24 மணி நேரம்தான் டைம்.. ஆர்த்திக்கு கெடு விதித்த ரவி மோகன்.. முடிவுக்கு வந்த பிரச்சனை
சென்னை: நடிகர் ரவிமோகன் தன்னை பற்றி தன்னுடைய மனைவி ஆர்த்தி மற்றும் அவருடைய அம்மா சுஜாதா விஜயகுமார் இருவரும் அவதூறு பரப்பி வருவதாகவும் அவர்கள் சோசியல் மீடியா பக்கங்களில் தன்னைப் பற்றி வெளியிட்ட அவதூறு பதிவுகளை நீக்க வேண்டும் என்று லீகல் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்.
நடிகர் ரவி மோகன் (ஜெயம் ரவி) கடந்த 2009 ஆம் ஆண்டு தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமாரின் மகளான ஆர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்த நிலையில் தான் ரவி மோகன் ஆர்த்தியை பிரிவதாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அறிவித்தார். அதற்கு ஆர்த்தி இது அவர் தன்னிச்சையாக எடுத்த முடிவு என்றும், என்னுடைய ஒப்புதல் இல்லாமல் எடுத்த முடிவு என்றும் கூறியிருந்தார்.

விவாகரத்து பிரச்சனை
பிறகு ரவி மோகன் ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் 2009 ஆம் ஆண்டு செய்த திருமணத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் அதில் குறிப்பிட்டிருந்தார். இந்த விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஆர்த்தியை எதற்காக பிரிகிறேன் என்று ரவி மோகன் தரப்பில் ஒரு பதிவு வெளியிடப்பட்டது. அதேசமயம் ஆர்த்தி தரப்பிலும் பதில் கொடுத்து ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் ரவி மோகன் பற்றி பல குற்றச்சாட்டுகள் வைத்திருந்தார்.
ரவி மோகன் அறிக்கை
ஆனால் தன் மீது வைத்த குற்றசாட்டுகள் எதுவும் உண்மை இல்லை என்று ரவி மோகன் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். இப்படி இருவரும் மாறி மாறி அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருந்தனர். அதேபோல ரவி மோகன் தன்னை சினிமா தயாரிக்க சொன்னதால் தான் நான் சினிமா தயாரிக்க தொடங்கினேன், அதனால் எனக்கு 100 கோடி கடன் இருக்கிறது என்று சுஜாதா விஜயகுமாரும் ஒரு பதிவு வெளியிட்டிருந்தார்.
ஆர்த்தி அறிக்கை
இப்படியான நிலையில் அந்த வாரத்தில் ஆர்த்தி மற்றும் ரவி மோகனின் விவாகரத்து விசாரணை வந்தது. அப்போது ஆர்த்தி தரப்பில் 40 லட்சம் ஜீவனாம்சம் தர உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் ரவி மோகன் தனக்கு எதிராக அவதூறு கருத்துக்களை தெரிவிக்க ஆர்த்தி மற்றும் அவருடைய அம்மா சுஜாதா விஜயகுமார் ஆகியோருக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
பதிவுகள் நீக்கம்
இந்த மனு விசாரணையின் போது ரவி மோகன் மற்றும் ஆர்த்தி இருவரும் அவதூறு கருத்துக்களை தெரிவிக்கும் வகையில் இனி அறிக்கை வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிமன்றம் ஏற்கனவே வெளியிட்டு அறிக்கைகளை நீக்க வேண்டும் என்று அறிவுறுத்தியது. அதன்படி ரவி மோகன் தனது சமூக வலைதள பக்கங்களில் தான் போட்ட போஸ்ட்களை நீக்கி இருந்தார். ஆனால் ஆர்த்தி நீக்காமல் இருந்திருக்கிறார்.
லீகல் நோட்டீஸ்
இந்த நிலையில் ரவி மோகன் ஆர்த்தி மற்றும் அவரது தாயார் சுஜாதா விஜயகுமார் ஆகியோருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார். அதில், "தன்னை பற்றி அனைத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ள அவதூறு கருத்துக்களை 24 மணி நேரத்தில் நீக்க வேண்டும் என்றும் நீக்கவில்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது" அந்த நோட்டீசை ரவி மோகன் நேற்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். அதைத்தொடர்ந்து ஆர்த்தி ரவி மற்றும் சுஜாதா இருவரும் ரவி மோகன் பற்றிய அறிக்கையை டெலிட் செய்திருக்கிறார்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications