Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரசிகர் கல்யாணத்திற்கு தாலி எடுத்துக் கொடுத்த விஷால்... விஜயகாந்த் ஆக மாறிட்டாரே! பாராட்டும் நெட்டிசன்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் விஷால் தன்னுடைய ரசிகர் ஒருவரின் திருமண பங்க்ஷனில் கலந்து கொண்டு தாலி எடுத்துக் கொடுத்து ஆசீர்வாதம் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை பார்க்கும் ரசிகர்கள் சிலர் விஷால் விஜயகாந்த் போல மாறிவிட்டார் என்று கமெண்ட் கொடுத்து பாராட்டி வருகிறார்கள்.

நடிகர் சங்க தலைவராக இருக்கும் விஷால் ஒரு நடிகராக மட்டுமல்லாமல் இயக்குநராகவும் சில திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். சில மாதங்களுக்கு முன்பு அவருடைய திடீர் மாற்றம் தான் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்திருந்தது. பல வருடங்களுக்கு முன்பு விஷால் நடித்த மதகஜராஜா திரைப்படம் கலந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது அப்போது நடந்த பிரமோஷனில் விஷால் கலந்து கொண்ட கோலத்தைப் பார்த்ததும் ரசிகர்கள் ஐயோ இவருக்கு என்ன ஆச்சு? என்று பதறிப் போய் இருந்தனர்.

Vishal Vijayakanth Dhanushika

பரிதாப நிலை

கைகள் நடுங்க, கண்களில் இருந்து கண்ணீர் வடிந்து கொண்டிருக்க, பேச முடியாமல் தவித்துக் கொண்டிருந்த விஷாலின் நிலைமையை பார்த்ததும் இனி இவருடைய நிலைமை அவ்வளவுதானா? என்று சிலர் வருத்தத்தை பகிர்ந்து இருந்தனர். ஒரு சிலர் விஷால் அந்த பழக்கத்தினால் இப்படி ஆகிவிட்டார். இந்த பழக்கத்தினால் இப்படி ஆகிவிட்டார், அவரால் இனி பழைய மாதிரி வர முடியாது என்று எல்லாம் சொல்லி வந்தனர்.

விமர்சனங்களுக்கு பதிலடி

ஆனாலும் அடுத்த வாரம் பழைய நிலைக்கு திரும்பி கெத்தாக என்ட்ரி கொடுத்திருந்தார். அதுபோல கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் நடிகை தன்ஷிகாவை காதலிப்பதை அறிவித்து இருந்தார். அதோடு தன்னுடைய திருமணம் இன்னும் சில மாதத்தில் நடைபெறும் என்றும் கூறியிருந்தார். 40 வயதை கடந்துவிட்ட விஷாலுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லையே என்று பலர் கேள்வி எழுப்பி வந்த நிலையில் நடிகர் சங்கம் சார்பாக கட்டப்பட்டு வரும் பில்டிங் வேலை முடிந்ததும் அங்கு வைத்து தன்னுடைய திருமணம் நடக்கும் என்று விஷால் அறிவித்திருந்தார்.

நடிகர் விஷால் கொடுத்த அட்வைஸ்

இந்த நிலையில் விஷால் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தன்னுடைய ரசிகர் ஒருவர் திருமண பங்க்ஷனில் கலந்து கொண்டார். அப்போது விஷால்தான் தாலி எடுத்துக் கொடுத்து மணமக்களை வாழ்த்தி இருந்தார். அதோடு தாலியை மாப்பிள்ளை கையில் கொடுத்ததும் எமோஷனலாகி இருந்தார். நான் அடிக்கடி போன் செய்து அந்த பொண்ணு கிட்ட விசாரிச்சிட்டு இருப்பேன். நீ ஒழுங்கா நேரத்துக்கு வீட்டுக்கு வரணும்.

ரசிகர்களின் கருத்து

எந்த வம்பு தும்புக்கும் போகக்கூடாது அந்த பொண்ணை கண்கலங்காம சந்தோஷமா பார்த்துக்கணும். இதில் ஏதாவது தவறாக நடந்தா நானே வந்து உன்னை அடிப்பேன். அந்த பொண்ணுக்கு துணையா எப்பவும் நான் இருப்பேன் என்று விஷால் அப்போது பேசி இருக்கிறார். அதை இப்போது இணையத்தில் பகிர்ந்து வரும் ரசிகர்கள் விஷால் அப்படியே விஜயகாந்தாக மாறி அதிரடி காட்டிக் கொண்டிருக்கிறார் என்று கமெண்ட் வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+