அப்போ அப்படி.. இப்போ இப்படி.. மாறாத காதல்..வாழ்த்தும் ரசிகர்கள்
சென்னை: சின்னத்திரை மட்டுமல்லாமல் வெள்ளித்திரையில் நடித்து வரும் பிரேம் குமார் தன்னுடைய மனைவியோடு உள்ள புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார்.
எதார்த்தமாக எடுத்த புகைப்படங்களை தன்னுடைய ரசிகர்களிடம் பிரேம்குமார் பகிர்ந்ததும் ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.
பிரேம் குமார் சின்னத்திரையை விட்டு வெள்ளி திரைக்கு சென்றாலும் தற்போது சமூக வலைத்தளத்திலும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

குறையாத பாசம்
சின்னத்திரையில் குணச்சித்திர வேடத்திலும் கதாநாயகனுமாக நடித்த பிரேம்குமார் தற்போது வெள்ளி திரையில் நடித்துக் கொண்டிருக்கிறார். தான் என்னதான் சீரியல்களிலும் சினிமாக்களிலும் பிசியாக இருந்தாலும் தன்னுடைய குடும்பத்தோடு இருக்கும் பாசம் எப்போதும் குறைவதில்லை என்று அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வெளிக்காட்டி வருகிறார். தன்னுடைய குடும்பத்தோடு வெளியிடங்களுக்கு சென்று அந்தப் புகைப்படங்களை அடிக்கடி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருவது பிரேம்குமார் வழக்கமாக இருந்து வருகிறார். அந்த மாதிரி தான் தற்போது கூட தன்னுடைய மனைவியோடு எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதைப் பார்த்ததும் ரசிகர்கள் பலர் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

டான்ஸ் நிகழ்ச்சியில் வெற்றி
பிரேம்குமார் ராம்நாட்டின் ராஜாவான சண்முக ராஜேஸ்வர சேதுபதியின் பேரனாக இருந்தாலும் தனக்கு நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக கே பாலச்சந்தர் தயாரித்த சமுத்திரக்கனி இயக்கிய அண்ணி என்ற சீரியலில் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து அண்ணாமலை என்ற சீரியலில் அவர் நடித்ததை பார்த்து தான் அவருக்கு கருணாநிதியால் கண்ணம்மா எனும் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.திரைப்படங்களில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்தாலும் ஜோடி நம்பர் ஒன் சீசன் ஒன்றில் அண்ணாமலை சீரியலில் தன்னோடு நடித்த பூஜா உடன் கலந்து கொண்டு வெற்றியும் பெற்றார்.

வெள்ளித்திரையில் அறிமுகம்
சீரியல்களில் இவரைப் பார்த்த ரசிகர்கள் திரைப்படங்களில் இவரை பார்த்ததும் இவருடைய நடிப்பை வெகுவாக பாராட்டி வந்தனர். இந்த நிலையில் தான் பிரேம்குமார் இனி சீரியலில் நடிக்கப் போவதில்லை என்று அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். தற்போது தொடர்ந்து திரைப்படங்களில் அதிகமாக நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் நடிக்கும் கதாபாத்திரங்களில் போலீஸ் கதாபாத்திரத்தை அதிகமாக நேசிப்பதாக பிரேம்குமார் கூறியிருக்கிறார். திரைப்படங்களில் ஒரு சில இடங்களில் தோன்றினாலும் தன்னுடைய கேரக்டரை ரசிகர்கள் அதிகமாக ரசிக்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்து வருவதாக பிரேம்குமார் கூறியிருக்கிறார்.

மாறாத காதல்
தன்னுடைய மனைவியோடு எடுத்த புகைப்படம் பலவற்றை ஒன்றாக தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருக்கிறார். அதை பார்த்ததும் ரசிகர்கள் அப்போ அப்படி இப்போ இப்படியா?? உருவம் மட்டும் தான் மாறி இருக்கிறது தவிர உங்களுக்குள் காதல் கொஞ்சமும் குறையவில்லை என்று கூறி வருகிறார்கள். அது மட்டுமல்லாமல் இவர்கள் இருவரையும் நீண்ட நாட்கள் இப்படியே இருக்கும்படி வாழ்த்துக்கள் குவித்து வருகின்றனர்.
-
சிறகடிக்க ஆசை: விஜயாக்கு செக் வைத்த ரோகிணி.. ஸ்ருதியை அழிக்க நீத்து வைத்த கூட்டணி.. செம ட்விஸ்ட் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு












Click it and Unblock the Notifications