ஜோசியத்தை தொடங்கிய அபிஷேக்..கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்
சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பு செய்த செயலை மீண்டும் தொடங்கிவிட்டார் அபிஷேக்.
ஏற்கனவே இவர் மீது காண்டாக இருக்கும் நெட்டிசன்கள் இப்போது மீண்டும் தங்களுடைய அர்ச்சனையை தொடங்கிவிட்டார்கள்.
தனக்கு தெரிந்த வேலையை தானே எங்கே போனாலும் செய்ய முடியும் அதைதான் இப்போது அபிஷேக் செய்து கொண்டிருக்கிறார் என்று அவருடைய ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.

இரண்டுமே இருக்கிறது
பிக்பாஸ் நிகழ்ச்சி என்பது பிரபலமாகாத பலரையும் பட்டிதொட்டியெல்லாம் பிரபலமாக்க வைத்துவிடும். அதுமட்டுமல்லாமல் ஏற்கனவே பேரும் புகழோடம் இருந்தவர்களை கூட ஒரு சில நேரங்களில் தங்களுடைய புகழையும் நல்ல பெயரினையும் கெடுத்துவிட்டு இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி இருக்கின்றனர். இதனாலேயே இந்த நிகழ்ச்சியில் பலர் கலந்து கொள்வதற்கு யோசித்துக் கொண்டிருக்கும் போது எப்படியாவது இதில் கலந்துகொண்டு விட வேண்டுமெனறு பலர் போட்டி போட்டுக் கொண்டு இந்தமுறை இதில் கலந்து கொண்டிருக்கின்றனர்.

யூடியூபர் அபிஷேக் அறிமுகம்
அதனாலேயே இந்த முறை பல பிரபலமாகாத புதுமுகங்கள் நிகழ்ச்சியில் அறிமுகமாகி இருக்கிறனர். போட்டியாளர்கள் அனைவரும் தங்களுடைய பெயர் நல்ல முறையில் வளர்ந்துவிட வேண்டும் என்றுதான் அடியெடுத்து வைத்து இருக்கின்றனர். ஆனால் அவர்கள் எதிர்பார்ப்பையும் மீறி அவர்களைப் பற்றிய தவறான கண்ணோட்டம் கூட ஒரு சில நேரங்களில் சில போட்டியாளர்களுக்கு நடைபெற்று விடுகிறது. ஆனால் ஏற்கனவே ரசிகர்களாலும் நெட்டிசன்களாளும் கொண்டாடப்பட்டு வந்த அபிஷேக் இந்த நிகழ்ச்சிக்கு வந்த பிறகும் அதே நிலையில் தான் இருந்து வருகிறார்.

குதர்க்கமான ரிவ்யூ
அபிஷேக் எதர்த்தமாக செய்யும் செயல்கள் கூட அவரை வெறுக்கும் நெட்டிசன்களுக்கு காண்டாகவே இருந்து வருகிறது. அந்த மாதிரி தான் அவர் ஒரு யூடியூபர் ஆக இதற்கு முன்பு ஒளிபரப்பான பாஸ் நிகழ்ச்சிகளை பலமுறை ரிவ்யூ எடுத்து இருக்கிறார். ஆனால் தற்போது அதே போல் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருப்பதை மறந்து ரிவ்யூவை தொடங்கிவிட்டார். இதனைப் பார்த்ததும் காண்டான நெட்டிசன்கள் இவரும் தானே இருக்கிறார். அவரை பற்றி ஏதாவது பேசுகிறாரா?? என்று கேட்டு வருகின்றனர். ஆனால் சக போட்டியாளர்கள் பற்றி ஒருமுறை இவர்கள் இப்படி நினைப்பார்கள் என்று பாசிட்டிவாக கூறுகிறார். மறுமுறை இதுதான் மக்கள் நினைப்பார்கள் என்று அவருடைய மனதில் இருப்பதையெல்லாம் ரிவ்யூவாக கூறிக் கொண்டிருக்கிறார்.

முதல் எலிமினேஷன் யார்
இன்றைய முதல் ப்ரோமோவில், இவரையும் சேர்த்து 8 போட்டியாளர்கள் எலிமினேஷனில் இருக்கின்றனர். ஆனால் அவர்கள் ஒவ்வொருவரையும் ரசிகர்கள் எந்த மாதிரி நினைப்பார்கள் என்று இவர் தன்னுடைய ரிவ்யூ தொடங்கி இருக்கிறார். இவர் இந்த மாதிரி பேசத் தொடங்கியதும், நெட்டிசன்கள் ஜோசியத்தை ஆரம்பித்துவிட்டார் அபிஷேக் என்று கலாய்த்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் தங்களுடைய ராசியைக் கூறி அதற்கு ஜோசியம் கூறவும் இவரிடம் கேட்டு வருகின்றனர். ஏற்கனவே யூடியூபில் இந்த மாதிரி கேள்வி கேட்டாலே அவர் பதில் கூற மாட்டார். இந்த நிலையில் இவர் இந்த நிகழ்ச்சியின் உள்ளே இருக்கும் போது இவரை பற்றி நெட்டிசன்கள் பேசும் வார்த்தைகளுக்கு அவர் வெளியே வந்த பிறகுதானே பதிலளிப்பார் என்று ரசிகர்கள் பலர் கூறி வருகின்றனர்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications