நடிகர் தலைவாசல் விஜய்யின் வருங்கால மருமகன் பிரபல கிரிக்கெட் வீரரா? இணையத்தில் கசிந்த ரகசியங்கள்

நடிகர் தலைவாசல் விஜய் மகள் நீச்சல் வீராங்கனையாக இருக்கும் நிலையில் தமிழக கிரிக்கெட் வீரரான பாபா அபராஜித் என்பவரை திருமணம் செய்ய இருப்பதாக தகவல்கள் பரவி வருகிறது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: திரைப்படங்களிலும் சீரியலிலும் நடித்து பிரபலமான நடிகர் தலைவாசல் விஜயின் மகளுடைய திருமணம் விரைவில் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

சமீபத்தில் நடிகர் தலைவாசல் விஜயின் மகளுக்கு கிரிக்கெட் வீரர் அபராஜித் என்பவரோடு என்கேஜ்மென்ட் முடிந்து இருக்கிறது.

தலைவாசல் விஜய்யின் மகளும் நீச்சல் வீராங்கனையாக சமீபத்தில் நேபாள நாட்டின் தலைநகர் காத்மெண்டுவில் நடைபெற்ற தெற்காசிய நீச்சல் போட்டியில் கலந்து கொண்டிருக்கிறாராம்.

ஹிட் திரைப்படங்களில் நடிப்பு

ஹிட் திரைப்படங்களில் நடிப்பு

நடிகர் தலைவாசல் விஜய், தமிழ், மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளில் திரைப்படங்களிலும் சீரியல்களிலும் நடித்திருக்கிறார். 1992 ஆம் ஆண்டு தலைவாசல் என்ற திரைப்படத்தில் மூலம் இவர் நடித்து பிரபலம் அடைந்ததால் அந்தப் பெயரையே தன்னுடைய பெயருக்கு முன்பாக சேர்த்து இருக்கிறார். முதல் திரைப்படத்தில் இவர் ஒரு பாடகராக அறிமுகமாகி அதற்குப் பிறகு தேவர்மகன் திரைப்படத்தில் கமலின் சகோதரனாகவும், மகாநதி திரைப்படத்தில் கமலின் மகனை தத்தெடுத்தவராகவும் ,மகளிர் மட்டும் விஷ்ணுந கருவேலம் பூக்கள், காதல் கோட்டை, காதலுக்கு மரியாதை என பல ஹிட் திரைப்படங்களில் முக்கியமான கேரக்டரில் இவர் நடித்திருக்கிறார்.

மறக்க முடியாத பாடல்கள்

மறக்க முடியாத பாடல்கள்

200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார். அது மட்டும் அல்லாமல் பல திரைப்படங்களுக்கான விருதுகளையும் வாங்கி இருக்கிறார். இவர் நடிக்க வந்த 25 ஆண்டுகளில் குணச்சித்திர கேரக்டர் மட்டுமின்றி வில்லன் கேரக்டரிலும் இவர் அசத்தியிருக்கிறார். குறிப்பாக இவர் நடிகர் அஜித் நடித்த உன்னை நினைத்து எனும் திரைப்படத்தில் கவலைப்படாதே சகோதரா எனும் பாடல் மூலமாக மனதை வென்ற இவருடைய டான்ஸும், பெர்ஃபார்மென்ஸும் இப்ப வரைக்கும் ரசிகர்களால் பாராட்டப்படுகிறது.

நடிகர் தலைவாசல் விஜய்யின் மகள்

நடிகர் தலைவாசல் விஜய்யின் மகள்

இந்த நிலையில் தலைவாசல் விஜயின் மகள் ஜெயவீனா ஒரு நீச்சல் வீராங்கனை என்பது பலருக்கும் தெரியாத ரகசியம்தான். இவர் சமீபத்தில் நேபாள நாட்டில் தலைநகர் காத்மெண்டுவில் நடந்த தெற்காசிய நீச்சல் போட்டியில் கலந்து கொண்டு இருக்கிறார். இந்த நிலையில் தலைவாசல் விஜய் மகள் ஜெயவீனா தமிழக கிரிக்கெட் வீரரான பாபா அபராசிக் என்பவரை திருமணம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

கிரிக்கெட் வீரர் மருமகன்

கிரிக்கெட் வீரர் மருமகன்

தமிழ்நாட்டை சேர்த்த பாபா அபராதத் ரஞ்சிக்கோப்பை காக தமிழ்நாட்டின் அணிக்காக விளையாடியவர் என்பதும் அதற்கு பின்பு 19 வயதுக்குட்பட்ட உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்காக விளையாடியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது இந்திய ஏ அணியின் சிறந்த ஆல்ரவுண்டராக இருந்து வருகிறாராராம். இந்த நிலையில் பாபா அபராஜித் மற்றும் ஜேயவினா நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடந்துள்ளதாகவும், விரைவில் இவர்களின் திருமண தேதி அறிவிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. தற்போது சமூக வலைத்தளத்தில் நடிகர் தலைவாசல் விஜய்யின் குடும்ப புகைப்படங்கள் ரசிகர்கள் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

சீரியலிலும் நடிப்பு

சீரியலிலும் நடிப்பு

தலைவாசல் விஜய் திரைப்படங்களில் மட்டுமல்லாமல் சன் டிவி சீரியல்களிலும் நடித்திருக்கிறார். குறிப்பாக அழகு சீரியலில் இவருடைய நடிப்பை பலர் பாராட்டி இவர் ஏன் மீண்டும் சீரியலுக்கு வரவில்லை என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். அது மட்டும் அல்லாமல் ராஜ் டிவியில் ஒளிபரப்பான கங்கா யமுனா சரஸ்வதி சீரியலிலும் இவர் நடித்திருக்கிறார். வெள்ளி திரையில் மட்டுமல்லாமல் சின்ன திரையிலும் தன்னுடைய யதார்த்தமான நடிப்பை காட்டி ரசிகர்களை மகிழ்வித்து வரும் இவருடைய குடும்பத்திற்கு புதியதாக கிரிக்கெட் வீரர் மருமகனாக வருவதை குறித்து ரசிகர்கள் பலர் பாராட்டியும் வாழ்த்தியும் வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+