உடைந்து போய் ஹீரோவுக்கு போனை போட்ட அபிநய்.. ஓ காட்.. நடிகரின் அம்மா இந்த நடிகையா? செம விஜய் சேதுபதி
சென்னை: சினிமா ஒரு நன்றி கெட்ட உலகம்.. இங்கே கீழே விழுந்துவிட்டால், தூக்கிவிட யாருமே வரமாட்டார்கள் என்பதையும் புரிந்து கொண்டதாக நடிகர் அபிநய் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.. இன்று உயிருக்கு போராடி கொண்டிருக்கும் அபிநய்க்கு கோடிகளில் சம்பளம் வாங்கும் யாருமே உதவவில்லை என்று மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு கூறியிருக்கிறார்.. அத்துடன், அபிநய்யின் அம்மாவை பற்றியும், விரிவாகவே பேசியிருக்கிறார்.
Cheyyaru Balu என்ற யூடியூப் சேனலில் பேசியிருக்கும் மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு, "எப்போதுமே ஒரு மனிதன் நன்றாக இருந்தால்தான், 10 பேர் மதிப்பார்கள்.. சீட்டுக்கட்டு மாதிரி சரிந்துவிட்டால், ஒருத்தரும் திரும்பி பார்க்க மாட்டார்கள்.. அப்படித்தான் இன்று நடிகர் அபிநய்யின் நிலைமையும் ஆகிவிட்டது.

அபிநய்யின் அம்மா மலையாளத்தில் பிரபலமான நடிகை ராஜாமணி.. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி 110 படங்களுக்கு மேல், பல உச்ச நடிகர்களுடன் நடித்திருப்பவர்.. அபிநய்யின் துள்ளுவதோ இளமை படம் முடித்ததுமே 9 புரடியூடிசர்கள் வீட்டில் வந்து உட்கார்ந்துவிட்டார்களாம்..
அம்மா நடிகையின் அட்வைஸ்
பெட்டி நிறைய பணத்தை பார்த்ததுமே, அபிநய்க்கு தலைகால் புரியவில்லை.. அப்போது முதிர்ச்சியான சினிமா அனுபவம் கொண்ட, அவரது அம்மா, முதலில் கதையை கேளு. அதற்கு பிறகு ஒப்புக் கொள் என்று பலமுறை எச்சரித்திருக்கிறார்..
ஆனால் மளமளவென அட்வான்ஸை வாங்கி கொண்ட அபிநய், ஜங்ஷன் என்ற படத்தில் நடித்தார்.. இது அபிநய்யின் 2வது படமாகும்.. அந்த படம் தியேட்டரில் ஒரு ஷோ மட்டுமே ஓடியது.. அத்துடன் அட்வான்ஸ் தந்தவர்கள், யாரும் திரும்பி வரவேயில்லை.. அந்த ஒரேயொரு தோல்விதான் அபிநய்யை கீழே இறக்கிவிட்டது..
கேன்சர் பாதிப்பில் அம்மா
இதற்கு பிறகு டப்பிங், விளம்பரங்களில் தலைகாட்டி நடித்து வந்தார் அபிநய்.. அப்போதுதான், அவரது அம்மாவுக்கு கேன்சர் பாதிப்பு ஏற்பட்டது. சிகிச்சைக்காக திரைத்துறையில் பலரிடம் உதவி கேட்டபோது யாருமே உதவவில்லை..
அப்போது திடீரென விஜய் சேதுபதியிடமிருந்து போன் வந்துள்ளது.. அம்மாவின் உடல்நிலை பற்றி கேட்டறிந்ததுடன், 3 நாளைக்கு ஒருமுறை சிகிச்சைக்காக பணம் அனுப்புகிறேன் என்று சொல்லி தொடர்ந்து பணம் அனுப்பினார்.. இத்தனைக்கும் அபிநய்க்கும் விஜய் சேதுபதிக்கும் எந்த தொடர்பும் இல்லை..
ஓடோடி வந்த விஜய் சேதுபதி
வன்மம் என்ற ஒரு படத்தில், அபிநய் அம்மாவும் நடித்திருந்தார்.. அப்போதுதான், அபிநய் அம்மா, இவ்வளவு பெரிய சீனியர் நடிகை என்பது விஜய் சேதுபதிக்கு தெரிந்துள்ளது..
அந்த படப்பிடிப்பின்போது, சினிமாவில் கதைத்தேர்வு, நடிப்பு குறித்தெல்லாம் விஜய் சேதுபதியிடம், அபிநய் அம்மா பல டிப்ஸ்களையும், அறிவுரைகளையும் தந்துள்ளார்..
மகனை போல நினைத்து, இப்படியான அறிவுரைகள் சொல்வது விஜய் சேதுபதிக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது.. அதனால்தான், அபிநய் அம்மாவின் சிகிச்சைக்கு ஓடோடிவந்து உதவினார் விஜய் சேதுபதி.
தோள் கொடுத்த பிரபலம்
ஆனாலும், அபிநய் அம்மா சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.. அம்மாவின் சடலத்தை தூக்குவதற்குகூட யாருமே உடனில்லை.. இதனால், ஒரு பிரபல நடிகருக்கு போனை போட்டு, தன்னுடைய நிலைமையை கதறி அழுது சொல்லியிருக்கிறார் அபிநய்.. ஆனால், அந்த பிரபல நடிகர் எதுவுமே பேசாமல் போனை துண்டித்துவிட்டார்...
அப்போதுதான் மீண்டும் விஜய் சேதுபதி தனக்காக வந்து நின்றதாகவும், வாழ்நாளில் விஜய் சேதுபதியை மறக்கவே மாட்டேன் என்றும் அபிநய் ஒரு பேட்டியில் உணர்ச்சிகரமாய் சொல்லியிருக்கிறார்.. சினிமா ஒரு நன்றி கெட்ட உலகம்,.. இங்கே கீழே விழுந்துவிட்டால், தூக்கிவிட யாருமே வரமாட்டாகள் என்பதையும் புரிந்து கொண்டதாக அபிநய் அந்த பேட்டியில் கூறியிருந்தார்" என்றெல்லாம் அந்த பேட்டியில் நினைவூட்டியிருக்கிறார் செய்யாறு பாலு.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications