திருமணம் ஆகி ஒரே வருடத்தில் விவாகரத்து! இன்று 2வது திருமணம் செய்த நடிகர் கிருஷ்ணா! அவரே வெளியிட்ட பதிவு
சென்னை: இன்று சுப முகூர்த்த நாள் என்பதால் பல பிரபலங்கள் தங்களுடைய திடீர் திருமண அறிவிப்பை வெளியிட்டு வருகிறார்கள். அந்த வரிசையில் நடிகர் கிருஷ்ணா இன்று தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் தான் மணக்கோலத்தில் இருக்கும் போஸ்ட் ஒன்று போட்டு இருக்கிறார். இவருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள். கிருஷ்ணாவிற்கு ஏற்கனவே ஒரு திருமணம் நடைபெற்ற நிலையில் அந்த திருமண வாழ்க்கையில் ஒரு வருடத்தில் முடிவுக்கு வந்துவிட்டது. இந்த நிலையில் இவர் இன்று இரண்டாவது திருமணம் செய்திருக்கிறார்.
தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகர்கள் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் மக்கள் மனதில் தங்களுக்கு என்ற ஒரு இடத்தை பிடித்து இருக்கிறார்கள். அதுபோல ஒருவர் தான் நடிகர் கிருஷ்ணா. இவர் கற்றது களவு, கழுகு போன்ற திரைப்படங்களில் தன்னுடைய தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். அதிலும் இவருடைய கழுகு திரைப்படம் பலருடைய பாராட்டையும் பல விருதுகளையும் பெற்றது. இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற "ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம்" பாடல் லவ் ஃபெயிலியர் பாடலாக இப்போதும் வலம் வருகிறது.

கிருஷ்ணா நடித்த திரைப்படம்
இந்த நிலையில் கிருஷ்ணா இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்ட போஸ்ட் தான் வைரலாகி வருகிறது. கிருஷ்ணா 2008 ஆம் ஆண்டு நீளன் இயக்கிய அலிபாபா திரைப்படத்தின் மூலமாக தான் தமிழில் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். அந்த திரைப்படத்திற்கு பிறகு கற்றது களவு, கழுகு வல்லினம், யாமிருக்க பயமேன், ராயர் பரம்பரை, வானவராயன் வல்லவராயன் உட்பட பல திரைப்படங்களில் நடித்திருந்தார்.
நடிகர் கிருஷ்ணா இன்ஸ்டா போஸ்ட்
சினிமாவில் மட்டுமல்லாமல் வெப் சீரிசிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் இன்று தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் மனைவியுடன் எடுத்த திரைப்படங்களை பகிர்ந்து நியூ பிகினிங் "A new begining" என்று பதிவு வெளியிட்டு இருக்கிறார். இந்த பதிவு வெளியான சில நிமிடங்களில் அதிகமான லைக்குகள் மற்றும் கமெண்டுகள் பெற்று வருகிறது.
நடிகர் கிருஷ்ணா திருமணம்
ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். கிருஷ்ணா இப்போது ஒரு சில திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தாலும் அவருடைய திருமணம் மிகவும் எளிமையான முறையில் நடைபெற்று இருக்கிறது. ஆனால் பெண்ணின் முகத்தை அவர் காட்டவில்லை. கிருஷ்ணாவிற்கு ஏற்கனவே சில வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆனது. ஆனால் ஒரு வருடத்தில் அது விவாகரத்தில் முடிந்து விட்டது. இப்போது அவர் இரண்டாவது திருமணம் செய்து இருக்கிறார். அந்த புகைப்படங்கள் தான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications