விஜய் டிவி நடிகர் அவினாஷ் வீட்டில் விசேஷம்.. அம்பிகா முதல் ரம்பா வரை பிரபலங்கள் என்ட்ரி.. உருக்கமான போஸ்ட்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான வீட்டுக்கு வீடு வாசல் படி சீரியலில் கதாநாயகனாக நடித்த நடிகர் அவினாஷ் மனைவிக்கு நேற்று வளைகாப்பு பங்க்ஷன் நடைபெற்றிருக்கிறது. அதில் சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் வெள்ளித்திரை பிரபலங்கள் நடிகை ரம்பா, அம்பிகா உட்பட பலர் கலந்து கொண்டு ஆசிர்வாதம் வழங்கியிருக்கின்றனர். அப்போது எடுத்த வீடியோவை அவினாஷ் தன்னுடைய சோசியல் மீடியா பக்கங்களை பகிர்ந்து இருந்தார்.
நடிகர் அவினாஷ் ஆரம்பத்தில் சன் டிவியில் ஒளிபரப்பான "அழகு" சீரியலின் மூலமாகத்தான் நடிகராக அறிமுகமானார். அதற்கு முன்பு டான்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார். குழந்தை நட்சத்திரமாக டான்ஸ் ஆடத் தொடங்கிய அவினாஷுக்கு அழகு சீரியல் நல்ல பிரபலத்தை கொடுத்தது. அந்த சீரியலுக்கு பிறகு சன் டிவியில் கயல் சீரியலிலும் நடித்திருந்தார்.

கயல் சீரியல் கண்ணன்
கயல் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இவர் விஜய் டிவியில் டான்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது இறுதிவரை அந்த நிகழ்ச்சியில் பயணித்திருந்தார். ஆனால் டான்ஸ் நிகழ்ச்சிக்கு பிராக்டிஸ் செய்து கொண்டு இருக்கும் போது அவருடைய காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு சில மாதங்கள் ரெஸ்ட்டில் இருந்தார். அப்போது கயல் சீரியலில் இருந்து பாதியில் விலகி விட்டார்.
விஜய் டிவி சீரியல் நடிகர்
ஆனால் சில மாதங்கள் கழித்து மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி விஜய் டிவியில் வீட்டுக்கு வீடு வாசல் படி என்ற சீரியலில் கண்ணன் கேரக்டரில் நடித்து வந்தார். ஆனால் அந்த சீரியல் திடீரென்று முடிவுக்கு வந்துவிட்டது. ஆனாலும் அவினாஷ் ஜீ தமிழில் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் இப்போது போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கிறார். அதே சமயத்தில் இவருக்கு கடந்த வருடத்தில் தான் திருமணம் நடந்தது.
காதல் திருமணம்
தன்னுடைய 13 வருட காதலியை திருமணம் செய்து கொண்டேன் என்று அந்த நேரத்தில் அவினாஷ் என்று பதிவு வெளியிட்டிருந்தார். ஆரம்பத்தில் நட்பாக தொடங்கிய எங்களுடைய பயணம் காதலின் மூலமாக இன்று கல்யாணத்தில் இணைந்திருக்கிறது. இறுதியில் நாங்கள் இரண்டு வீட்டாரின் சம்மதத்தை பெற்று திருமணம் செய்து விட்டோம் என்று அந்த பகுதி வெயில் அவினாஷ் தெரிவித்திருந்தார். ஆனால் எளிமையாக இவர்களுடைய திருமணம் நடந்த நிலையில் இப்போது அவினாஷ் மனைவி கர்ப்பமாக இருக்கிறார்.
நடிகர் அவினாஷ் மனைவி வளைகாப்பு
அவினாஷ் தன் மனைவி வளைகாப்பு பங்க்ஷனை பிரமாண்டமாக நடத்திருக்கிறார். அதில் சின்னத்திரை, வெள்ளித்திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர். அவினாஷ் பல வருடங்களாக சின்னத்திரையில் பயணித்து வருகிறார் அவருடைய போலவே அவருடைய தங்கை அன்ஷிதாவும் விஜய் டிவி, ஜீ தமிழ் என்று பல சேனல்களிலும் சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
பாக்கியலட்சுமி சீரியல் அமிர்தா
அன்ஷிதா ஆரம்பத்தில் காற்றுக்கென்ன வேலி சீரியலில் வில்லியாக நடித்திருந்தார். இப்போது விஜய் டிவியில் பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தா கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதுபோல அவினாஷ் மனைவியின் வளைகாப்பில் நடிகை ரம்பா, நடிகை அம்பிகா உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். அப்போது எடுத்த வீடியோவை அவினாஷ் தன்னுடைய சோசியல் மீடியா பக்கங்களில் பகிர்ந்து இருக்கிறார். அவருக்கு ரசிகர்கள் பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்












Click it and Unblock the Notifications