ஜீ தமிழ் பஞ்சமி என்னுடைய தங்கச்சி தான்.. குழந்தைகளுக்கு மாமனாக இதை செய்ய போறேன்! சூரியின் பெருந்தன்மை

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜீ தமிழில் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட பஞ்சமி குறித்து நிகழ்ச்சியில் சூரி பேசியது வைரலாகி வருகிறது. பஞ்சமி கிராமத்தில் காட்டு வேலை செய்து கொண்டிருப்பவர். இப்போது தன்னுடைய டான்ஸ் திறமையால் ஜீ தமிழில் கலக்கி கொண்டிருக்கிறார். அவரை என்னுடைய தங்கச்சி என்று சூரி கூறி இருக்கிறார். அதோடு பஞ்சமியின் மூன்று மகன்களுக்கும் தாய்மாமாவாக சில விஷயங்களை செய்யப் போகிறேன் என்று அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.

நடிகர் சூரி ஆரம்பத்தில் பல்வேறு கஷ்டங்களை அனுபவித்திருந்தாலும் இன்று தன்னுடைய உழைப்பாலும் கடினமான முயற்சியாலும் புகழின் உச்சத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் தான் வந்த பாதையை மறக்காமல் அடிக்கடி அதுகுறித்து பேசிக் கொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் சாப்பாட்டுக்காக எவ்வளவு கஷ்டப்பட்டேன், சினிமாவில் ஒரு சின்ன வாய்ப்பு கிடைப்பதற்காக எவ்வளவு அவமானங்களையும், கஷ்டங்களையும் தாங்கினேன் என்று சூரி பல இடங்களில் பேசி இருக்கிறார்.

Soori Dance Jodi Dance ZeeTamil

மாமன் திரைப்படம்

அதேபோல சமீபத்தில் அவர் நடித்த மாமன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. இந்த திரைப்படத்தின் பிரமோஷனுக்காக ஜீ தமிழில் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சூரி கலந்து கொண்டார். அப்போது அந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் பஞ்சமியின் டான்ஸை பார்த்து கண்கலங்கிவிட்டார்.

டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் சூரி

பஞ்சமியின் குடும்பத்தில் அவருடைய தந்தையின் இறப்பிற்கு பிறகு அதிகமாக கஷ்டம் இருந்ததால் சிறு வயதிலேயே அவருக்கு திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள். அவருக்கு இப்போது 25 வயதாகிறது. அவருக்கு மூன்று ஆண் குழந்தைகள் இருக்கிறார்கள். ஆனாலும் பஞ்சமியின் கணவர் பஞ்சமி டான்ஸ் கனவை நிறைவேற்றுவதற்காக குடும்பம் மற்றும் ஊரின் எதிர்ப்பையும் மீறி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வைத்திருக்கிறார்.

ஜீ தமிழ் நிகழ்ச்சியில் சூரி

இதுகுறித்து நேற்றைய நிகழ்ச்சியில் சூரி பாராட்டி பேசி இருந்தார். எங்க படத்துல கூட ஒரு டயலாக் வரும் கடவுளுக்கு அப்புறம் மனைவின்னு சொல்லுவாங்க, ஆனா மனைவியே கடவுள் தான் என்று எங்கள் இயக்குனர் டயலாக் வச்சிருக்கறாரு. அதே போல தான் உன்னுடைய கணவரும். கணவருக்கு பிறகு தான் கடவுள். மனைவியின் ஆசைக்காக அவர் ஊரில் அவ்வளவு கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறார்.

போட்டியாளருக்காக சூரி செய்த உதவி

உன்னுடைய குடும்பத்தில் எந்த பெரிய பின்பலமும் கிடையாது. அன்றாட வேலை அதுவும் காட்டு வேலை செய்துதான் குடும்பத்தை கவனித்துக் கொண்டிருக்கிறீர்கள். ஆனாலும் உன்னுடைய திறமையைால், நீ ஜெயிக்க வேண்டும் என்று உன்னுடைய கணவர் பல கஷ்டங்களை தாங்கிக் கொண்டிருக்கிறார். அந்த தம்பிக்கு என்னுடைய வாழ்த்துக்கள். உன்னுடைய குழந்தைகளுக்கு காது குத்தியாச்சா? என்று சூரி கேக்க, அதற்கு பஞ்சமி இல்லை அண்ணா என்று சொல்லி இருந்தார்.

Soori Dance Jodi Dance ZeeTamil

சூரி சொன்ன வார்த்தை

அதற்கு உன்னுடைய மூன்று மகன்களின் காது குத்து செலவை நான் ஏற்றுக் கொள்கிறேன். அவங்களுக்கு நான் தான் இனி மாமன். அவர்களுடைய படிப்பு செலவையும் நான் ஏற்றுக்கொள்கிறேன் என்று சொன்னதும் பஞ்சமி சூரியின் காலில் விழுந்து நன்றி சொல்லி இருந்தார். அதற்கு சூரி பொண்ணுங்க யாருடைய காலிலும் விழவே கூடாது, அது போல எந்த சூழ்நிலையில் குழந்தைகளையும் படிப்பை மட்டும் விட்டு விடாதே நாங்கள் இருக்கிறோம் என்று சூரி தைரியம் கொடுத்து இருந்தார்.

பாராட்டு

ஏற்கனவே இந்த நிகழ்ச்சியின் மூலமாக பஞ்சமி மற்றும் அவருடைய குடும்பத்திற்கு நடிகை வரலட்சுமி மற்றும் அவருடைய அப்பாவான சரத்குமார் குடும்பத்தினரும் பல்வேறு உதவிகள் செய்திருக்கிறார்கள். இப்போது சூரி பஞ்சமியின் மகன்களுக்காக செய்த உதவிக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+