ஐசரி கணேஷ் புகைப்படத்தை, கூல் சுரேஷ் செய்த செயல்... எப்படித்தான் யோசிக்கிறாரோ இப்படி எல்லாம்..!!
சென்னை: சில நாட்களாக சமூக வலைதளங்களில் கண்டன்ட் இல்லாத காமெடியாக வலம் வந்து கொண்டிருப்பவர் கூல் சுரேஷ்.
சிம்புவின் குடும்ப நண்பராக அறியப்படும் இவர் கடந்த ஒரு வருடமாக சமூக வலைதளங்களில் பண்ணும் அலப்பறைக்கு அளவே கிடையாது.
தன்னுடைய நண்பர் சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக செய்தவைகள் தான் அவைகள். தற்பொழுது வெந்து தணிந்தது காடு படத்தின் தயாரிப்பாளர் புகைப்படத்தை வைத்து இவர் செய்துள்ள செயலைப் பார்த்து பலர் சிரிப்பதா!? அழுவதா!? என்று குழம்பி வருகின்றனர்.

கூல் சுரேஷ் செய்த செயல்
சிம்பு படம் என்றாலே பிரச்சனை இல்லாமல் இருக்காது என்ற ஒரு சூழ்நிலை இருந்தது.அவரது படங்கள் பூஜை போடுவதோடு சரி, தியேட்டருக்கு வந்தால் தான் உறுதி என்ற நிலையிலே பல படங்கள் கிடப்பில் கிடந்தது. ஆனால் வெந்து தணிந்தது காடு படத்தை பூஜை போட்டது முதல் தற்பொழுது திரையரங்கில் ரிலீஸ் ஆவது வரை படத்தை உயிர்ப்போடு வைத்திருந்த பெருமை கூல் சுரேஷையே சேரும். சிம்பு இந்த படத்தை கைவிட வேண்டும் என்று நினைத்திருந்தால் கூட அதை செய்ய முடியாத அளவிற்க வெந்து தணிந்தது காடு படத்தை பற்றிய பேச்சுக்கள் அடங்காமல் பார்த்துக் கொண்டவர் கூல் சுரேஷ்.

கண்டுக்காத தயாரிப்பாளர்கள்
தான் போகும் நிகழ்ச்சிகள், தியேட்டர்களில், வெந்து தணிந்ததுக்கு காடு படத்தை குறித்து வித்தியாசமாக விளம்பரம் செய்வதால் தனக்கு எந்த பட வாய்ப்புகளும் கிடைக்கவில்லை என்றும், வாரம் வாரம் என் பேச்சை சமூக வலைதளங்களில் ரசிக்கிறார்கள் ஆனால் படத்தில் நடிக்க வைப்பதற்கு யாரும் தயாராக இல்லை என்று பல இடங்களில் புலம்பி தள்ளினார் கூல் சுரேஷ்.

ஐபோன் பரிசு
வெந்து தணிந்தது காடு படத்திற்கு கூல் சுரேஷ் செய்த விளம்பரத்தை பார்க்கும் சிம்புவின் அடுத்தடுத்த பட தயாரிப்பாளர்கள் இனிமேல் கூல் சுரேஷ் சவுண்ட் விடுவதற்கு ஏற்ற தலைப்பை சிம்பு படத்திற்கு வைக்க முடிவு செய்வதற்கும் வாய்ப்பு இருக்கிறது என்று பலர் இணையத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர். வெந்து தணிந்தது காடு படத்தின் வெற்றியை ஒட்டி தனக்கும் ஐபோன் பரிசளித்த ஐசரி கணேஷ் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கும் கூல் சுரேஷ் தனது பூஜை அறையில் அவரது போட்டோவை வைத்துள்ளார்.

நெட்டிசன்கள் கலாய்ப்பு
கடவுளுக்கு சமமாக ஐசரி கணேஷ் போட்டோவை வைத்து மரியாதை செய்யும் கூல் சுரேஷின் புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் சிம்புவை வைத்து பிரேக் இல்லாமல் படம் எடுத்து அதையும் வெற்றி படமாக்கி யாரும் செய்ய முடியாத சாதனையை ஐசரி கணேஷ் செய்திருப்பதால் இந்த மரியாதையா!? என்று கலாய்த்து வருகின்றனர்.சிம்பு தனது அடுத்தடுத்த படங்களை இவ்வாறு சிறப்பாக பிரேக் இல்லாமல் கொடுத்தால் எத்தனை புகைப்படத்தை தான் கூல் சுரேஷ் அவர் பூஜை அறையில் மாட்டுவார் என்று நக்கலாக கேள்வி கேட்டு வருகின்றனர்.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications