நடிகர் விமலிடம் இப்படி கேட்கிறது தப்பு! தாழ்த்தி கொள்ள வாய்ப்பு கொடுக்காதீங்க! ப்ளூசட்டை மாறன் ஆதங்கம்
சென்னை: நடிகர் விமல் சினிமாவில் அறிமுகமான காலகட்டத்தில் அறிமுகமான சூரி மற்றும் சிவகார்த்திகேயன் போல விமலால் மாற முடியாத காரணம் பற்றி சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதோடு அவர்களுடைய வெற்றியை பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க என்ற கேள்வியும் விமலிடம் வைக்கப்படுகிறது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் விமலுக்கு ஆதரவாக ப்ளூசட்டை மாறன் பதிவு வெளியிட்டு இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் இயக்குநர் பாண்டியராஜின் 'பசங்க' படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் விமல். முதல் படமே இவருக்கு வெற்றியானது. அதற்குபிறகு களவாணி, கலகலப்பு, கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜானு அடுத்தடுத்து வெற்றிக் படங்களை கொடுத்து ரசிகர்கள் மத்தியில் ரொம்பவே பிரபலமானார். 2022-ல வந்த 'விலங்கு' வெப் சீரிஸும் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால், அதற்க்கு பிறகு அவர் நடித்த படங்கள் பெரிய அளவில் வெற்றி அடையவில்லை.

விமல் சினிமாவுக்கு வந்த அதே சமயத்துல தான் நடிகர்கள் சிவகார்த்திகேயன், சூரி போன்றவர்களும் தங்களோட திரைப் பயணத்தில் வளர்ந்தாங்க. இப்போ சிவகார்த்திகேயன் முன்னணி நடிகராகவும், சூரி 'விடுதலை' படத்துக்கு பிறகு அடுத்தடுத்து வெற்றிக் படங்களைக் கொடுத்தும் வளர்ந்து வந்திருக்காங்க.
இதனால், நடிகர் விமல்கிட்ட பேட்டி எடுக்கிற பெரும்பாலான ஊடகங்கள் தொடர்ந்து ஒரே கேள்வியைத் தான் கேட்டுட்டு வராங்க: "உங்கூட நடிக்க வந்த சிவகார்த்திகேயன், சூரி ஆகியோரின் வளர்ச்சி பற்றி என்ன நினைக்கிறீங்க?"ங்கிற இந்தக் கேள்விதான் விமலோட தோல்விகளைத் தொடர்ந்து சுட்டிக்காட்டுற மாதிரி அமையுது.
ஆனாலும், விமல் எந்த கோபமும் இல்லாம ரொம்பவே அமைதியாகவும், இயல்பாகவும் பதில் சொல்லிட்டு வர்றார் (சமீபத்தில் ஒரு பேட்டியில் அவர் சூரி பற்றி கொடுத்த பதில்கள் வைரலாகி வருது). இந்த வகையான விமர்சனங்கள் சமூக வலைதளத்துல விமலுக்கு பெரிய பேச்சுப் பொருளா மாறி வருது.
புதிய படம் - மகாசேனா
விமல் இப்போ தினேஷ் கலைச்செல்வன் இயக்கத்தில் மகாசேனா படத்துல் நடிச்சிருக்கார். இந்தப் படம் பழங்குடி மக்களின் வாழ்க்கையை மையமா வைத்து எடுக்கப்பட்டிருக்கு. இந்தப் படம் வரும் 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக போகுது.
விமலுக்கு ஆதரவாக குரல் கொடுத்தப் ப்ளூ சட்டை மாறன்
'மகாசேனா' படத்தோட வெளியீட்டை முன்னிட்டு விமல் ஒரு ஊடகத்துக்கு கொடுத்த பேட்டியில், தொகுப்பாளினி கேட்ட கேள்விகளும், அதுக்கு விமல் பதிலளித்த விதமும் சமூக வலைதளத்தில் திரும்பவும் சர்ச்சையாச்சு. நீங்க கதாநாயகனாகும் முன்பு துணை நடிகரா பல படங்களில் நடிச்சீங்க.. உங்களை மாதிரி நடித்து வந்த சூரி இப்போ புகழின் உச்சத்துக்கு மாறிட்டாரு, அதை பார்க்கும்போது உங்களுக்கு என்ன தோணுது என்று கேட்டிருந்தார். அதற்கு விமல் எனக்கு ஒன்னும் தோணல அவர் அவருடைய உழைப்பால் உயர்ந்து இருக்கிறார் என்று பதில் கொடுத்திருந்தார்.
இதையெல்லாம் பார்த்தப் பின்தான், திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் விமலுக்கு ஆதரவு தெரிவித்து தனது சமூக வலைதளப் பக்கத்துல ஒரு பதிவு போட்டிருக்கார். "இதுபோன்ற கேள்விகளை வேற சில மூத்த நடிகர்களிடம் கேட்கத் துணிவு இருக்காது. அப்படியே அவர்கள் கேட்டாலும் பிரபல நடிகர்கள் எழுந்து வெளியே போய்விடுவார்கள்.
வெற்றி, தோல்விகளை மட்டும் மனசுல வைத்து பேட்டி எடுக்க கூடாது. விமல், உங்களைத் தாழ்த்திக் கொள்வதற்கு நீங்களே வாய்ப்பளிக்காதீங்க" என்று அவர் பதிவுப் போட்டிருக்கார். சினிமாத் துறையில் ஜெயிக்கிறதும், தோல்வி அடைவதும் சாதாரணமா இருந்தாலும், ஒரு நடிகரோட தனிப்பட்ட திறமையை மட்டும் மதிக்காம வெற்றியை பற்றி பேசுறது எந்தளவுக்குச் சரிங்கிற விவாதம் இப்ப பெருசாக போயிட்டு இருக்கு. நடிகர் விமல் தனது அடுத்தப் படத்தின் மூலம் இந்த எதிர்மறைக் கருத்துகளுக்கு பதில் சொல்லுவாரான்னு ரசிகர்கள் காத்துட்டு இருக்காங்க.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications