸ் ஐந்தாவது சீசன் களை கட்ட ஆரம்பித்து இருக்கும் நிலையில் சண்டை சச்சரவுகள் தான் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பலரால் பேசப்பட்டு வருகிறது. இதுவரைக்கும் இல்லாத அளவில் இந்த சீசனில் அதிகமான போட்டியாளர்கள் கலந்து கொண்டு இருந்தாலும் இதில் ஆரம்பத்தில் போட்டியாளர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் ஆறுதலாகவும் ஜாலியாகவும் இருந்து வந்தனர். அதைப் பார்த்ததும் அப்போ இந்த சீசன் இப்படித்தான் இருக்குமா என்று பலர் நம்பி விட்டார்கள். ஆனால், அது எல்லாம் அப்படி அல்ல இனி போகப்போகத்தான் தெரியும் என்று ஒரு சில ரசிகர்கள் கூறி வந்த நிலையில் தற்போது ஒரு சில போட்டியாளர்களால் அது நிரூபிக்கப்பட்டு வருகிறது.

சினிமா பையன் அபிஷேக்
தன்னை தானே சினிமா பையன் என்று அழைத்துக்கொள்ளும் அபிஷேக் இந்த நிகழ்ச்சியில் அறிமுகமாகும் போது அவருடைய நெகட்டிவ்வர்ஸ் அனைவருமே இந்த நிகழ்ச்சிக்கு கண்டன்ட் எல்லாமே தாராளமாக அபிஷேக் கொடுத்துக் கொண்டிருப்பார். போரடிக்காமல் கொண்டு செல்வதுதான் அபிஷேக்கின் பழக்கம் என்று பலவிதமாக அவரைப் பற்றி கூறி வந்தனர். ஆனால் ஆரம்பத்தில் அனைவரிடமும் இயல்பாக பேசி வந்த இவர் நாட்கள் செல்ல செல்ல உரிமையுடனும், உரக்கவும் பேசி வருகிறார். இவர் செய்யும் செயல்கள் சக போட்டியாளர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.

பயம் கண்ணுல தெரியுது
யாரும் எதிர்பார்க்காத வகையில் நமிதா அடுத்ததாக முதல் வார எலிமினேஷனில் எப்படியும் அபிஷேக் வெளியே சென்று விடுவார் என்று பல ரசிகர்கள் கூறிவந்தனர். காரணம் அவருடைய ஓட்டு வாக்குகள்தான் மிகவும் குறைவாக இருந்து வந்தது. இந்த நிலையில் தற்போது இவர் இந்த நிகழ்ச்சியில் தொடர்ந்து கொண்டிருக்கிறார். முதல் வார எலிமினேஷன் ஆக நாடியா வெளியேறி இருக்கிறார். ஆனால் கடைசி வரைக்கும் இவரும் நாடியா சிங் மட்டும்தான் எலிமினேஷனில் வைத்து கமல் அனைவருக்கும் சஸ்பென்ஸ் கொடுத்துக் கொண்டிருந்தார். அது ரசிகர்களை விடவும் அபிஷேக் ரொம்ப பயமுறுத்திக் கொண்டிருந்தது.
Recommended Video

வாக்குவாதம் முற்றுகிறது
ஒருவழியாக நாடியா சிங்க்கு தான் வெளியேறுகிறார் என்று தெரிந்ததும் நிம்மதி பெருமூச்சு விட்ட அபிஷேக் அடுத்த நாளான இன்று தன்னுடைய ஆட்டத்தை தொடங்கியிருக்கிறார். அதில் அண்ணாச்சிக்கும் இவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் 'நான் இப்ப கதவு திறந்தா கூட வெளியே போக ரெடி', எனக்கு தில்லு இருக்கு எங்க போனாலும் சம்பாதிக்க முடியும், என்னால சமாளிக்க முடியும் என்று இவர் பேசும்போது பிரியங்கா இந்த வார்த்தை எல்லாம் சொல்லாதே என்று இவருக்கு கூறுகிறார். அதற்கு நான் அப்படி தான் சொல்வேன் என்று இவர் அடாவடியாக பேசுவதை பார்த்து சக போட்டியாளர்கள் முகம் சுளித்து இருக்கின்றனர். ஆனால் நெட்டிசன்கள் வழக்கம்போல இவரை கலாய்த்து தள்ளி கமெண்ட்டுகளில் கிழித்து தொங்க விட்டு வருகிறார்கள்.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications