பிரச்சனைகளுக்கு மத்தியில் ரவி மோகன் எடுத்த முக்கிய முடிவு! அதிகாரப்பூர்வமாக அவரே அறிவிப்பு.. குவியும் வாழ்த்து
சென்னை: நடிகர் ரவி மோகன் (ஜெயம் ரவி) கடந்த வருடத்தில் தன் மனைவியோடு விவாகரத்தை அறிவித்து இருந்தார். அதற்கு பிறகு அவர் பற்றிய செய்திகள் அடிக்கடி பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில் ரவி மோகன் இப்போது புதியதாக ஸ்டுடியோ ஒன்றை தொடங்கியிருக்கிறார். அது குறித்து அவரே இன்று தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் பதிந்திருக்கிறார். அவருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
ஜெயம் படத்தின் மூலமாக பிரபலமடைந்த நடிகர் ரவி மோகன் அந்த திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு தன்னுடைய பெயரை ஜெயம் ரவி என்று மாற்றியிருந்தார். ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தன்னுடைய பெயரை ரவி மோகன் என்று மாற்றம் செய்திருந்தார். கடந்த வருடத்தில் அவருடைய குடும்பத்திலும் பல பிரச்சினைகள் வந்தது. காதலித்து திருமணம் செய்த ஆர்த்தியை தான் விவாகரத்து செய்வதாக ரவி மோகன் அறிவித்திருந்தார். அதற்கு ஆர்த்தி மறுப்பு தெரிவித்து இருந்தார்.

அறிக்கை
அதுபோல தங்கள் தரப்பு நியாயத்தை விளக்குகிறோம் என்று ரவி மோகன் மற்றும் ஆர்த்தி இருவருமே மாறி மாறி அறிக்கை வெளியிட்டிருந்தனர். ஆனால் கடந்த வாரத்தில் நீதிமன்றத்தில் இவர்கள் இருவரும் வெளியிட்ட அறிக்கைகளை நீக்க சொல்லி உத்தரவு வெளியிடப்பட்டது. அதனால் இருவரும் இப்போது அறிக்கையை நீக்கி இருக்கிறார்கள்.
ரவி மோகன் புகைப்படம்
இந்த நிலையில் இன்று காலை ரவி மோகன் தன்னுடைய தோழி கெனிஷாவுடன் குன்றக்குடி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்திருந்தார். அப்போது அங்கிருந்த பக்தர்களுடன் ரவி மோகன் மற்றும் கெனிஷா இருவரும் புகைப்படங்கள் எடுத்திருந்தனர். இந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் ட்ரெண்ட் ஆனது. இந்த நிலையில் ரவி மோகன் தான் புதியதாக ஸ்டுடியோ ஒன்று தொடங்கி இருக்கும் மகிழ்ச்சி செய்தியை தன்னுடைய சோசியல் மீடியா பக்கம் மூலமாக ரசிகர்களிடம் பகிர்ந்து இருக்கிறார்.

ரவி மோகன் புது நிறுவனம்
அது குறித்து ரவி மோகன் வெளியிட்ட பதிவில் தன்னுடைய புதிய நிறுவனத்திற்கு "ரவி மோகன் ஸ்டுடியோஸ்" என்று பெயரிட்டுள்ளார். "இந்த பெயர் மற்றும் லோகோவுக்கு பின்னால் எனது வாழ்க்கையை சினிமா அமைத்தது. எனவே என் பெயரிலேயே இந்த பயணத்தை தொடங்கினேன்" என்று அதில் தெரிவித்திருக்கிறார். ரவி மோகனின் புதிய பயணத்திற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications