Ciby: "வெள்ளையாக பொறந்தது எங்க தப்பா?" நேரடியாக அப்படி கேக்குறாங்க! பிக் பாஸ் பிரபலம் ஆதங்கம்
சென்னை: தமிழ் சினிமாவில் இப்போ நிறைய புதுசு புதுசாப் படங்கள் வந்துட்டே இருக்கு. அந்த வரிசையில, 'காதல்' படம் கொடுத்த அதே ஃபீலைக் கொடுக்கப் போகுதுன்னு எதிர்பார்க்கப்படுற 'கிறிஸ்டினா கதிர்வேலன்' படத்தோட இசை வெளியீட்டு விழா சென்னையில கலகலப்பா நடந்துச்சு.
ஸ்ரீ லட்சுமி ட்ரீம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் டாக்டர் ஆர். பிரபாகர் ஸ்தபதி தயாரிப்புல, எஸ்.ஜே.என். அலெக்ஸ் பாண்டியன் டைரக்ஷன்ல கௌஷிக் ஸ்ரீ ராம், பிரதீபா நடிச்சிருக்க இந்தப் படத்தோட விழாவுக்கு, இயக்குநர்கள் எஸ்.ஆர். பிரபாகரன், விஜய் ஸ்ரீ, மைக்கேல் கே. ராஜா மட்டுமில்லாம, நம்ம பிக் பாஸ் பிரபலங்களான விஷ்ணு, சிபி எல்லாரும் சிறப்பு விருந்தினரா வந்திருந்தாங்க.

பிக் பாஸ் 6 சிபி
நடிகர் சிபி, 'பிக் பாஸ் தமிழ் சீசன் 6' நிகழ்ச்சியில் போட்டியாளரா கலந்துகிட்டு ரசிகர்கள்கிட்ட ரொம்பப் பிரபலம் ஆனவர். இவரது புத்திசாலித்தனமான கேம் பிளேக்காகவும், கூலான கேரக்டருக்காகவும் இவர் பேசப்பட்டார். இவர் ஏற்கெனவே சிலப் படங்கள்ல நடிச்சிருந்தாலும், பிக் பாஸ் நிகழ்ச்சிதான் இவருக்குப் பெரிய ரீச் கொடுத்தது. பிக் பாஸ் முடிஞ்ச பிறகு, இவர் இப்போ சினிமாவில் குணச்சித்திர வேடங்கள்லயும், நல்லக் கதாபாத்திரங்கள்லயும் கவனம் செலுத்திக்கிட்டு இருக்கார்.
காதல் படத்துக்கான உணர்வு
விழாவில் பேசிய சிபி, இந்தப் படத்தோட பாடல்களையும், ட்ரெய்லரையும் பார்த்தப்போ அவருக்கு ஏற்பட்ட உணர்வச் சொன்னாரு. "இந்தப் படத்தோட பாடல்களையும், முன்னோட்டத்தையும் பார்க்கும்போது எனக்கு இயக்குநர் பாலாஜி சக்திவேல் சாரோட 'காதல்' படத்தைப் பார்க்கும் போது ஏற்பட்ட உணர்வுதான் வந்துச்சு. ஏன் தெரியலை, அந்தப் படத்தைப் பார்க்கும்போதும் இதே மாதிரி ஒரு ஃபீல் இருந்தது. இந்தப் படமும் அதே மாதிரிப் பெரிய வெற்றி பெறணும்னு வாழ்த்துறேன்," என்றார் சிபி.
வெள்ளையாக இருப்பது குற்றமா
சிபி தன்னோடப் பேச்சில, புது நடிகர்கள் சந்திக்கும் ஒரு முக்கியமானப் பிரச்சனையைப் பற்றி பேசினார். இந்தப் படத்தோட ஹீரோவான கௌஷிக் ராமுக்கு வாழ்த்துச் சொன்ன சிபி, "ஹீரோ வெள்ளையாக இருக்கிறாரே, இவர் எப்படி இந்தக் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்?"ன்னு தன்னைக் கேட்டதா சொன்னாரு. "இதே விமர்சனத்தை நானும் ஆரம்பத்தில் சந்திச்சேன். வெள்ளையாகப் பொறந்தது எங்களுடைய தப்பா? அதே நேரத்துல சிலர் பார்த்தவுடனே ஸ்மார்ட்டா இருக்கிறாய்ன்னு சொல்வாங்க,"ன்னு சிபி ஆவேசப்பட்டாரு.
முக்கிய விஷயம்
"வெள்ளையாக இருக்கிறதில் எந்தத் தவறும் இல்லை. ஆனா, அவர் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்திற்கு அவர் எவ்வளவு தூரம் நியாயம் சேர்க்கும் வகையில் நடிச்சிருக்கார் என்பதை மட்டும் பார்த்து ரசிக்கணும்,"ன்னு அழுத்தமாச் சொன்னாரு.
இசையும், பிரதீபாவின் திறமையும்
இசையமைப்பாளர் என். ஆர். ரகுநந்தன் பற்றி பேசின சிபி, அவர் ரொம்பவே நகைச்சுவை உணர்வு கொண்டவர் என்றும், இயக்குநர்கள் என்ன கேக்குறாங்களோ அதைச் சரியாக கொடுக்கக்கூடியத் திறமை மிக்கவர் என்றும் பாராட்டினார். நாயகி பிரதீபாவோட ரீல்ஸ்களை தான் பார்த்ததாகவும், அவங்க ரொம்ப எனர்ஜியோட டான்ஸ் ஆடுறதையும், ராப் பாடுறதையும் பார்த்ததாகவும், "இவ்வளவு திறமையானவர் படத்துல நடிக்கணும்னு எதிர்பார்த்தேன், அது இப்போ நடந்திருக்கு"ன்னு சொல்லி வாழ்த்துத் தெரிவித்தார்.
மொத்தத்துல, கிராமத்துக் காதல் கதையாக உருவாகி இருக்கிற 'கிறிஸ்டினா கதிர்வேலன்' படத்துக்குப் பெரிய திரையரங்குகளும், காட்சிகளும் கிடைக்க வேண்டும்னு இறைவனைப் பிரார்த்திச்சுக்கிட்டுத் தன் பேச்சை முடிச்சார் சிபி. இந்தப் படம், நிச்சயம் புதுமுகங்களுக்கு நல்ல எதிர்காலத்தை அமைச்சு கொடுக்கும்னு எதிர்பார்க்கலாம்!
-
வீடியோ எடுத்து மிரட்டுகிறார்.. நாஞ்சில் விஜயன் மீது புகார் கொடுத்த டிக் டாக் பிரபலம்.. அடுத்த பஞ்சாயத்து -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு












Click it and Unblock the Notifications