அட இது யார் பார்த்த வேலை.. மீண்டும் கில்லி முத்துப்பாண்டியின் காதல்.. திரிஷாவின் சிறப்பான செயல்
சென்னை:"செல்லம் ஐ லவ் யூ" இந்த டயலாக்கை தமிழ் சினிமா ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது.
முத்துப்பாண்டியாக பிரகாஷ் ராஜ் கில்லி படத்தில் தெறிக்கவிட்ட இந்த வசனம் இன்றளவும் கேட்டவுடன் மக்கள் முகத்தில் சின்ன புன்னகையை வர வைக்கும் அளவிற்கு எவர்கிரீன் வசனமாக உள்ளது.
இந்த டயலாக்கை தனது ட்விட்டர் பக்கத்தில் சமீபத்தில் தாம் நடித்த திருச்சிற்றம்பலம் படத்தை வைத்து எடிட் செய்யப்பட்ட வீடியோவோடு பதிவிட்டுள்ளார் பிரகாஷ்ராஜ். திரிஷாவும் அதனை ரீட்விட் செய்தது தான் ஹைலைட்டே..!!!

மறக்க முடியாத கில்லி
விஜயை ஒரு முழு நேர ஆக்சன் ஹீரோவாக மாற்றி அவரது கேரியரை உச்சத்திற்கு கொண்டு சென்ற படம் கில்லி. படம் மட்டுமல்ல படத்தில் உள்ள பாட்டுகளும் பட்டி தொட்டி எங்கும் மிகப்பெரிய ஹிட் ஆனது. ஹீரோயினாக அந்த நேரத்தில் வளர்ந்து வந்த திரிஷாவிற்கும் இந்த படம் திருப்புமுனையாக அமைந்தது. படத்தில் 'அப்படி போடு' பாடலில் திரிஷா ஆடிய டான்ஸை பார்த்து தமிழ்நாடே அப்ப சொக்கி போனது. தில், தூள் என்று இரண்டு மெகா ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் தரணிக்கு கில்லி படம் ஹட்ரிக் வெற்றியாய் அமைந்திருந்தது.

பிரகாஷ் ராஜின் பிரமாதமான பெர்பாமன்ஸ்
அஜித்தின் ஆசை படத்தில் சாஃப்ட்டான பிளேபாயாக வில்லத்தனம் செய்திருந்த பிரகாஷ்ராஜ், இந்தப் படத்தில் மதுரை முத்து பாண்டியாக முரட்டு காதலனாக அவதாரம் எடுத்திருந்தார். பிரகாஷ் ராஜை சிறந்த வில்லன் நடிகராக காட்டிய திரைப்படம் கில்லி. அந்த படத்தில் அவர் பேசிய வசனங்களும் பிரகாஷ்ராஜின் மேனரிசமும் என்றும் மறக்க முடியாத வகையாக இருந்து வருகிறது.

தனுஷின் அப்பாவாக பிரகாஷ்ராஜ்
கில்லி படம் வெளிவந்து 18 ஆண்டுகள் முடிவடைந்து விட்டது. அதன் பிறகு வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் பல உச்சத்தை தொட்டுவிட்டார் பிரகாஷ்ராஜ். திரிஷாவும் இன்று வரை முன்னணி கதாநாயகியாக பொன்னியின் செல்வன் படம் வரை நடித்திருக்கிறார். சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷின் அப்பாவாக பிரகாஷ்ராஜ் நடித்திருந்தார். இந்தப் படத்தில் அவரது மனைவியாக ரேவதியும் நடித்திருந்தார். படத்தின் ஒரு சீனில் பிரகாஷ்ராஜ் இறந்து போன தனது மனைவி ரேவதியை நினைத்து பீல் பண்ணுவது போல் ஒரு காட்சி இருக்கும்.

தரமான வீடியோ எடிட்டிங்
பிரகாஷ் ராஜ் திருச்சிற்றம்பலம் படத்தில் தனது இறந்து போன மனைவியை நினைத்து பீல் பண்ணும் காட்சியையும்,18 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த கில்லி படத்தில் திரிஷாவை லவ் டார்ச்சர் செய்வதையும் வைத்து நமது மீம்ஸ்கிரியேட்டர்கள் அருமையாக ஒரு வீடியோ எடிட் செய்து சமூகவளைதளங்களில் பரவ விட்டுள்ளனர். பார்ப்பதற்கு ஒரிஜினல் ஆகவும் நகைச்சுவையாக இருக்கும் இந்த வீடியோவை பிரகாஷ்ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். இதைப் பார்த்த திரிஷாவும் லவ் ஃபெயிலியர் ஆன தனது மாமா முத்துப்பாண்டியை எண்ணி சிரித்தபடி ரீட்வீட் செய்துள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications